சென்ற வாரம்:
நட்சத்திரா: இல்ல அம்மா..! எனக்கு எல்லாமே புரியுது.! ஏன் குழந்தைப் பெத்துக்கனும்னு அவ்ளோ ஆசையா இருக்கு..! ஆனா, அவர் கிட்ட உண்மைய சொல்லாம எதுவுமே முடியாது அம்மா..! நெருப்பு மேல நிக்கிற மாறி இருக்கு, அவர் என்ன கொஞ்சும் போது..! கட்டிப் பிடிக்கும் போது எல்லாம், விட்டு போயிடுவாரோன்னு பயமும் கூடவே வருது..! எனக்கு என்னப் பண்ணனே தெரியல அம்மா..! எதோ நடு கடல்ல மாட்டிக்கிட்டு, நீந்தி கரைக்கும் வர தெரியாம, உள்ள முங்கவும் தைரியம் இல்லாம.. நரகமா இருக்கு..!
அம்மா: சரி சரி..! அழாதா..! கொஞ்சம் டைம் கொடு..! எல்லாமெ சரி பண்ணிடலாம்..!
நட்சத்திரா: நிஜமா..?!
அத்தியாயம் 15 – வீசாத காற்று
அம்மா: நிஜமா தான் டி. ஆமா, எந்த நேரமும் புடவையோட சுத்துறியே கஷ்டமா இல்லை..?!
நட்சத்திரா: அதெல்லாம் இல்லை அத்தை.. பழகிடுச்சு..!
அம்மா: இந்த கிழிஞ்ச ஜீன்ஸ்; அரைகுறை சட்டை; குட்டி குட்டி துணி எல்லாம் போட்டு என் பையன் கிட்ட பேசலாம்ல..?! நாங்கல்லாம் அந்த காலத்துல….
நட்சத்திரா: ஐயோ நிறுத்துங்க முடியல உங்க காலம் புராணம்..! இன்னொரு விஷயம், எதப் போட்டாலும் உங்க பையன் ஆபீஸ் வேலைய தான் கட்டிட்டு அழுவாரு..!
அம்மா: ஆமா டி, அவன் அப்படி தான்..!
நட்சத்திரா: இருந்தாலும் நீங்க சொன்னத நான் முயற்சிப் பண்ணுரேன்.!
அம்மா: இன்னைக்கே பண்ணிடு..!
நட்சத்திரா: அது எப்படி அத்தை..?!
அம்மா: நான் ஒரு மணி நேரத்துல, நிலாவ கூடிட்டு நம்ம வீட்டுக்கு போய்டுறேன்..!
நட்சத்திரா: ஆமா, அப்படியே நீங்க கூப்பிட்டு, அவ வந்துட்டாலும்…
அம்மா: நான் கூப்பிட்டா வர மாட்ட..! ஆனா, மீன் குழம்பு கூப்பிட்டா கண்டிப்பா வருவா..!
நட்சத்திரா: அதுவும் சரி தான்..! அப்போ சரி, என்ன பேசிட்டே இருக்கீங்க..?! கிளம்புங்க..!
அம்மா: அது சரி, ஆக்க பொருத்தவளுக்கு ஆற பொறுக்குதான்னு பாரு..!
நட்சத்திரா: விடுங்க விடுங்க..!
அன்று இரவு
எழிலன்: அம்மு….!
நட்சத்திரா: வந்துட்டேன்..!
(கதவைத் திறந்தவுடன் – ஜீன்ஸ் – டாப்ல இருந்த நட்சத்திராவைப் பார்த்து)

எழிலன்: அம்……மு…. என்னடி இது…?!
நட்சத்திரா: கீழே ஏதாவது குடம் வைக்கணுமா..?! தரையில் ஊத்துது பாருங்க…?!
எழிலன்: அம்…மூமூ…. மூமூ
நட்சத்திரா: முதல்ல உள்ள வாங்க..!
எழிலன்: அம்மு அப்படியே ஜூஸ் போட்டுறேன் பாரு உன்ன..! என்னடி புடவைல அப்படினா இதுல இப்படி இருக்க…! ஐயோ, எதைப் பாக்குறது; எதை விடுறதுன்னு தெரியலையே..!
நட்சத்திரா: கடவுளே..! முதல்ல போய் குளிங்க… கிட்ட வராதீங்க..!
