(இனியனிடம் இருந்து வந்த காதலில்; அவள் தன்னை மறந்து; அவன் மீது அளவு கடந்த பாசத்தையும்; காதலையும் காட்டினாள்..! ஆனால் அன்று அவள் காட்டிய பாசமும், காதலுமே அவள் வாழ்க்கைக்கு தடையாக வரும் என இருவரும் சிறிதும் எதிர்ப் பார்க்கவில்லை..!)
சென்ற வாரம்
வில்லன் 2 : ராம்
வேலை: சகுனி சகுனி… சகுனிக்கு எல்லாம் சகுனி… சகுனியோ சகுனி தான்..!
(இனியனுக்கு அத்திப்பூத்தார் போல, எப்பயாவுது தான் ரொமன்ஸ் வரும், அதையும் வந்து கெடுக்கும் சகுனி இவன் தான்..!)
நட்சத்திரா: எனக்கு பிரியாணி வேணும்..!
இனியன்: இப்போவா, மணி மூணு..! ஒழுங்கா லேப் பண்ணு…
நட்சத்திரா: எனக்கு இப்போ பிரியாணி வாங்கித் தரியா..?! இல்ல எல்லார் முன்னாடியும் கட்டி பிடிச்சு, முத்தம் கொடுக்கவா..?!
இனியன்: அடியேய்..!
அத்தியாயம் 11 : நீர் அலைகள்
நட்சத்திரா: ஹைய்ய, முத்தம் தான..! என்ன உயிரா போகுது..?!
இனியன்: இவ ஒருத்தி, இரு டி மானத்தை வாங்கி தொலைக்காதே..!
நட்சத்திரா: சரி, எனக்கு பிரியாணி வேணும்..!
இனியன்: இப்ப எங்க டி, நான் போய் வாங்குவேன்..?
நட்சத்திரா: அதெல்லாம் எனக்கு தெரியாது..! எனக்கு பிரியாணி வேணும்..!
இனியன்: சரி இரு, ராம கிட்ட வாங்கிட்டு வர சொல்றேன்..!
நட்சத்திரா: என்னமோ பண்ணுங்க..! எனக்கு என்ன..!
இனியன்: அதான..! கொழுப்பு டி உனக்கு..!
நட்சத்திரா: இதுவே எங்க அப்பா கிட்ட கேட்டா, உடனே வாங்கி தருவாரு, தெரியுமா..?
இனியன்: ஆரம்பிச்சுட்டா, சொட்ட தலையன் புராணத்த..! பிரியாணி தான விடு, இப்போ வரும்..!
சிறிது நேரத்தில்..
இனியன்: ராம், இரண்டு பிரியாணி வாங்கிட்டு வா டா..!
ராம்: சார், நான் உங்க கிட்ட படிக்கிற பையன், இப்படி வேலைப் பார்க்குரவன் மாறி பேசுறீங்க..!
(சகுனி வேலையை ஆரம்பிச்சுட்டான்)
இனியன்: டேய் டேய், ரொம்ப பண்ணாத..! தயவு செஞ்சு வாங்கிட்டு வா..!
ராம்: அது சரி, அது என்ன 2 ? யாருக்கு ரெண்டு?
இனியன்: உனக்கு எதுக்கு..? ரெண்டு வாங்கிட்டு வா..!
ராம்: யாருக்குன்னு சொல்லுங்க அப்பதான் வாங்குவேன்…!
இனியன்: மார்க் வேணுமா வேணாமா..?!
ராம்: போறேன் போறேன்..!
அதற்குள்…
நட்சத்திரா: எப்ப வரும்..? எனக்கு பசிக்கிது..!
இனியன்: வரும்போது வரும்..!
நட்சத்திரா: என்னது..?! (முறைத்தாள்)

இனியன்: அய்யோ அவன் கிட்ட பேசின, அதே மாறி உன்கிட்ட பேசிட்டேன்..! மனிச்சிடு தெய்வமே..! திரும்ப ஆரம்பிக்காத..!
நட்சத்திரா: சரி சரி, இதுவே என் அப்பாவா இருந்தா…
இனியன்: அடிச்சு பல்ல உடைச்சிருவேன்..! நீ சாப்பிடுற 2 வாய்க்கு இவ்ளோ பேச்சு..! காது வலிக்கிது..! பேசாம உட்காரு போ..!
