மகிழன்: ஏய் என்னோட சட்டை எங்கடி?
மாயா: என் கிட்ட கேட்டா..? தெரியல! நீயே தேடிகோ!
மகிழன்: அடிங்க! என்னடி பொறுப்பே இல்லாம பேசிட்டு இருக்க..?!
மாயா: பின்ன உனக்கு சட்டை எடுத்து தர தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தேனா?!
மகிழன்: சரியான சைக்கோ டி நீ! சாடிஸ்ட்!
மாயா முறைத்தாள்
மகிழன்: அது இல்ல மேடம்! என்னோட செல்ல HR மேடம்! மாமா தெருத்தெருவாக போய் வேலை பார்க்குறேன்ல , ரொம்ப டயர்டா இருக்குது! அதுல தான் நேத்து நைட்டு கத்திட்டேன்! சாரி மேடம்! என்னோட அழகு மேடம்!
மாயா : ஓ..! டயர்ட்னா உனக்கு மட்டும்தானா?! நா எல்லாம் ஆபீஸ் போய் சும்மா பல்லை பல்லை காட்டியா வேலை பார்க்கிறேன்?!
மகிழன்: அது சரி! இரு நமக்கு தூரமா இருந்து பேச வரல, பக்கத்துல வந்து சாரி கேக்குறேன்!
மாயா: தேவையே இல்ல! நீ பக்கத்துல வந்தா என்ன எல்லாம் பேசுவன்னு எனக்கு நல்லாவே தெரியும்! மூடிட்டு அங்கேயே நில்லு!
மகிழன்: தோ பார்ரா! என்னோட பொண்டாட்டி! நா பக்கத்துல வந்து பேசுவேன், இல்ல கட்டி புடிச்சு பேசுவேன், இல்ல…. (மெல்ல அருகில் வந்தான்)
மாயா: கொன்றுவேன்! நேத்து நைட் அந்த கத்து கத்திட்டு, சும்மா செல்லம்,பல்லம்ன்னு! ஓடிடு! நல்லா ஆளும் மூஞ்சியும் பாரு! பைனாப்பிள் மண்டை! இந்தா உன் சட்டை கிளம்பு மொத!
மகிழன்: இது இல்ல வேற சட்டை!
மாயா: எரிச்சல் பண்ற நீ! இரு தேடுறேன்!

உன்ன நம்பி அம்மா அப்பா விட்டுட்டு வந்தேன் பாரு என் புத்தியை செருப்பால அடிக்கணும்! அப்பவே என் வீட்ல உன்னை வேணாம்னு சொன்னாங்க நான் தான் கேட்கல! எல்லாம் என் தப்பு தான்.
மகிழன்: ஆமா நான் மட்டும் அம்மா அப்பா கூடயா இருக்கேன்?! பாரு நீயே கதின்னு உன்னையே சுத்தி சுத்தி தான் வரேன்!
மாயா: யாரால இது எல்லாம்?
மகிழன்: என்னால தான். எல்லாமே என்னால தான்! மன்னிச்சிடு! இங்கே வாயேன், கட்டிப்பிடி சாரி சொல்றேன், உடனே சரியாயிடுவ!
மாயா: இந்த இது தான் கடைசி சட்டை, கிளம்பு!
(சட்டை இழுக்கும் சாக்கில் அவளை இடையோடு இழுத்து அவன் மூச்சு காற்று அவள் காதில் மட்டும் படும் படி பாட ஆரம்பித்தான்)
மகிழன்: தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும் மிகப்பிடித்த பாடலொன்றை உதடுகளும் முணுமுணுக்கும்! சாரிடி கண்ணம்மா..! மன்னிச்சுடு!
அவள் ஏதும் பேசாமல் நின்றாள்! பாவம் அவளால் மட்டும் என்ன பேச முடியும்?! அவன் சூடான மூச்சு காற்று! காதுக்கும் கழுத்துக்கும் நடுவில் குத்துகிற அவன் மீசையும் தாடியும்! அவனது குரலில் இருக்கும் எதோ மயக்கம்! அவளை ஒரு நிமிஷம் உலகத்தையே மறக்கடிக்க செய்தது!
மகிழன்: என்னடி பேச்சையே காணோம்?! சமாதானம்மா?!
மாயா: (ஐயோ இன்னைக்கு விட்டா அவ்ளோதான்! இந்த நிமிடம் அப்படியே உறையாதான்னு ஆசைப்பட்டு, கண்ணாடியில் பிம்பத்தை ஒரு முறை ஆசை தீர பார்த்துக்கொண்டு, அடுத்த வினாடியில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமல் அவனை தள்ளி விட்டாள்!) எல்லாம் சரி! அடுத்த வரி தெரியுமா?! தெரியாது தான?! வாழ்க்கையும் அப்படி தான் போகுது, அடுத்து என்னன்னு தெரியாம!