எழிலன்: பைத்தியம், நல்லா உசுப்பு ஏத்தி விட்டு எப்படி பேசுது பாரு..! ஆனா ஒன்னு; தப்பி தவறி கூட இந்த ட்ரெஸ வேற யார் முன்னாடியும் போட்டுடாத..! அவ்ளோ அழகா இருக்க..!
(எழிலன் குளிக்க சென்றான் – ஆனால் அவன் சொன்ன வார்த்தைக்கு சந்தோஷம் படனுமா இல்ல கஷ்டப்படணுமா..?! சின்ன வயசுல இருந்தே எல்லாமே இப்படித்தானே..?! அது என்ன அப்படி ஒரு துணிச்சல்; அப்படி ஒரு உரிமை; – ஒரு பொண்ணு என்ன டிரஸ் போடணும்; எப்படி நடந்துக்கணும்; யார்கிட்ட என்ன பேசணும்; இதெல்லாம் சொல்றதுக்கு..?! யார் அந்த உரிமை கொடுக்கிறது..?!
அவள் வாழ்க்கையில் அவளுக்கு புரிஞ்ச ஒரே விஷயம் – உரிமை எவ்வளவுன்னு நம்ம தான் முடிவு பண்ணனும்; ஒரு பொண்ணுக்கு சமைக்கவும்; வீட்டு வேலையும் சொல்லி கொடுக்கும் முன்னாடி – சுயமரியாதையும்; சுய அறிவையும் சொல்லிக் கொடுக்கணும். அவள் வாழ்வில் சந்தித்த தருணங்களும், அதற்கு அவளுள் இருந்த பாரதியும் பெரியாரும் சொன்ன பதில்களும்…!
1) பெரிய மனுஷி ஆகிட்ட, இனிமே பசங்க கூட எல்லாம் பேசக்கூடாது – ஏன் பேசினாலே குழந்தை பிறந்திடுமா..?! அப்போ பையலஜி பாடத்துல சொன்னது எல்லாமே பொய்யா..?!
2) பொண்ணுக்கு எதுக்குடி மேல படிப்பு – ஏன் மேல படிப்பு பசங்களுக்கு மட்டும் தான் சொந்தமா..?! பொண்ணுங்க படிச்ச படிப்பு ஏறாதா..?!
3) துப்பட்டா போடுங்க தோழி, ஆம்பள பசங்க பத்தி எனக்கு தெரியும் தப்பா தான் பார்ப்பாங்க – தப்பா பார்க்குறாங்கன்னு தெரிஞ்சும் பார்த்து தட்டி கேட்க துப்பில்லாத ஆம்பிளை நீ; என்கிட்ட முறுக்கிட்டு வரியா..?!
4) பொண்ணுங்களுக்கு எதுக்கு வேலை, புருஷன் காசு தந்த போதாதா – ஒரு சானிட்டரி நாப்கின் கூட இன்னொரு தயவுல வாங்குவது எவ்வளவு கேவலம் தெரியுமா..?! நீ கேவலமான பிறவியாக இரு; என்னால் இருக்க முடியாது.
5) ப்ரமோஷன் தானே பாஸை கவனித்து வாங்கி இருப்பா – ஏன் உங்க வீட்டுப் பொண்ணுங்க எல்லாம் அப்படிதான் வாங்குறாங்களா..?!
6) லவ் பண்ணா; நீ அவன் கிட்ட ஏன் பேசுற? என் ஆள் என்கிட்ட தான் பேசணும் – ஏன் மீறி பேசினா, என்ன பயமா அவன் கூட ஓடி போய்டுவேன்னு..?!
7) லவ் பண்றேன்னு வீட்ல சொன்னா; உன்னை நம்பினதுக்கு இப்படி பண்ணிட்டேயே..! – ஒரு கேள்வி; என் வாழ்க்கை துணையை முடிவு பண்ண கூட எனக்கு தகுதி இல்லையா..?! முதல்ல, யார் என்னன்னு கேளுங்க அப்புறம் விசாரிச்சு பேசுங்க..!
8) கல்யாணம் பத்திப் பேசினா, பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா – ஏன் உங்க பையன் சமையல்காரியத் தான் கட்டிப்பானா..?!
9) குழந்தை எப்போ? – வேணும்னா என் புருஷன் அனுப்புறேன்; நீங்க பெத்துக்கோங்க..!