நட்சத்திரா: இந்த மிரட்டுற வேலை எல்லாம் இங்க வேணாம்.. சொல்லிட்டேன்..! இன்னொரு தடவ சத்தம் போட்ட, அவளோ தான்..!
இனியன்: சரி சரி..! ராம வேற காணோம்..! (இன்னிக்கு ருத்திர தாண்டவம் தான் போலயே..! )
நட்சத்திரா: ஆமா, அவன எப்படி அனுப்பி விட்டீங்க..?
இனியன்: அதுவா..! அதிகார துஷ்பிரயோகம் பண்ணி அனுப்பி விட்டேன்..!
நட்சத்திரா: என்னது.. (சிரித்துவிட்டாள்)
இனியன்: (அப்பா, இந்த சிரிப்பு வரதுக்குள்ள நம்ம பொழப்பு நாய் பொழப்பா இருக்கு..!) அழகா சிரிக்கிற பாப்பா நீ..!
நட்சத்திரா: மூடு, உன் மனசுல என்ன நினைச்சன்னு எனக்கு தெரியும்..!
(எப்பா முருகா, தயவு செஞ்சு ராம அனுப்பி விடு பா..! என்னால இதுக்கு மேல சாமளிக்க முடியல..!)
முருகனுக்கு கேட்டதோ என்னவோ, ராம் சரியாக வந்தான்..!
ராம்: வாங்கிட்டு வந்துட்டேன்..! வாங்க சாப்பிடலாம்..!
இனியன்: என்னது சாப்பிடலாமா..! குடுத்திட்டு கிளம்பு..!
ராம்: நீங்க வேற, பிரியாணி வாசனை தூக்குது.. நான் சாப்பிட்டு தான் போவேன்..!
சகுனி வந்த வேலையை முடிச்சிட்டான்..!
இனியன்: டேய் சொன்னா கேளு..! நான் இன்னொரு நாள் வாங்கி தரேன் உனக்கு..!
ராம்: அதெல்லாம் முடியாது..! முதல்ல அந்த பொண்ண வெளிய அனுப்புங்க..!
இனியன்: எந்த பொண்ணு..!
ராம்: அதான், முறைச்சிட்டே இருக்குப் பாருங்க..! திமிடுப் பிடிச்ச பொண்ணுப் போல..!
இனியன்: உனக்கு நான் என்ன டா பாவம் பன்னேன்..! இப்படி ஒரு பிரியாணில..! (சொல்லவும் முடியல், மெல்லவும் முடியல..)
நட்சத்திரா: சரி, நீங்க சந்தோஷமா சாப்பிடுங்க..! நான் போறேன்..!
இனியன்: நில்லு மா..! மா..! மா..!
ராம்: விடுங்க சார், வாங்க நம்ம சாப்பிடலாம்..! பிரியாணி காத்திருக்கு..!
இனியன்: சொன்னப்பயலே டேய்..! உனக்கு இனிமே லேப்ல முட்டை தான் டா..!
(முருகா..! காப்பாத்திரு பா..! என்னால இதுக்கு மேல முடியல..)
இனியன்: அம்மா..! லீவ் போட்டுடேன்..! கால்ல கூட விழறேன்..! ப்ளீஸ் வா, தலப்பாகட்டி போலாம்..!
நட்சத்திரா: என்ன ஏன் கூப்பிடுற, போய் ராம் கிட்ட கேளு… நீங்க இரண்டு பேருமே போங்க; லவ் பண்ணுங்க; கல்யாணம் பண்ணுங்க; குழந்தைக் கூட பெத்துக்கோங்க..!
இனியன்: என்ன டி..!
நட்சத்திரா: ஓ.. முடியாதுல..! தத்து எடுத்துக்கோங்க..! என் பின்னாடி வந்த அவளோதான்..!
(சுத்தம், அசிங்கப் பட்டது தான் மிச்சம். இதுக்கு அப்புறம், அவ எப்போ மலை ஏறி; நான் எப்போ பேசி..! டேய் முருகா, நீ மட்டும் 2 கட்டிட்டு நிம்மதியா இருக்க..! இங்க பாரு ஒன்னுக்கே நாக்கு தள்ளுது..!)