மகிழன்: ரைட்டு! அடுத்த வரி தெரியாது தான், ஒத்துக்குறேன்! ஆபீஸ்க்கு வேற நேரமாகுது! இறுக்கி அணைச்சு ஒரே ஒரு உம்மாக்கு தான் வழி இல்லாமல் பண்ணிட்ட! மழை அடிச்சாலும் பரவால்ல, தூரமா நின்னு ஒரே ஒரு பறக்குற உம்மா?! ப்ளீஸ் ப்ளீஸ்..!
மாயா:(உள்ளே உருகினாள்! ஆனால் வெளியே காமிச்சா அவ்ளோதான்! அவனை வலிக்கு கொண்டு வர முடியாதே! ராத்திரி வந்தா ஏதாவுது பேசி இல்ல பாடி மயக்கிறுவான்! பைத்தியம்! இப்போவே பேசிடலாம்! ) கெளம்பு! தயவுசெஞ்சு போறியா டென்ஷன் பண்ணாம!
மகிழன் : சரி! இங்க பாரு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது! எனக்கு புரியுது நமக்கு வீடு வேணும்னு, ஆனா கொஞ்சம் வாழ்க்கையில செட்டில் ஆகலாம், ஒரு கூடுதல் இன்கம் வரட்டும்; கொஞ்சம் டைம் கொடு. ப்ளீஸ் டி..!
மாயா: இல்ல எனக்கு வீடு வேணும்! நானே EMI கட்டிக்கிறேன், என்னால வாடகை வீட்டுல இருக்க முடியாது. எனக்கு சொந்த வீடு வேணும்,எனக்கு இங்க பிடிக்கவே இல்லை! எதோ ஒரு மாதிரியே இருக்கு!
மகிழன்:சரி நைட் பேசிக்கலாம்!
மாயா: இதைத்தான் ஆறு மாசமா சொல்ற! டெய்லி நைட் வந்து பேசினால், சண்டை போடுற! காலையில மழை அடிக்கும், வெயில் அடிக்கும்ன்னு பாட்டு பாடுற! எக்கேடோ கெட்டுப் போ! போய் தெருத்தெருவாக சுத்து!
மகிழன்: சரி பாய்! ஐ லவ் யூ, டூ!
மாயா: மூடிட்டு போடா! நைட் மட்டும் பேசாம இரு அப்புறம் இருக்கு! பாய்!
அன்று இரவு தூங்கும் போது நடுவில் தலையணை வைத்தாள்.
மகிழன்:என்னது இது ?!
மாயா: தள்ளி படு!
மகிழன்: அடியேய் புருஷன் டி நானு!
மாயா: அதனால ?
மகிழன்: இதெல்லாம் பாவோம் டி! இந்த மாதிரி பட்டினி போடாத டி! புருஷன் பாவோம்!
மாயா: முதல்ல வீடு! அப்புறம் தான் மீதி!
மகிழன்: சாட்டிஸ்ட்! ப்ளீஸ் ?!
மாயா: NO
மகிழன்: சரி தான்! NO means NO!அது தான? புரிஞ்சது!
சிறிது நேரத்தில்!
மகிழன்: ஓய் பொண்டாட்டி, நாளைக்கு லீவு போடு! ஒரு இடத்துக்கு போலாம்!
மாயா: வேலை இருக்கு எனக்கு! உன் இஷ்டத்துக்கு எல்லாம் லீவு போட முடியாது!
மகிழன்: நீதானே வீடு வீடுன்னு சொன்ன?! வா நாளைக்கு வீடு பாக்க போலாம்!
மாயா: நிஜமாவா? (பக்கத்தில் வந்தாள்)
மகிழன்: சத்தியமா டி!
மாயா: சூப்பர் டா நீ!
மகிழன்: அப்போ இந்த தலையணை ?
மாயா: எனக்கு வேண்டாம்! உனக்கு வேணும்ன்னா வச்சிக்கோ!
மகிழன்: தலையணை மட்டும் இல்ல, இந்த புடைவையும் தான் இடிக்கிது! மாமா பாத்துக்குறேன்! நீங்க மௌனம் சம்மதம்ன்னு மட்டும் இருங்க போதும்!
மாயா: போடா பொறுக்கி!
அடுத்த நாள் காலை
மாயா: நான் ரெடி போலாமா?!
மகிழன்: சரி போகலாம்! அதுக்கு முன்னாடி, இந்தா இந்த துணிய கண்ணுல கட்டு!
மாயா: எதுக்கு?!
மகிழன்: சப்ரைஸ் டி! சரி கார்ல ஏறு! நான் உனக்கு ஒரு கதை சொல்லுறேன்!
மாயா: பார்ரா! சரி சொல்லு!
மகிழன்: நேத்து ஒரு கிளையன்ட் பார்க்க போனேன்! போனா அந்த மனுஷனை பார்த்தா ரொம்ப பெரிய ஆளு, நல்ல மனுஷன், ஒரு 55 – 60 வயசு இருக்கும், வீட்லதான் போய் பார்த்தேன்!
