ராதா: ஒரு நிமிஷம் உன் கிட்ட பேசணும்..!
நட்சத்திரா: (இது என்ன இப்போ) சொல்லுங்க மேம்..!
ராதா: இல்ல எனக்கு இனியன பிடிச்சிருக்கு..! அவருக்கும் என்ன ரொம்ப புடிக்கும்..! ஆனா சொல்ல வரல..!
நட்சத்திரா: என்னது…?!
அத்தியாயம் 16 – நினைத்தாலே இனிக்கும்
ராதா: ஆமா மா..! சொல்ல கூச்சம்மா தான் இருக்கு..! ஆனாலும் அதான் உண்மை..!
நட்சத்திரா: அவருக்கு உங்களை புடிச்சிருக்கா..?! இத எப்படி கண்டுபிடிச்சீங்க..?!
ராதா: பின்ன இந்தப் பக்கம் அவருக்கு தான் வேலையே இல்லை..! ஆனாலும் நான் இருக்கேன்னு, என்ன பார்க்க அடிக்கடி வருவார்..! நீயே எத்தனை தடவை பார்த்திருக்க..!
நட்சத்திரா: (அடப் பைத்தியக்காரி..! அது என்னப் பாக்க; உன்கிட்ட சொன்னாலும் புரியாது..) சரி ரைட், இப்ப நான் என்ன பண்ணனும்..?!
ராதா: ஒன்னும் இல்லம்மா நீ அவர்கிட்ட என்ன பத்தி எடுத்துச் சொல்லணும்; கொஞ்சம் அவர் மனசுல என்ன பதிய வைக்கணும்; அவ்வளவு தான்..!
நட்சத்திரா: அவ்வளோதான..! சரி பண்ணிடுரேன்..!
(சுர்ர்ர்ர்னு ஏறிய கோபத்துடன் அடுத்த அரை மணி நேரத்தில் ரயில் நிலையத்தில்..)
இனியன்: ஏய், என்ன ஆச்சு…?! லேப் எப்படி போச்சு..?!
(அவள் முறைத்தாள்… ஆனால் இனியன் பேசுவதை நிறுத்தவில்லை)
இனியன்: என்ன டி லேப் போச்சா..?! நான் வேணும்னா ராதாக் கிட்ட பாஸ் போட சொல்லவா..?!
(அடுத்த ஒரு வினாடியில் பளீர்னு ஒரு சத்தம், நட்சத்திரா, ஓங்கி செவுல்லை சேர்த்து ஒன்று வைத்தாள், மொத்த ரயில் நிலையம் கேட்கும்படி..! இனியன் கண்களும் சிவந்தது..)
நட்சத்திரா: நம்ம பிரிஞ்சிடலாம்..!
இனியன்: அட இரு டி..! அடிச்சதே தலை சுத்துது; அதுக்குள்ள அடுத்த குண்டா..?! கொஞ்ச நேரம் கழிச்சு போடு..!
நட்சத்திரா: விளையாட்டா இருக்கா எல்லாமே..?!
இனியன்: என்ன தாண்டி ஆச்சு; உன்ன எவளோ மண்டை காய விட்டதுக்கு; நீ ஏன் டி என் தலையை உருட்டுற..?!
நட்சத்திரா: வேண்டுதல்.! உன் ஆளு தான் அனுப்பி விட்டா..!
இனியன்: இது என்ன டி புதுசா..?! சத்தியமா நீ தான் டி எல்லாமே..!
நட்சத்திரா: நடிக்காதடா..! இப்ப கூட போன் போடுவேனு சொன்னியே..!
இனியன்: ஆத்தி.. அம்மா தாயே..! ஊர் ஊரா போற மாரியாத்தா; என் மேல ஏறு ஆத்தானு கதையா போச்சே..! சாமி..! எனக்கு எதுவும் தெரியாது..! அறியா புள்ள மன்னிச்சிடு மா..!
