இனியன்: மூடு டி..! நான் வெறும் தமிழ் மீடியம்; படிச்சு சென்னைக்கு வெறும் நூறு ரூபாய் பணமும்; சர்டிபிகேட் ஓட வந்தேன்..! இப்ப பாரு கடன் அடச்சிட்டேன்; நகைய திருப்பிட்டேன்; வீடுக் கூட கட்டிடேன்..!

(இதெல்லாம் முதல்முறை கேட்டப் போது அவளுக்கு புல்லரித்தது, புளகாங்கிதம் அடைந்தது..! ஆனால் இதையே தினமும் கேட்டு கேட்டு..! சலித்துப் போனது..)

நட்சத்திரா: போதும் தேஞ்சுப் போன டேப் ரெக்கார்டர் மாறி, சும்மாவே சொன்னதே சொல்லிட்டு..! முடியல..!

இனியன்: தெரியும் டி..! இதான் சொல்லுவன்னு..! நான் போறேன்..! போடி..!

அத்தியாயம் – 17 : மீட்டாத வீணை

எல்லாமே சரியா போயிட்டு இருந்த நேரம்; வாழ்க்கை வசந்தமாக இருக்கும்னு நினைச்ச நேரம்; இனிமே நமக்கு எல்லாமே நல்லது மட்டும் தான் நடக்க போகுதுன்னு இருந்த நேரம்; அப்போது தான், அந்த யாரும் எதிர்பார்க்காத புயல் இனியன் நட்சத்திராவின் வாழ்வில் வந்தது.

இனியன்: அம்மா பேசுச்சு; வீட்டு பொண்ணு பார்க்குறாங்களாம்.

நட்சத்திரா: ஓஓ..!

இனியன்: என்ன ஓஓ..?

நட்சத்திரா: இல்ல, என்ன சொன்னாங்க..?!

இனியன்: என்ன என்ன சொன்னாங்க…? பொண்ணு பாக்குறாங்களாம்னு சொன்னேன்.

நட்சத்திரா: இல்ல, அது தெரியுது நீங்க என்ன சொன்னீங்க..?

இனியன்: ஒரு வருஷம் போகட்டும்னு சொன்னேன்.

நட்சத்திரா: சரி பார்த்துக்கலாம், இத ஒரு வருஷம் அப்புறம் யோசிச்சுகலாம்.

இனியன்: ஆமா, அதான் ஒரு வருஷம் இருக்கு இல்ல, அதுக்குள்ள எல்லாமே சரியா வந்திரும்.

நட்சத்திரா: வரணும், வந்தா தான் எல்லாமே..!

இப்படி சிக்கலுக்குள் போயிட்டு இருக்கும்போது அடுத்த வாரம் நடந்த சம்பவங்கள் அவள் வாழ்க்கையே புரட்டி போட்டது. நட்சத்திராவும் அவளது நண்பர்களும் எதோ சிரிச்சு பேசி கொண்டு இருந்தனர்..! அதைப் பார்த்து இனியன் உடனே அவளை கூப்பிட்டான்..!

நட்சத்திரா: என்ன கூப்பிட்டீங்க..?

இனியன்: அங்க என்ன பேசிட்டு இருந்த..?

நட்சத்திரா: சும்மா, ஜாலியா..!

இனியன்: நீ ஏன் எல்லார்கிட்டயும் பேசுற?

நட்சத்திரா: ஏன் பேசுனா என்ன..?

இனியன்: எனக்கு புடிக்கல..!

நட்சத்திரா: அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..?

இனியன்: பேசுறதை நிறுத்து..! என்கிட்ட மட்டும் பேசினால் போதும்..!

நட்சத்திரா: என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது; உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால நடக்க முடியாது; உங்களால முடிஞ்சதப் பாத்துக்கோங்க…!

இனியன்: சரி டி..!

முகத்தில் அடித்த மாறி எதுவும் பேசாமல், நடந்து சென்றான். அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள்…

சம்பவம் 1:

விஜய்: நட்சத்திரா, எனக்கு ரெக்கார்ட் எழுதி தரியா?

நட்சத்திரா: வாய்ப்பே இல்ல..