மாயா: ஓ! அவர் வீட்டை விற்க போறாரா? அத தான் பார்க்க போறோமா ?!
மகிழன்: ஐயோ, என் அழகு ரதியே கொஞ்சம் வாயை மூடிட்டு கதையை கேளு!
மாயா:சரி சரி சொல்லு!
மகிழன்: அவர் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு, நல்ல பணக்கார மாப்பிள்ளை தான், நல்லா ஃபாரின்ல செட்டில் ஆயிட்டா, எல்லா பசங்களையும் செட்டில் பண்ணிட்டாரு! பேரன் பேத்தி எடுத்தாச்சு!
மகிழன்: பாரேன்! சூப்பர் தான்!
மகிழன்: ஆனா, அவர்கிட்ட பேசும்போது அடிக்கடி அவர் சொல்லிட்டே இருப்பார் அவ இல்லாம என் வீடு வீடாவே இல்ல, என் பொண்ணு இருந்தா தான் வீடு வீடா இருக்கும்ன்னு! அப்பதான் இந்த மரமண்டைக்கு புரிஞ்சது!
மாயா:என்னது?
மகிழன்: இப்ப கண்ண தொறந்து பாரு!
மாயா: இது… இது என் வீடு ஆச்சே!
மகிழன்: ஆமா..! வா உள்ளே போலாம்.
மாயா: ஆனா..!
( அதற்குள் அவள் அம்மாவும் அப்பாவும் ஓடி வந்து அவளை கட்டி அணைத்தார்கள்)
அப்பா: இப்ப வாச்சும் எங்களை பார்க்கணும்னு தோணுச்சே! எத்தனை நாள் நீ வந்துர மாட்டியான்னு வாசலையே பாத்திட்டு இருந்தோம் தெரியுமா?
(அவளுக்கு எங்கிருந்து அவளோ அழுகையும் சந்தோஷமும் வந்ததது என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்! )
அம்மா: உ ள்ள வா டி! நீங்களும்தான் மாப்பிள உள்ள வாங்க! இது நம்ம வீடு!
அவர்கள் இருவரும் உள்ளே சென்றபின்..!
மகிழன் பின்னாடி இருந்து குரல் கொடுத்தான் ..!
மகிழன்: ஓய் பொண்டாட்டி!
வாச கதவினில் நின்று திரும்பிப் பார்த்தாள்..
மகிழன்: மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்;
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன்…! சரியா பாடினேனா?! புடிச்சிருக்கா வீடு?!
ஓடி வந்து கட்டி அணைத்தாள்..!
மகிழன்:அம்மு, கூடிய சீக்கிரத்துல நமக்குனு ஒரு வீடு வாங்கிட்டு போயிடலாம் அதுக்கு முன்னாடி நீ கேட்ட அந்த வீடு..! என்ன இப்பதான் எனக்கு புரிஞ்சது..!
மாயா: சாரி! தேங்க்ஸ்!
மகிழன்:ஆறு மாசமா இதுதான் பண்ணிட்டு இருந்தேன். இருந்தாலும் உங்க அப்பன் ரொம்ப முரட்டு பீஸ், எவளோ கெஞ்ச வேண்டி இருக்கு! என்கிட்ட முறைக்கிறான் உன்ன பாத்த உடனே கண்ணுல அருவியாய் கொட்டுது!
மாயா: அப்பாவ திட்டாத! பாவம் டா அவரு! ஆனாலும் மாமா எப்படி டா இதெல்லாம்?
மகிழன்: ஓய், என்னனு நினைச்ச மாமனை பத்தி ?! அய்யா கில்லி டி!
மாயா: ஐ லவ் யு, ஐ லவ் யு, ஐ லவ் யுயுயுயு..!
மகிழன்: பாரேன்! எல்லாம் இருக்கட்டும் 10 மாசத்துல கைல ஒன்னு கொடு நானும் கொஞ்சம் மந்தகாசம் சிந்துறேன் என் வீட்ல! “with consent ” தான் டி என் பெமினிஸ்ட் பொண்டாட்டியே!
மாயா: ஒன்னு என்ன? பத்து பெத்து தரேன்!
மகிழன்: ஐயோ டா! பாரேன்! HR மேடம் சொன்னா சரி தான்!
மாயா: உன்கிட்ட போய் சொன்னேன் பாரு! என்ன சொல்லணும்!
மகிழன்: சரி வா, கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆக போது, இன்னும் உங்கப்பன் என்ன முறைக்கிறான் பாரு! சாட்டிஸ்ட் குடும்பம் போல டி நீங்க!
(பொய் கோபத்துடன் நாலு செல்ல அடி அடித்தாள்)
மகிழன்: அடிக்காத டி! சாட்டிஸ்ட்! ஐ லவ் யு! இப்போவும் எப்போவும்!
மாயா: நானும் தான்!
0 Comments