மனிதர்களுக்கு சில நேரம் உண்மை புரிவதற்கும் தெளிவு பிறப்பதற்கும் காலம்தான் வழி வகுக்கிறது..! அந்த வரிசையில் நிலா ஒன்றும் விதி விலக்கில்லை..! இனியன் பக்கம் நியாயமும்; அவன் நட்சத்திராவின் மீது கொண்ட காதலும்; புரிவதற்குள் நட்சத்திராவின் வாழ்க்கை எழிலனுடன் பின்னப்பட்டிருந்தது..!

சென்ற வாரம்:

எழிலன்: ஏய் லட்டு..! என்ன டி இந்த நேரத்துல..?!

நட்சத்திரா: நீங்க இன்னும் தூங்கலையா..?!

எழிலன்: நீ இல்லாம தூக்கம் வரலை..!

நட்சத்திரா: பார்ரா..!

எழிலன்: (கட்டி இழுத்து கட்டிலில் சாய்த்த உடன்..) வா டி என் மரிக்கொழுந்தே..!

நட்சத்திரா: எனக்கு தூக்கம் சொக்குது..! வெறுப்பு ஏத்தாதீங்க..!

எழிலன்: அடியேய், நிஜமாவா..?!

அத்தியாயம் 12 : கல்லும் கனியும்

நட்சத்திரா: செருப்பு பறக்கும்..!

எழிலன்: ரைட் விடு..! தூங்கு..!

காலை 08 மணி..

எழிலன்: குட் மார்னிங் அம்மு..!

நட்சத்திரா: குட் மார்னிங்..! மணி என்ன..?!

எழிலன்: எட்டு டி என் லட்டு..! பாத்தியா என் கவிதைய..?!

நட்சத்திரா: சகிக்கல..! என் இவ்ளோ நேரம் தூங்க விட்டீங்க..!

எழிலன்: நீ தூங்குறத பாக்குறதுக் கூட எனக்கு சந்தோஷம் தான் டி பொண்டாட்டி..!

நட்சத்திரா: பார்ரா..!

எழிலன்: இன்னைக்கு முழுக்க நீ ரெஸ்ட் எடு.. வீட்டு வேலை எல்லாம் நான் பாத்துக்குறேன்..!

நட்சத்திரா: ஐயோ, நான் வீடு சுத்தம் பண்ணனும்..!

எழிலன்: ஆடியே.. ஒ.சி.டி பைத்தியம் கம்முன்னு படுத்து ரெஸ்ட் எடு..! நான் பாத்துக்குறேன்..!

நட்சத்திரா: நீங்க தான..! கிழிச்சீங்க..! ஒரு வேலை பண்ண தெரியாது..!

எழிலன்: மூடு டி..!

நட்சத்திரா: உண்மைய சொன்னா கோவம் வருதா..?!

எழிலன்: அப்படியா..! உண்மைய சொன்ன வாய்க்கு ஏதாவது தரணுமே..!

நட்சத்திரா: ஐய்ய..! பல்லுக் கூட விளக்கல்ல..!

எழிலன்: சிங்கம் புலி எல்லாம் பல்லு விளக்குதா என்ன..! உன் மாமன் சிங்கம் டி..!

(அதற்கு மேல் பேசவிடாமல் கட்டி அணைத்து மூச்சு முட்ட முத்தம் கொடுத்து முடித்தான்)

நட்சத்திரா: பொறுக்கி நாயே..! விடு டா..!

எழிலன்: என்ன டி மரியாதை குறையுது..?!

நட்சத்திரா: அப்படி தான் பேசுவேன்…! வலிக்கிது போடா..! பைத்தியம்..! தங்கச்சி வேற இருக்கா..! பாத்தா என்ன நினைப்பா..?! விடுடா..!

எழிலன்: அவ எல்லாம் இந்த நேரத்துக்கு கனவுல வேற யாருக்கூடயாவுது ரொமன்ஸ் பண்ணிட்டு இருப்பா..!