விஜய்: ப்ளீஸ்பா, உடம்பு வேற சரி இல்லை..! ப்ளீஸ்..!

நட்சத்திரா: சரி குடு..! என்ன ரெக்கார்டு..?

விஜய்: எல்லாம் இனியன் ரெக்கார்டு தான்.

நட்சத்திரா: நாசமா போச்சு..! கண்டுபிடிச்சா பிரச்சினை ஆகிடும்..! வேண்டாம்..!

விஜய்: அதெல்லாம் ஒன்னும் ஆகாது..!

நட்சத்திரா: சரி உன் இஷ்டம், உன் கஷ்டம்..!

அடுத்தநாள்

விஜய்: சார் ரெக்கார்டு..!

ரெக்கார்டை பார்த்த உடன், இனியன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, நக்கலாக சிரித்தப் பின்,

இனியன்: என்னடா இந்த கையெழுத்து வேற மாதிரி இருக்கு..?

விஜய்: அதெல்லாம் இல்ல சார்..!

இனியன்: சரி, நீ போய் நட்சத்திராவை கூட்டிட்டு வா..!

நட்சத்திரா வந்தவுடன்..!

நட்சத்திரா: என்னாச்சு சார்..?

இனியன்: நீ தான எழுதிக் கொடுத்த..?

நட்சத்திரா: (அய்யோ மாங்கா மடையன் கண்டுபிடிச்சிட்டானே.. சரி சமாளிப்போம்) இல்ல சார்..!

இனியன்: அப்படியா?

நட்சத்திரா: சத்தியாமா சார்..!

இனியன்: உன் சத்தியத்தப் பத்தி எனக்கு தெரியாதா..?!

( எழுதின 15 பக்கத்தையும் கிழிச்சுப் போட்டுட்டு; சத்தமாக.. ஏண்டா உன்னை எழுத சொன்னா, நீ அவ கிட்ட சொல்லுறியா..?! நீ என்ன எழுதாம சடங்கு சுத்தவா போன..?! கொன்னுபுடுவேன் இந்த மாறி எல்லாம் பண்ணா..! ஒழுங்க நாளைக்கு எழுத்தி கொண்டு வா..!)

விஜய்: சரி சார்

நட்சத்திரா: சாரி சார்

விஜய் சென்றவுடன்..!

இனியன்: எப்படி நம்ம பர்ஃபார்மன்ஸ்..?

நட்சத்திரா: பைத்தியம், சாடிஸ்டு மாதிரி நடந்துகுறீங்க..! அசிங்கமா பண்றீங்க..!

இனியன்: அந்த பையன் இனிமே உன் திசைப்பக்கம் கூட வரக்கூடாது..! அதான்..!

நட்சத்திரா: சரியான மெண்டல் மாதிரி பண்ணாதீங்க..! கடுப்பாகுது..!

இனியன்: நீ பாப்பா, உனக்கு ஒன்னும் தெரியாது, கம்முனு இரு..!

நட்சத்திரா: உன்கிட்ட மனுஷன் பேசுவானா, எக்கேடோ கெட்டுப் போங்க..!

சம்பவம் 2

விஷால்: நட்சத்திரா, என்னடி குண்டாயிட்டே போற..!

நட்சத்திரா: அதெல்லாம் இல்ல நீ வேற ஏண்டா..!

அதற்குள் இனியன் வந்துவிட்டான்

இனியன்: என்னடா, ஒரே பொம்பள புள்ள கூட தன் பேச்சுப் போல..!

நட்சத்திரா: சும்மா தான் சார்..!

இனியன்: சரி நடக்கட்டும், நடக்கட்டும்..!

நட்சத்திரா: (என்ன விட்டுட்டு வந்துட்டான், பரவாயில்லை திருந்திட்டான் போல..! ஏதோ நமக்கு நல்லது நடந்தா சரி தான்)..!

அடுத்த நாள், விஷால் சோகமா இருந்தான்..!

நட்சத்திரா: என்னடா, என்ன ஆச்சு..?!

விஷால்: இல்ல டி வீட்டுக்கு லெட்டர் போய் இருக்கு..!

நட்சத்திரா: என்னன்னு?