வில்லி 3
பெயர் : விஜி (விஷம்)
வேலை : வேவு பார்ப்பது
நட்சத்திரா: மேம்.. வாஷ் ரூம்..!
விஜி: சரி..!
குறிப்பு: வாஷ் ரூமும், இனியன் ரூமும் பக்கது பக்கதில் தான்..! இனியனை பார்க்க மட்டுமே ஒரு நாளில் 10 முறை வாஷ் ரூம் போவாள்..!
விஜி: நில்லு..! இந்த வாஷ் ரூம்ல தண்ணி வரல..! நீ கீழ இருக்குறத பயன் படுத்திக்கோ..!
நட்சத்திரா: (சரியான வில்லி..! வேணும்னே பண்ணுறா..!)சரி மேம்..!
( நட்சத்திரா வெளியே வருவதைப் பார்த்து, இனியன் அவசர வேலைப் போல் வெளிய வந்தான்.! ஆமாம் அவசர வேலை தான்..! படிக்கட்டில் அவளை இடிக்க வேண்டுமே..!)
அதற்குள் விஷம் வந்தது..!
விஜி: என்ன சார்.. ரொம்ப ஸ்மார்ட்டா ஆகிட்டே போறீங்க..!
இனியன்: அதெல்லாம் ஒன்னும் இல்லை மேடம்..! சும்மாதான்..!
நட்சத்திரா: ஆமா ஆமா..! சார் ரொம்ப ஸ்மார்ட்ட்ட்ட்…! (நக்கல் சிரிப்புடன்)
விஜி: நீ வாஷ் ரூம் தான கேட்ட..?! போறியா.. இல்ல க்ளாஸுக்குப் போறியா..?
நட்சத்திரா: போறேன்..! (இவ மட்டும் இளிச்சு இளிச்சு பேசுவாலாம்..! ஆனா நம்ம பேசினா மட்டும் எரிஞ்சு தள்ளிடும்..சரியான பைத்தியக்காரி..!)
(போகும் போது நட்சத்திராவின் கண் அசைவில், இனியன் குட்டிப் போட்ட பூனைப் போல் அவள் பின்னாடியே சென்றான்..!)
நட்சத்திரா: அவ கிட்ட பேசாத..! எனக்கு அவளை பிடிக்கலை..!
இனியன்: நீ சொல்லிட்டல்ல..! இனிமே பாரு..!
மேல வந்த அடுத்த நொடியே..!
விஜி: என்ன சார், உங்களை ஸ்மார்ட்னு எல்லாம் சொல்லுறேன்..! நீங்க எதுவும் சொல்லல..?!
இனியன்: உங்களுக்கு என்ன மேடம்..! அம்சம்மா மகாலட்சுமி மாறி இருக்கீங்க..!
நட்சத்திரா: திருந்தவே மாட்ட டா நீ..!
வில்லன் 4
பெயர்: கிருஷ்ணன்
வேலை: எரிச்சலை கிளப்புவது
நட்சத்திரா: குட் மார்னிங் சார்
கிருஷ்ணன்: என்னமா.. எனக்கு எல்லாம் சொல்ற..! இனியனக்கு மட்டும் தான் சொல்லுவேன்னு நினைச்சேன்..!
நட்சத்திரா: அப்படி எல்லாம் இல்ல சார்..!
கிருஷ்ணன்: நானும் பாத்துட்டு தான் இருக்கேன்; நீ பேசுறதும்; இனியன் சிரிக்கிறதும்..! என்னவோ சரியே இல்ல..!
நட்சத்திரா: குட் மார்னிங் சொன்னது ஒரு பிரச்சனையா..?!
கிருஷ்ணன்: குட் மார்னிங் சொன்னது இல்ல..! ஆனா நீ என்கிட்ட சொன்ன பாத்தியா அதுதான் பிரச்சனை..!
நட்சத்திரா: சந்தோஷம், இனிமே சொல்லவே இல்ல சார்..! (சரியான பைத்தியமா அலையுது..! நமக்கு மேல பெரிய லூசா இருக்கு எல்லாம்..!)