நட்சத்திரா: அதெல்லாம் இல்ல, முதல்ல என்ன விடுங்க வேலை இருக்கு..!

எழிலன்: ஓ..! அப்படியா மேடம்..! சரி விட்டுடறேன்..! நான் அக்னி சாட்சியா; எல்லார் முன்னாடியும்; நீ தான் என் பொண்டாட்டி; நான் தான் உன் புருஷன்; என்னோட எல்லாமே நீ தான்னு கட்டின தாலி எங்க மா..?! காணோம் கழுத்துல..!

நட்சத்திரா: என்னது தாலியை காணோமா…?!

(கழுத்தில் இல்லை ஆனால் முந்தைய இரவு இருந்த ஞாபகம் இருந்தது அவளுக்கு)

எங்கடா என் தாலி; குடு டா என்கிட்ட..!

எழிலன்: என்ன கேட்டா.?! நீ தான டி தொலைச்ச.?!

நட்சத்திரா: நீங்க தான நைட் கட்டிப் பிடிக்கும் போது குத்துது குடையுது கழட்டி வச்சீங்க..!

எழிலன்: நல்லா யோசிச்சு பாரு..! நீ தான் டி குத்துதுன்னு சொன்ன..! நான் ஏதோ நம்ம பொண்டாட்டி ஆச்சே, பாவம் உதவி பண்ணலாமேனு கழட்டி விட்டேன்.! அதுக்கு இப்படி பழிப் போடுவியா..?! கிராதகி..!

நட்சத்திரா: அடப்பாவி..! குடுத்திடுங்க ப்ளீஸ்..! என் மாமால…!

எழிலன்: அய்யோ நெஞ்சு வலிக்கிது..! சீக்கிரம் தேடு டி..!

நட்சத்திரா: நீங்க வச்சிக்கிட்டு என்ன தேட சொன்னா..! குடு டா..!

எழிலன்: ஒன்னு வாடா போடானு பேசு; இல்ல நீங்க வாங்கனு பேசு..!

நட்சத்திரா: சரி டா..! குடு டா.!

எழிலன்: வாய்ப்பில்லை ராஜா..! வேணும்னா ஒரு டீல் வச்சுக்கலாம்.!

நட்சத்திரா: என்னது..?!

எழிலன்: இன்னைக்கு நைட்டு..!

நட்சத்திரா: நைட்டு..?!

file-4839820

(கிட்ட வந்தான்)

நிலா வீட்ல தான் இருக்கா, சும்மா இருங்க..!

எழிலன்: அந்த மூட்டைப்பூச்சி அடிச்சுக் கொல்லுறேன் பாரு..!

நட்சத்திரா: அட டா..! உங்க அம்மா பண்ணாத இம்சையா..?! ஒரு நிமிஷம், தனியா இருக்க விடமாட்டாங்க..! ஆனா குழந்தை மட்டும் வேணுமாம்..! நான் என்ன குந்தியா..?! கடவுள் கிட்ட கேட்டு வாங்கிக்க..?!

எழிலன்: விடு டி..! அம்மான்னு சொன்ன உடனே தான் நியாபகம் வருது..! நைட் அம்மா போன் பண்ணாங்க இன்னிக்கு ஒரு பத்து மணி போல வராங்கலாம்…!

நட்சத்திரா: யாரு..? உங்க அம்மாவா…?

எழிலன்: ஆமா டி..!

நட்சத்திரா: சொல்லி வாய மூடலை..! அதுக்குள்ளவா.?! போச்சு..! மரியாதையா தாலியை குடுத்திடுங்க.! உங்க அம்மா என்ன வெறும் வாயிலயே போட்டு மெல்லுவாங்க..! இப்போ நல்லா பபுள்கம் மாதிரி ஒரு பிரச்சனை மாட்டி இருக்கு..! என் பரம்பரையே இழுப்பாங்க..!

எழிலன்: நீயாச்சு; உன் மாமியார் ஆச்சு..! என்ன விடு..!

நட்சத்திரா: ப்ளீஸ் டா மாமா..! நீ என்ன சொன்னாலும் செய்யுறேன்..!