விஷால்: ஒழுங்கா க்ளாஸ்ஸுக்கு வரது இல்லன்னு, நல்லா மார்க் வாங்குறது இல்லன்னு..!

நட்சத்திரா: யார் அனுப்பினா..?

விஷால்: இனியன் தான்..! அந்த ஆளுக்கு என் மேல என்ன காண்டுனே தெரில டி..!

இதைக் கேட்டவுடன் அவளுக்கு தூக்கி வாரி போட்டது; கோவம் தலைக்கு ஏறியது..! பொறுமை சுத்தமாக போய் விட்ட நிலையில், நேராக இனியனிடம் சென்றாள்..! நீங்க பண்ணுறது எதுவுமே சரி இல்லை, என்கிட்ட பேசுறவங்க கிட்ட இப்படி நடந்துகுற விதம் சுத்தமா சரி இல்ல..!

இனியன்: நான் முன்னாடியே சொல்லிட்டேன்..! உன்கிட்ட யார் பேசினாலும் எனக்கு பிடிக்கல.! நீ கேட்கல, இப்படித் தான் பண்ணுவேன்..!

நட்சத்திரா: இந்த பாருங்க இனியன், இதெல்லாம் சரி கிடையாது சொல்லிட்டேன்..!

இனியன்: ஏண்டி, ரெண்டு வருஷமா லவ் பண்ணுறோம், அப்புறம் என்ன உனக்கு என்கிட்ட பேசுறத விட, வேற ஒருத்தன் கிட்ட பேச்சு வேண்டி இருக்கு.?

நட்சத்திரா: அது உங்களுக்கு தேவையில்லை…!

இனியன்: இதோ பாரு அம்மு, உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்..! ஒரு வருஷத்துல கல்யாணம் பண்ணிக்க போறோம்..! வீட்டப் பாத்துக்க போற, எங்க அம்மா அப்பாவ கவனிச்சுக்கப் போற, இப்போ போய் பசங்க கூட பேசிட்டு இருந்த மனசு கஷ்டப்படும்ல..! புரிஞ்க்கோ..!

நட்சத்திரா: ஒரு நிமிஷம்..! கல்யாணமா..? யாருக்கு..?

இனியன்: வேற யாருக்கு..? நமக்கு தான்..!

நட்சத்திரா: எனக்கு கல்யாணம் இப்ப வேண்டாம்..!

இனியன்: இப்போ இல்ல, ஒரு வருஷம் கழித்துதான்..!

நட்சத்திரா: அப்பயும் இல்ல..! எனக்கு ஒரு நாலஞ்சு வருஷம் வேண்டும்..!

இனியன்: ஏன்..?

நட்சத்திரா: ஏன்னா… நான் கல்யாணத்துக்கு இன்னும் தயாராகவில்லை..!

இனியன்: எல்லாம் தயாராகிட்டா கல்யாணம் பண்றாங்க..?! நீ மட்டும் சும்மா ஏதோ சீன் போடுற..??!

நட்சத்திரா: எல்லாரும் நானும் ஒன்னு கிடையாது, எனக்கு வேணாம்…! எனக்கு வேலைக்கு போகனும்; நிறைய சம்பாதிக்கணும்; நிறைய கனவு இருக்கு..!

இனியன்: சரி, நீ வேலைக்கு போனா வீட்டை யாருப் பாத்துப்பா..?!

நட்சத்திரா: நான் ஏன் வீட்டப் பார்த்துக்கனும்..?!

இனியன்: அம்மா அப்பா எல்லாம் கஷ்டப் படுவாங்க டி, தனியா இருந்தா..!

நட்சத்திரா: இத்தனை வருஷம் யாரு பாத்துகிட்டா..?!

இனியன்: உனக்கு புரியல, நீ ரொம்ப சின்ன பொன்னு..!

நட்சத்திரா: அப்போ கல்யாணம் பண்ணுறது மட்டும் தப்பு இல்லையா? சின்னப் பொன்ன..?!

இனியன்: நீ பேசுவதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல..! என்ன பேச்சு இது, கொஞ்சமாச்சும் பொம்பள புள்ள மாதிரி பேசு..!