வில்லி 5
பெயர்: ராதா
வேலை: இனியனை மயக்குவது (சக்காலத்தி என்றும் சொல்லலாம்)
இனியன்: நான் உன்கிட்ட பேசணும்.. உடனே வா..!
நட்சத்திரா: என்ன ஆச்சு, என்ன பிரச்சனை…?
இனியன்: இல்ல; உன்னோட டீச்சர் ராதா… என்ன ப்ரொபோஸ் பண்ணிச்சு..! கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லுது..!
(அவளுக்கு தலையில் இடியே விழுந்தது…! ஆனால் அவர் சொன்னதைக் கேட்டு இல்லை..!)
நட்சத்திரா: சும்மாவே லேப்ல ஒன்னும் வராது..! நானே சும்மா கம்புட்டரை பார்த்து தடவிட்டு இருப்பேன்; இப்போ நம்ம மேட்டர் தெரிஞ்சா கண்டிப்பா முட்டைதான். போச்சு போச்சு..!
இனியன்: நான் என்ன டி சொல்றேன், லூசு மாறி நீ என்னடி பேசுற..!
நட்சத்திரா: நீ தான் டா லூசு, உன்னால தான் எல்லாமே..! போச்சு போச்சு.! என் லேப் போச்சு..!
இனியன்: உன் கிட்ட சொன்னேன் பாரு; என் புத்திய செருப்பால அடிக்கனும்..!
நட்சத்திரா: மூடிட்டு போ டா.! நான் போறேன்..! நீ உன் ராதாக் கூடயே ரொமான்ஸ் பண்ணு..! லூசு லூசு..! நீ தான் லூசு.!
(இப்படி எதையுமே கேட்காத இனியனை எப்படி புடிச்சது..?! ஒரு வேலை, அது தான் காதல் போல..! அவர் செய்யுற எல்லா தப்பும்; எல்லா சொதப்பல்லும் காதலின் வெளிப்பாடாகவே தெரிந்தது..!)
இன்று..!
மணி 4
நிலா அழுகும் சத்தம் கேட்டது
நட்சத்திரா: என்ன டி ஆச்சு..?! ஏன் டி அழுகுற..?
நிலா: முடியல அக்கா..! நீ ரொம்ப பாவம்..! உன்ன தெரியாம கட்டிக் கொடுத்திட்டோம்..! உன் மனசு எவ்ளோ கஷ்டப் பட்டு இருக்கும்..?! மன்னிச்சிடு அக்கா..!
நட்சத்திரா: ஏன் டி பழையத பேசுற..!
நிலா: அதுக்கு மேல படிக்க முடியல அக்கா..! கஷ்டமா இருக்கு..!
நட்சத்திரா: அய்யோ சாமி..! நீ தனியா படி, அழு, நான் போய் என் புருஷன் கூடப் படுத்துக்குறேன்..!
நிலா: அக்கா..! சரி நீ போ…! என்ன கொஞ்சம் தனியா விடு..!
நட்சத்திரா: போ டி லூசு..!
நிலா: அய்யோ லூசுன்னு சொல்லாத அக்கா..! இன்னும் அழ வருது..!
நட்சத்திரா: பல்லத் தட்டி கையிலக் கொடுப்பேன்..! மூடிட்டு படு போ..!
நிலா: அய்யோ..! இதுவும் அழ வருது அக்கா..!
நட்சத்திரா: ஆஆஆஆஆ..! பைத்தியம் புடிக்குது..!
(எழிலனிடம் சென்றாள்)
எழிலன்: ஏய் லட்டு..! என்ன டி இந்த நேரத்துல..?!
நட்சத்திரா: நீங்க இன்னும் தூங்கலையா..?!
எழிலன்: நீ இல்லாம தூக்கம் வரலை..!
நட்சத்திரா: பார்ரா..!
எழிலன்: (கட்டி இழுத்து கட்டிலில் சாய்த்த உடன்..) வா டி என் மரிக்கொழுந்தே..!
நட்சத்திரா: எனக்கு தூக்கம் சொக்குது..! வெறுப்பு ஏத்தாதீங்க..!
எழிலன்: அடியேய், நிஜமாவா..?!
(தொடரும்..)
0 Comments