எழிலன்: பக்கா…?!

நட்சத்திரா: பக்கா..!

எழிலன்: சரி ஒரு டீல் வச்சுக்கலாம்..!

நட்சத்திரா: என்ன டீல்.?

எழிலன்: ரொம்ப நாள் ஆச்சு டி அம்மு…..! இரண்டாவது தேன் நிலவுப் போலாமா..?!

நட்சத்திரா: மனசாட்சி இருக்கா உங்களுக்கு..?! முழுசா ரெண்டு மாசம் கூட ஆகல..! ஒழுங்கா தாலியக் கொடுங்க..!

எழிலன்: என் பொண்டாட்டி, நான் 8000 தேன் நிலவுக் கூட்டிட்டுப் போவேன்..! இன்னைக்கு நைட்டு ஒத்திகை பார்த்தக் கூட சரிதான்..!

நட்சத்திரா: ஏங்க விளையாடாதீங்க.. ஒழுங்கா குடுத்துடுங்க..!

எழிலன்: படிச்சப் பொண்ணு மாதிரி கொஞ்சமாச்சும் நடந்துக்கோ டி மிட்டாய்..! என்னத்த 2 டிகிரி வாங்கினியோ..! இதுவே புத்திசாலி பொண்ணா இருந்தா யோசிக்காம டீல்’க்கு சரி சொல்லிருப்பா..! யோசிக்கற ஒவ்வொரு செகண்ட்டும் என் அம்மா வர நேரமாகுது பாத்துக்கோ..!

நட்சத்திரா: புருஷன் மாதிரி பேச சொன்னா.. சீரியல் கில்லர் மாறி பேசுறீங்க..!

எழிலன்: அதெல்லாம் தெரியாது.! ஏய் பப்பாளி, கடைசியா கேட்குறேன்..உனக்கு தாலி வேணுமா வேணாமா..?!

நட்சத்திரா: சரி ஓகே..! போய் தொலைங்க..!

(சேலையில் கை வைத்தவன் திடீரென ஏதோ யோசனையில் அவள் கண்களைப் பார்த்து.. ஏய்..! ஆசைப் பொண்டாட்டி என் புளிப்பு மிட்டாயே..! தாலி இருந்தாலும் சரி; இல்லைனாலும் சரி..! நீ இருக்க வரைக்கும் எனக்கு எதுவும் ஆகாது..! என்ன காப்பாத்துற சாமியே நீ தான் டி..! எனக்கு உன்ன மட்டும் தான் பிடிக்கும்..! ஐ லவ் யூ டி என்று தாலியைப் போட்டு விட்டு; நச்ச்னு கண்ணத்தில் இச்ச் பதித்து விட்டு வேறு எதுவும் சொல்லாமல் சென்றான்..)

நட்சத்திரா: எங்கப் போறீங்க..?!

எழிலன்: நீ வேற ஓகே சொல்லிட்ட..! நான் போய் உடம்பு ஏத்தி நல்லா புஜிடிக்கா வரேன் பாரு..! மாமாக்கு ஒரு பாதாம் பால் போட்டு வை..!

file-6429116

அவன் சொல்லிய வார்த்தையின் சந்தோஷத்தை அனுபவிக்க கூட நேரம் கொடுக்காமல் அடுத்த நிமிடமே கதவு தட்டும் சத்தம் கேட்டது..! எழிலன் அம்மா வருகை.! வந்ததும் வராததுமாக..!

அம்மா: என்ன டி வீடு இது..! இன்னும் குளிக்காமல்..! தாலியை வெளியே தெரியற மாதிரி போட்டுட்டு..! என்ன டி பொண்ணு நீ..?! என் பையன் கிட்ட அப்பவே சொன்னேன் நல்ல பொண்ணா நான் பாக்குறேன்னு; நீதான் வேணும்னு ஒத்த கால்ல நின்னு இப்படி வத்து சிக்கிட்டான்..! எல்லாம் என் தலை எழுத்து..!