இதைக் கேட்டவுடன், அவள் கண்களில் நீர் குளமாக தளும்பியது..! எதுவும் பேசாமல் கிளம்பினாள்..! அன்று வீட்டுக்கு சென்றவுடன் யோசனை மட்டுமே அவளை சூழ்ந்தது..!

file-7191783

பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்னு யார்தான் சட்டம் எழுதி வச்சா..?!

பாட்டிகிட்ட கேட்டா..! எங்க காலத்துல நாங்க புருஷன் பேரை கூட சொல்லமாட்டோம்..! இப்ப பாரு வாடா போடான்றது; பேரை சொல்லி கூப்பிடுவது; ஏன் புருஷன் முன்னாடி நிக்க கூட மாட்டோம்; தரையில்தான் உட்காருவோம்..!

அம்மா கிட்ட கேட்டா..! அது மட்டும் இல்ல டி, அவங்க சாப்பிட்ட அப்புறம் தான் சாப்பிடனும், எல்லா வேலையும் செஞ்சு கொடுக்கனும்..! எதிர்த்து எல்லாம் பேசக் கூடாது..!

அக்கா கிட்ட கேட்டா..! அது தலைஎழுத்து டி, வேற ஒன்னும் பண்ண முடியாது..!

தலையெழுத்தா..! இதைக் கேட்டவுடன், பாலகுமாரன் வசனம் தான் நியாபகம் வருது..!

இந்த தலையெழுத்து எப்போ, எங்க, எப்படி எழுதுறாங்க..?! என் கருவிலா..?! அப்பன் விந்திலா..?! சினைமுட்டை உடைந்து கரு புகுந்து முட்டையோட மூடிக்கொண்டு நான் தயார் என்று அறிவித்த பிரம நேரமா..?! “

ஏன் ஆண்களுக்கு எதுவும் இல்லை..?! அவங்களுக்கு மட்டும் ஏன் எதுவும் எழுதலை..?!

ஏன் ஆண்களுக்கு மட்டும் இந்த உரிமை..?

ஏன் அவங்க பேரு சொல்லக்கூடாது..?

ஏன் எல்லா வேலையும் பொண்ணுங்க மட்டும் செய்யனும்?

ஏன் குரல ஒசத்திப் பேச கூடாது..?

இதெல்லாம் கேட்டா சும்மா விதண்டாவாதம் பேசிட்டு இருக்காதன்னு சொல்லுவாங்க..!

ஒரு நிமிஷம் யோசிச்சு பாத்தா அம்மா, பாட்டி, அக்கா எல்லாம்; அவங்க வாழ்க்கைல எதுக்கு வாழுறாங்கன்னே தெரியல..!

இத விட கொடுமை, புருஷனுக்கு காலையில பல்லு தேய்க்க பிரஷ்ல இருந்து, ராத்திரி தைலம் தேய்ச்சு விடுற வரைக்கும் எல்லா வேலையும் செஞ்சுக் கொடுத்து, புள்ளைக்கும் செஞ்சு விட்டுட்டு, சாப்பிட்ட தட்டை கூட கழுவ தெரியாத/தோணாத; அவன் போட்டிருந்த உள்ளாடை கூட துவைக்க தெரியாத/தோணாத; ஆண் ஆதிக்கம் பிடிச்ச கேவளமான ஒருத்தன இந்த சமுதாயத்துக்கு கொடுத்து, ஒரு அப்பாவி பொண்ணு தலையில கட்டி வச்சு அவளை ஒரு வேலைக்காரியாகவே மாத்தி விடுறது என்ன நியாயம்..?

சமீபத்தில் பார்த்த ஒரு படம் ” தீ கிரேட் இந்தியன் கிட்சன்” 2 மணி நேரம் பாத்துட்டு சொல்ல முடியாத ஒரு துக்கம் இன்னும் அடைக்கிது..! ஒவ்வொரு காட்சியும் கண்ணு முன்னாடி வந்து வந்து போகுது..! எழுதக் கூட முடியாத அளவுக்கு ஒரு அருவேறுப்பு; கஷ்டம்; கேவலம்; அசிங்கம் மனசப் போட்டு புரட்டி எடுக்குது…! ஒவ்வோரு ஆணும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்..!