நட்சத்திரா: நடிக்காதடா..!
இனியன்: ஐயோ சத்தியமா இல்லை..! உனக்கு ஒன்னு தெரியுமா; உன் மேல சத்தியமா உன்ன மட்டும் தான்டி லவ் பண்றேன்..!
நட்சத்திரா: அப்ப அவ உதவிக் கேட்டா..! உன் கூட சேர்த்து வைக்க..!
இனியன்: அந்த குட்டச்சி, வேற ஆளே இல்லாத மாதிரி உன் கிட்ட கேட்டு இருக்கா பாரு..! என் வாழ்க்கையில விளையாடவே எல்லாமே வருது..! ஆண்டவா..!
நட்சத்திரா: உன்னால தான் எல்லாமே..! சேலையில முள்ளுப் பட்டாலும்; முள்ளுல சேலைப் பட்டாலும் சேலைக்கு தான் பாதிப்பு…!
இனியன்: இதுல யாரு சேலை; யாரு முள்ளு…?!
நட்சத்திரா: நீ தாண்டா சேலை..! மத்த எல்லாரும் முள்ளு..!
இனியன்: ஆமா, முள்ளு நொள்ளுன்னு..! இதெல்லாம் வக்கனையாக பேசு..! அங்கேயே முடியாது என்று சொல்ல வேண்டியது தான.!
நட்சத்திரா: அப்போ லேப் மார்க் போட மாட்டா..!
இனியன்: இதுல மட்டும் தெளிவா இரு..! சண்டாள சிறுக்கி யார் என்ன பண்ணாலும் நான் தான் சிக்குறேன்..!
நட்சத்திரா: ஐய.! ஆளும் மூஞ்சியும் பாரு..! நான் போறேன் வீட்டுக்கு..!
இனியன்: பார்த்து போடி; அங்க எவனையாவது அடிக்காத..! என்ன மாறி வாங்கிட்டு நிற்க மாட்டான்..!
நட்சத்திரா: சரிதான் போடா..!
அன்று இரவு
இனியன்: சரி நம்ம நாளைக்கு இரண்டு பேரும் ஒரே கலரில டிரேஸ் போட்டு வரலாமா..?!
நட்சத்திரா: என்கிட்ட ஏன் கேட்குற..?! போய் உன் ஆளு கிட்ட கேளு..!
இனியன்: எனக்கு உன்ன மட்டும் தான் டி புடிக்கும்..! நம்பு மா..!
நட்சத்திரா: சரி விடு..!
இனியன்: சரி சொல்லுங்க பாப்பா, நீங்க என்ன கலர் டிரஸ் போட்டு வரீங்க..?!
நட்சத்திரா: நான் பர்பிள் கலர் போட்டு வரேன்..!
இனியன்: அப்படின்னா என்ன..?! நீலமா..இல்ல ஊதாவா..?!
(ஆண்களுக்கு ஏன் தான் இந்த வண்ண பிரச்சனையோ.! ஒருவேளை அவர்களுக்கு இயற்கையாகவே வண்ண வேறுபாடு தெரியாதோ..!)
நட்சத்திரா: விளங்கிடும்..!
இனியன்: அடியே சொல்லித்தாடி..! உன்ன விட்டா, எனக்கு யாரு இருக்கா சொல்லித்தர..?!
நட்சத்திரா: இப்படியே நடிச்சிரு..! நான் போட்டோ அனுப்புறேன்..!
இனியன்: ஆமா அப்படியே நான் நடிச்சிட்டாலும்..! அத நீ நம்பிட்டாலும்..! உண்மைய சொன்னாலே நம்ப மாட்ட..! இதுல நடிச்சா அவளோதான்..!
நட்சத்திரா: சரி சரி..! நாளைக்கு நேர்ல பேசிக்கலாம்..!
அடுத்த நாள்..!