இப்படிப் பேசிய நட்சத்திராவால்; இப்ப மட்டும் வாயை அடைக்கவா முடியும்..?! எழிலன் குளித்துவிட்டு வருவதற்குள் புடவைக்கு மாறினாள். எழிலன் வெளியே வந்தவுடன்..! )
எழிலன்: என்னடி மாத்திட்ட..?!
நட்சத்திரா: புடிக்கல அதான்..!
எழிலன்: என்ன புடிக்கல..?!
நட்சத்திரா: நீங்க சொன்ன விதம்.
எழிலன்: என்ன தப்பா சொன்னேன்; என் பொண்டாட்டிய நான் மட்டும்தான் ரசிக்கணும் சொன்னேன். இதுல என்னத் தப்பு..?!
நட்சத்திரா: அது தப்பு இல்ல..! எவனோ ஒருத்தன் எப்படியோ பார்க்குறான்னு நான் என் எனக்கு புடிச்ச துணிய போடக் கூடாது..?!
எழிலன்: நானே பார்த்து ரசிக்கிறேன், வேற எவனாது பார்த்து ரசிச்சா எனக்கு எப்படி இருக்கும்.?!
நட்சத்திரா: இல்ல, தெரியாம தான் கேட்குறேன், வேற எவனாது ரசிக்க தான் நான் போடுறேனா..?
எழிலன்: அப்படி இல்ல மா.! எனக்கு புடிக்கல, நீ போடாத..! சொன்னா புரிஞ்சிக்கோ..!
நட்சத்திரா: எப்படி எப்படி..?! ஆயிரம் பேர் பார்க்குறாங்கன்னு உங்கள நான், அதப் போடதீங்க; இதப் போடதீங்கன்னு சொல்லிருக்கேனா..?!
எழிலன்: சொல்லுற வார்த்தைக்கு மரியாதை கொடுக்கப் பழகு..!
நட்சத்திரா: என் விருப்பத்துக்கே இங்க மரியாதை கொடுக்கலையாம், இதுல நான் வார்த்தைக்கு மரியாதை தரணுமா..?! முதல்ல, உங்களுக்கு ஏன் புடிக்கனும்..?! என் விருப்பத்துல உங்க கருத்த தினிச்சிட்டு, இப்போ மரியாதை வேற தரணும்னு வெட்கமே இல்லாம பேசுறீங்க..! அதே மாதிரி உங்களை கல்யாணம் பண்ணிட்டு தான் வந்தேன் தவிர, யாரும் என்னை உங்களுக்கு அடிமை சாசனம் எழுதி தரல..! முடிஞ்சா சப்போர்ட் பண்ணுங்க; இல்ல பேசாம இருங்க..! என் உரிமை என்னன்னு எனக்கு தெரியும்.!
எழிலன்: என்ன சொல்ல வர, நான் உன்ன அடிமையா நடத்துறேனா..?! நடத்துறவன் தான் உன் தங்கச்சிக்கு போன் வாங்கி கொடுப்பானா..?!
நட்சத்திரா: என்னோட சுயமரியாதைக்கும்; அவளுக்கு வாங்கி கொடுத்த போனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
எழிலன்: என்னடி மரியாதை தரல உனக்கு..?!
நட்சத்திரா: அய்யோ கடவுளே முடியல..!
எழிலன்: மரியாதை விடு டி, உனக்கு மனசாட்சி இருக்கா..?! எப்படி வந்து வாசல்ல கூப்பிட்டு; இப்போ எப்படி பேசுறன்னு..!
நட்சத்திரா: உன் நினைப்பு முழுசா அதுல தான இருக்கு..?!
எழிலன்: நான டி உன்ன அந்த டிரேஸ்ல நிக்க சொன்னேன்..! கொஞ்சம் நியாமா பேசு டி..!
நட்சத்திரா: ஓ..! நான் நியாயம் இல்லாம பேசுறேனா..?! உங்களுக்கு எவ்வளோ வேலை செய்யுறேன்..! எல்லாத்தையும் மறந்துட்டு ஒரே நிமிஷத்துல இப்படி பேசுறீங்களே..?!
எழிலன்: அப்படி என்ன செஞ்சிட்ட..?!