ஒரு இரண்டு முழம் கயிறு எப்படி ஒரு பெண்ணை அடிமையாக்குது..?!

ஒரு பொண்ணு வீட்டுக்கு மருமகளாக வந்தா, அவளை என் மாமியார் வேலை செய்வதற்கு இன்னொரு ஆளாக பாக்குறாங்க..? சமையல் கட்ட யாரு பொண்ணு பேர்ல எழுதி வச்சா..?!

ஆண்கள் மட்டும் யோக பண்ணி; உடற் பயிற்சி பண்ணி எடையை குறைப்பார்களாம்..! பெண்கள் உசுரு போற வர, வீட்ட பெறுக்கி; தொடச்சி; பாத்ரூம் கழுவி; சமைச்சு; பாத்திரம் கழுவி; துனி துவைச்சு; காயப்போட்டு; எல்லா வேலையும் செய்யனும்..!

இதுல இருந்தே தெரியல, ஏன் பெரும்பாலான வீட்டில 40 வயசு ஆண்கள் தொப்பையும் தொந்தியுமா இருக்காங்கன்னு..!

அத விட அந்த படத்தில் உருத்திய இன்னொரு விஷயம்.. தாம்பத்தியதுல கூட ஒரு பெண்ணுக்கு அவள் விருப்பம் அனுமதிக்க படாத..?! பெண் உடம்பு வெறும் ஆண்கள் ரசிக்க மட்டும் தான..?! அந்த படத்தில்/பெரும்பாலான நிஜத்தில், பெண் அவளின் விருப்பத்தை சொன்ன அத ஏன் கேவலமாக பார்க்கனும்..?! அவளுக்கு ஆசை இருக்க கூடாத…?! இரண்டுப் பேருக்கும் சுகம் தர விஷயத்தை, ஏன் ஒருத்தங்களுக்கு வலி தர மாறி மாத்தனும்…?! மாதவிடாய் அப்போ, அவளுக்கு அன்பும் பாசமும் கிடைக்க வேண்டிய நேரத்துல, அவளை தள்ளி வச்சு என்ன தான் சாதிக்க போறாங்க..!

அதுவும் இந்த சன்டே காலையில கல்யாணமாலையில கேட்பாங்க பாரு..! அனுசரணையா; அட்ஜஸ்ட் பண்ணிட்டு; எங்க அம்மா அப்பா பார்த்துக்குற மாதிரி எங்க குடும்பத்துக்கு ஏத்த மாறி ஒரு நல்ல பொண்ணு வேணும்ன்னு..! அதுக்கு ரொபோ எதனா வச்சிக்க வேண்டியது தான.?! நல்ல பொண்ணுன்னு தனி ரகம் வேற, எப்படி தான் லிஸ்ட் போடுவாங்க..?! அடிப்படை அறிவோட யோசிச்சா, நம்ம ஒருத்தங்களை நல்லாப் பார்த்துக்கிட்டா, அவங்க நம்மள 100 மடங்கு நல்லா பாத்துக்குவாங்க..! அதுக் கூட தெரியாம இவன் எல்லம் கல்யாணம் பண்ணி என்னத்த சாதிக்க போறான்..?!

இந்த கேவலமான புத்தி எல்லாம் இங்க ஆரம்பிக்கலை; இந்த எண்ணத்தை எல்லாம் ஆதி காலத்துலயே அறுத்து எரிஞ்சு இருக்கனும்..!

கண்ணகி மதுரையை எரிக்காம; இன்னொருத்திக் கூட போயிட்டு வருவ, நான் உன்ன ஏதுக்கனுமான்னு, கோவலன எரிச்சு இருந்தா அப்போவே நிறையா விஷயம் மாறி இருக்கும்..! இதுவே ஒரு பேச்சுக்கு, கண்ணகி வேற யாருக் கூடயாவுது போய் இருந்தா சும்மா இருப்பான கோவலன்..?! என்ன என்ன பேசிருப்பான்..! ஊரே கூடி வந்து அவளை அசிங்கப் படுத்திருப்பாங்க..! ஆண்ணுக்கு ஒரு நியாயம்; பெண்ணுக்கு ஒரு நியாயம்..!