ராதா: என்ன ஆச்சு..?! பேசினியா..?! என்ன சொன்னாரு..?!
நட்சத்திரா: அது வந்து..!
(அதற்குள் தூரத்திலிருந்து இனியன் ஓடிவந்தார், மூச்சு வாங்க)
இனியன்: இங்க என்ன பேசிட்டு இருக்க..! என் லேப் முதல்ல முடிச்சியா..?!
நட்சத்திரா: இல்ல ராதா மேம் கூப்பிட்டாங்க..! அதான்..!
இனியன்: அப்படியே நாலு போட்டேனா…!
ராதா: திட்டாதீங்க சார்..! நான் தான் கூப்பிட்டேன்..!
இனியன்: அதுக்கு..! என் சப்ஜேக்ட் முடிக்காம, இங்க வந்து பேசினா..?! அறிவு இல்ல உனக்கு..! இப்போவே லேப் போ..! இப்போவே.!
நட்சத்திரா: சரி சார்..!
ராதா: நம்ம அப்புறம் பேசலாம்..! நான் சொன்னத நீ மறந்துடாத..!
(லேப் வந்தவுடன்)

நட்சத்திரா: எதுக்குடா கத்தினா..?!
இனியன்: பின்ன..! அவளை பார்த்தாலே வாங்கின அடி சுல்லுன்னு நியாபகம் வருது..! திரும்ப வாங்க தெம்பு இல்ல சாமி..!
நட்சத்திரா: ஐய்ய..! மெதுவா தான் அடிச்சேன்..!
இனியன்: எப்படி..! இரண்டு உருண்ட தொண்டைக்கு வந்தது மெதுவான அடியா..?! கால்ல கூட விழுறேன்..! ஆனா அடிக்க மட்டும் செய்யாத..! அப்படியே மார்க்கெல்லாம் விழுது..! ஊரெல்லாம் சிரிக்கிறாங்க..!
நட்சத்திரா: அசச்சோ..! சாரி ஏதோ கோபத்துல அடிச்சுட்டேன்..!
இனியன்: பரவால்ல நீதான, அடிச்சா அடிச்சுக்கோ..! ஆனா, என்ன தான் உனக்கு டம்மி பீஸ்னாலும்; ஊருக்கு எல்லாம் நான் ரெளடி தான் டி..! அதுக்காவாச்சும் விரல் பதியாம அடி மா..! ப்ளீஸ்..!
நட்சத்திரா: Stupid, what would i do without you..!
இனியன்: இத பாரு டி..! தனியா இருக்கும் போது என்ன அடி வேணும்னா அடிச்சிக்கோ..! ஆனா இப்படி புரியாத பாஷையில திட்டாத..!
நட்சத்திரா: என்னத்த டபுள் டிகிரியோ; என்னத்த வாத்தியாரோ; ஒன்னும் தெரியல.. சரியான மக்கு…!
இனியன்: மூடு டி..! நான் வெறும் தமிழ் மீடியம்; படிச்சு சென்னைக்கு வெறும் நூறு ரூபாய் பணமும்; சர்டிபிகேட் ஓட வந்தேன்..! இப்ப பாரு கடன் அடச்சிட்டேன்; நகைய திருப்பிட்டேன்; வீடுக் கூட கட்டிடேன்..!
(இதெல்லாம் முதல்முறை கேட்டப் போது அவளுக்கு புல்லரித்தது, புளகாங்கிதம் அடைந்தது..! ஆனால் இதையே தினமும் கேட்டு கேட்டு..! சலித்துப் போனது..)
நட்சத்திரா: போதும் தேஞ்சுப் போன டேப் ரெக்கார்டர் மாறி, சும்மாவே சொன்னதே சொல்லிட்டு..! முடியல..!
இனியன்: தெரியும் டி..! இதான் சொல்லுவன்னு..! நான் போறேன்..! போடி..!
(தொடரும்…)
0 Comments