நட்சத்திரா: ஓ..! வாரம் ஃபுல்லா சமைப்பது; துணி துவைப்பது; வீட்டை சுத்தம் செய்வது; காய்கறி வாங்குவது; ஏன் உங்களுக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்கிறது யாரு..?! நானும் ஆபிஸ் தான போறேன்..! கல்யாணம் ரெண்டு பேருக்கும் தானே பண்ணாங்க..! இல்ல, எனக்கு நானே தாலிக் கட்டிக் கிட்டேனா..?! ஒரு வேலை செஞ்சு தரீங்களா, சொந்தமா காபி போட தெரியுமா..?! ஒரு மண்ணும் தெரியாது..! சும்மா வெட்டி பேச்சு..!
எழிலன்: என்னைவிட நல்லா பேச தெரிஞ்ச ஒரே காரணத்தினால உன்ன மன்னிச்சு விடுறேன்..!
நட்சத்திரா: இல்லன்னா என்ன பண்ணுவீங்க..?!
எழிலன்: எங்க பண்ண விட்ட..?!
நட்சத்திரா: என்னது..?!
எழிலன்: ஒன்னும் இல்ல சாமி..! விடுடி, நீ என்ன டிரஸ் வேணாலும் போட்டுக்கோ..! ஆள விடு..! நான் போய் தூங்குறேன்..!
நட்சத்திரா: ஆமா, நல்லா தூங்குங்க..! குழந்தை எல்லாம் வானத்தில் இருந்து கீழே வந்து விழுந்திடும்.
எழிலன்: குழந்தை வேணும்னா கொஞ்சம் ஆச்சு அனுசரிச்சு போகணும். சும்மா அறியாத புள்ள தெரியாம ஏதொ சொல்லிடுச்சு..! அதுக்குப் போய், இப்படி வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சா..?!
நட்சத்திரா: ஆமா நான் என்ன பஞ்சி ஜம்பிங் பண்றேன். நீங்க தான் டிக்கெட் வாங்கி கொடுத்தீங்க பாருங்க..!
எழிலன்: ஆமா ஆமா, என்ன அசிங்க படுத்த மட்டும் உனக்கு எங்கிருந்து தான் வருமோ..?! தயவு செஞ்சு போய் தூங்கு..! உன்னப் போய் கல்யாணம் பண்ணேன் பாரு என்ன சொல்லணும்..!
(இதைக் கேட்டவுடன் நட்சத்திராவுக்கு இன்னமும் அழுகைப் பொத்துக்கொண்டு வந்தது அவளையும் மீறி இனியன் அவளுக்காக செய்தது எல்லாம் அவள் கண்முன் தோன்றியது)
அன்று
நாட்கள் ஓடின..! நட்சத்திராவும் மூன்றாம் வருடம்; இனியேனும் ஐந்து வருடம் முடிந்து பதவி உயர்வு பெற்றார்..!
நட்சத்திரா: வாழ்த்துக்கள்..!
இனியன்: நன்றி கனி, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..!
நட்சத்திரா: சொல்லுங்க..!
இனியன்: எனக்கு 30 வயசு ஆக போகுது; வீட்ல கல்யாணம் பண்ண சொல்லி டார்ச்சர் பண்றாங்க.. பயமா இருக்குடி..! நீ இல்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியல..!
நட்சத்திரா: சரி விடுங்க ஒரு வருஷத்தில் எல்லாம் சரியாயிடும்; எனக்கு வேலை கிடைச்சிரும்; நம்ம வேற ஒரு ஊருல செட்டில் ஆயிடலாம்..!
இனியன்: (தொண்டை அடைத்து) விட்டு போயிடாத குட்டிமா..!
நட்சத்திரா: நல்லதே நடக்கும் எதையும் நினைச்சுக்காதீங்க..! ஒரு வருஷத்தில் நம்ம வாழ்க்கையே மாறிடும்.
அப்போது கல்லூரிக்கே விஷயம் தெரிஞ்சு பேச ஆரம்பித்தது..! அதேசமயம் சாட்சிக்காக சில விஷக் கிரும்மிகளும் காத்திருந்தன..! எல்லாம் நல்லா போய்கிட்டு இருந்தப் போது ஒரு புதிய பிரச்சனை – ராதா(சக்காலத்தி) )
ராதா: ஒரு நிமிஷம் உன் கிட்ட பேசணும்..!
நட்சத்திரா: (இது என்ன இப்போ) சொல்லுங்க மேம்..!
ராதா: இல்ல எனக்கு இனியன பிடிச்சிருக்கு..! அவருக்கும் என்ன ரொம்ப புடிக்கும்..! ஆனா சொல்ல வரல..!
நட்சத்திரா: என்னது…?!
(தொடரும்..)
0 Comments