அதே மாறி, எவனோ ஒரு பரதேசி சொன்னான்னு, ராமர் கட்டின பொண்டாட்டிய காட்டுக்கு அனுப்பி விடுறது எப்படி சரியாகும்..?! அப்போ அவனையே நம்பி வந்த பொண்ணுக்கு அது அவன் செய்யுற துரோகம் இல்லையா..! இத கேட்டா, நாத்திகம் பேசாதன்னு சொல்லுவாங்க..! அதுக் கூட பரவாயில்லை; அண்ணன் காட்டுக்கு போறான்னு, அவன் கட்டின பொண்டாட்டிய விட்டுட்டு போறது எல்லம் மனுஷ தன்மையே இல்லை..! ஆனா நம்ம இவங்கள தன் கும்பிடுறோம்..!

எல்லாம் போகட்டும், அது என்ன திட்டுறது கூட பொண்ணுங்க வச்சுதான் திட்டுறது..? அப்படி என்னதான் பொண்ணுங்க பண்ணாங்க..?! நடுரோட்டில நாலு எருமைங்க சண்டைப் போட்டு கத்திட்டு இருக்கும்..! அதுல ஒருத்தன் சொல்லுவான்..! “புண்டாமவன்னு” தெரியாம தான் கேக்குறேன்; இவனுக்கெல்லாம் என்ன வாய் வழியாக விழுந்துட்டாங்களா..? ஒரு உயிரை கொடுத்த இடத்தை இப்படி கேவலமாக பேசி திரியுறது, அவன் பிறப்பை அசிங்கமா பேசுறதுக்கு சமம் இல்லையா….?!

“ஒரு அப்பனுக்கு பொறந்தா சொல்லுடா” இத சொன்ன உடனே கோவம் தலைக்கு ஏறி எங்க அம்மாவையா இப்படி சொன்னன்னு சண்டைக்கு போவான்; கொஞ்சம் திரும்பிப் பார்த்தா, அவங்க அம்மா கிட்சனுக்கும் ஹாலுக்கும் நடையா நடந்த்து; பாதி உயிரா இருப்பாங்க, அத கேட்க்க வக்கு இல்லாம; வெளிய அம்மா மானத்த காத்திட்டு இருப்பான்..! “தேவிடியா” ஆஓனா இத சொல்லிடுவாங்க.. உங்க சண்டைக்குள்ள ஏண்டா, இன்னொருத்தங்க அந்தரங்க வாழ்க்கைய இழுக்கனும்..?! உங்க குடும்ப கெளரவத்தை வைக்க இடமே இல்லையா..?! போய்யும் போய்யும் ஒரு பெண்ணோட அந்தரங்கத்துலையா வைப்பீங்க..?!

என்ன வாழ்க்கைடா இது..?! மயிறு வாழ்க்கை..! மயிறு மாதிரி இருக்கு..!

அச்சச்சோ..! பொண்ணுங்க கெட்ட வார்த்தை கூட பேசக்கூடாது..! எல்லா வேலையும் செஞ்சுக் கொடுத்து; புருஷனுக்கு நைட் வந்து படுத்தா போதும் நல்ல பொண்டாட்டி; குடும்ப குத்துவிளக்கு…! இதை மீறி அவளுக்கு விருப்பமான ஏதாவது ஒரு சின்ன விஷயத்தை செஞ்சா அவ்வளோதான்..!

ஆசீட் அடிப்பாங்க..!

சூடு வைப்பாங்க..!

அசிங்கமா பேசுவாங்க..!

ரேப் பண்ணுவாங்க..!

ஏன் கொலைக் கூட பண்ணுவாங்க..!

இதுக்கு பேசாம, பொறக்கும் போதே கல்லிப்பால் கொடுத்து கொன்னுருக்கலாம்..! அடுத்த பிறப்பிலாவது ஆணாக பிறந்து நிம்மதியா வாழ்ந்து இருக்கும்..! நட்சத்திரா யோசனையும் முடித்தது; இனியனை பற்றி முடிவும் தெரிந்தது..!

இனியன் வேணுமா..?

சுயமரியாதையா..! காதலா…?!

இவள் கனவா..?! அவரின் விருப்பமா..?

(தொடரும்..)

3

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.