கத்தின கத்தில் நிலா எந்திரிக்க..! தூக்கத்தில் வந்தாள்..!

நிலா: யாருக்கா அது..?! காலங்காத்தால இந்த கத்து கத்துறது..!

அம்மா: சின்னவளும் இங்கதான் இருக்காளா..?! இது எப்பொல இருந்து..?

நட்சத்திரா:(வந்த கோபத்தை முகத்தில் காமிக்காமல்) 2 நாள் தான் அத்தை..!

நிலா: வாங்க அத்தை..!

அம்மா: அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து என் பையனோட சம்பாத்தியம் எல்லாம் அழிச்சிடுங்க..! பாவம் என் பையன்..!

நிலா: (மெதுவாக) என்ன தான் அக்கா இவங்க பிரச்சனை..!

நட்சத்திரா: சும்மாவே தான் டி..! பேசாம இருந்த அவங்களே டயர்ட் ஆகி விட்ருவாங்க..!

நிலா: மாமவே..! அஞ்சுக்கும் பத்துக்கும் உன்கிட்ட தான் கேட்பாரு..! இவங்கள பாத்தியா.. நம்ம அவர்க் கிட்ட வாங்குற மாறி பேசுராங்க..!

நட்சத்திரா: விடு நிலா..! இப்பப் பாரு அவரை பார்த்தவுடன் என்ன கொஞ்சு கொஞ்சுவாங்கனு..!

அம்மா: என்ன டி அக்காவும் தங்கச்சிவும் குசு குசுன்னு பேசுறீங்க..?! ஆமாம் என் பையன் எங்க..?!

நட்சத்திரா: மேல இருக்காரு அத்தை..!

அதற்குள் எழிலன் வர..!

அம்மா: டேய்..! எப்படி டா இருக்க..?!

எழிலன்: அம்மா..! நீ எப்படி மா இருக்க..?! உன்னைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சு..!

அம்மா: உன்னப் பார்க்காம இருக்கவே முடியல டா..! என் தங்கமே… துரும்பா இளைச்சு போயிட்ட..! என்னடா சாப்பிடுறதே இல்லையா..?! உடம்புல சத்தே இல்லை..! எவ்வளவு ஒல்லியா இருக்கப் பாரு..!

நிலா: அக்கா உன் மாமியாருக்குக் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.! மாமா நல்லா பகாசுரன் மாதிரி இருக்காரு..! இவரப் போய் ஒல்லினு சொல்லிட்டு இருக்காங்க..!

அம்மா: ஏன் டி சாப்பாடு எதுவும் போட மாட்டியா என் பையனுக்கு..! இதான் நீ அவன கவனிச்சிக்கிற லட்சணமா..? இதுக்கு தான் என்னை விட்டு தனிக்குடித்தனம் கூடிட்டு போனியா..?

(சாது மிரண்டால் காடு கொள்ளாது தான்..! ஆனால், காட்டில் எந்த நேரமும் சிங்கம் அமைதியா இருக்காதே..! அப்படி இருந்தால் அது சிங்கமும் இல்லையே..! சிங்கமும் கர்ஜனையை ஆரம்பித்தது..!)

நட்சத்திரா: நான் என்ன ஸ்கூல் நடத்துறேனா அத்தை..? அவர்க்கு வேணும்னா அவர் தான் எடுத்து சாப்பிடனும்.! நான் என்ன ஊட்டியா விட முடியும்..?! விட்ட சாப்பாட நானே மென்னு தரவா..?!

அம்மா: பாரு டா எப்படி பேசுறான்னு..! பேசாம நம்ம வீட்டுக்கு வந்து இருடா..! இல்லை நான் இங்கே வந்து இருக்கேன் இனிமே..!

நட்சத்திரா: யாரு வர வேண்டாம்னு சொன்ன..?!

எழிலன்: விடுங்க வந்ததும் வராததும் சண்டை..! என்னால முடியல..!

அம்மா: இரு டி; உன்னப் பாத்துக்கிறேன்..!

(தொடரும்..)


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.