கல்லுக்குள் இத்தனை ஈரமா என்பது போல் வேதாளத்துக்குள் இத்தனை காதலா; என்ற வியப்பில் அவள் நாட்கள் ஓடின..!

சென்ற வாரம்:

இனியன்: கண்டிப்பா சொல்லனுமா..?!

நட்சத்திரா: ஆமா..! சொல்லியே ஆகனும்..!

இனியன்: உன்ன முதல் முதலா.. நல்ல அரக்கு நிற சுடிதார்ல பார்த்தேன்..! தேவதை மாறி..! அந்த குட்டி பொட்டு..! அரக்கு வளையல்..! வெள்ளி கொலுசு..! குட்டி முக்குத்தி..! தேவதை டி நீ..! என் தேவதை..!

நட்சத்திரா: இவளோ நியாபகம் இருக்கா..!

இனியன்: இதுக்கு மேலையும் இருக்கு..!

நட்சத்திரா: பார்ரா..! அப்புறம்..?

அத்தியாயம் 10 : நிஜமாகிய நிழல்

இனியன்: போமா வெட்கமா இருக்கு..!

நட்சத்திரா: அய்யோடா..! சொல்லுங்க சொல்லுங்க..!

இனியன்: அது, உனக்கு தெரியுமான்னு தெரியல… ஆனா அன்னைக்கு உன்ன பாத்த போது, பயங்கர காத்து, மழை வர மாறி இருந்தது, உன்கிட்ட வந்தபோது உனக்கே தெரியாம, அந்த அரக்கு சுடிதாரோட, வெள்ள துப்பட்டா என் முகத்துல பட்டுச்சு..! ஐயோ..! செத்துட்டேன் ஒரு நிமிஷம்..! அந்த வாசனை..! அப்பப்பா..! இப்போ நினைச்சா கூட உடம்பெல்லாம் என்னவோ பண்ணுது..! அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது..!

நட்சத்திரா: இவ்ளோ ரசிச்சீங்களா..?

இனியன்: இதுக்கு மேலயும் ரசிச்சேன்..! அடுத்தநாள் நீ என்கிட்ட சைன் வாங்க வர்ரதப் பார்த்து ஓடிப்போய், தலை எல்லாம் சரி பண்ணி, சட்டை எல்லாம் டக்-இன் பண்ணி, நீ வரதுக்குள்ள போய் உட்கார்ந்துட்டேன்..! இதுல என்ன கொடுமைனா, உன்னப் பார்த்துட்டே.. தப்பான இடத்துல சைன் பண்ணிட்டேன்..!

நட்சத்திரா: அடப் பாவி மனுஷா..! வேற என்ன எல்லாம் இருக்கு..?

இனியன்: நிறையா இருக்கு..! நீ லேட்டா வர்ரன்னு சண்டைப் போட்டு; வெட்ட வெயில்ல டியூட்டி வாங்கிட்டு வந்து நிற்பேன்..! ஒரு மணி நேரம், உன்னப் பார்த்தா..! வெயிலும் தெரியாது, கால் வலியும் தெரியாது..! பல்ல காட்டிடே உன்னப் பார்த்துட்டே நிப்பேன்..!

நட்சத்திரா: நிஜமாவா..? அப்போ என் என்ன எப்பப்பார்த்தாலும் திட்டிட்டே இருந்தீங்க..!?

இனியன்: அதுவா..! உன் கிட்ட ஏதாவது பேசனும்னு ரொம்ப ஆசை..! ஆனா முடியல..! அதான் திட்டுற சாக்குல பேசுவேன்..! உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும் டி..!

நட்சத்திரா: சரியான சாடிஸ்ட்டு..!

இனியன்: வேற எதனாச்சும் தெரியணுமா..! மேடத்துக்கு..?!

நட்சத்திரா: வேண்டாம், வேண்டாம், உங்க லட்சணம் தான் சிம்போசியம்லயே தெரிஞ்சதே..! (சிரித்து விட்டாள்)

இனியன்: அது… விடு விடு..! உன்ன யாரு அவ்ளோ அழகா வரச்சொன்னா..? நல்லா வெள்ளை புடவைல கருப்பு சிவப்பு பார்டர் போட்டு..! கை நிறையா செக்கச்செவேன்னு மருதாணி வச்சு..! உன் நிறத்துக்கும் மருதாணிக்கும்..! அது என்னவோ அரக்கும் வெள்ளையும் உன் மேல பட்டா, அழகுக்கே அழகு சேர்க்குற மாறி..! அழகு சிலை டி நீ..! இன்னும் கண்ணுக்குள்ளையே நிக்குது..!

file-2904901

நட்சத்திரா: போதும் உங்க வர்ணிப்பு..! தாங்கல..!

இனியன்: அது என்ன டி, பொண்ணுங்க மட்டும்..! உள்ளுக்குள்ள நல்லா இருந்தாலும்..வெளிய பிடிக்காத மாறியே நடிப்பீங்க..!

நட்சத்திரா: ஓ..! சார்க்கு எத்தன பொண்ணுங்க சகவாசம் உண்டு..!?

இனியன்: அய்யோ சாமி..! தெரியாம சொல்லிட்டேன்..!

நட்சத்திரா: ஆமா..! இப்போ தான் நியாபகம் வருது.. அப்போ உங்க முன்னால் காதலி…! கல்யாணம்னு சொன்னதெல்லாம் பொய்யா…?!

இனியன்: ஐயோ..! அதெல்லாம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகுது..! திடீர்னு கல்யாணம்னு சொன்னதும், என்ன காதலிச்ச பாவத்துக்கு அந்த பொண்ணு கஷ்ட படுதேன்னு ஒரு ஆதங்கம் தான்..!

நட்சத்திரா: அப்போ ஏன் கல்யாணம் பண்ணிக்கல..?!

இனியன்: அவங்க வீட்டுல எதிர்ப்பார்க்கிற வசதி என்கிட்ட இல்லமா..! நான் அப்போ படிச்சிட்டு இருந்தேன்..! இப்போ கை நிறையா காசு வந்தாலும், பேசின வார்த்தை மறக்க முடியலை..! அதான் பிரிஞ்ட்டோம்..!

நட்சத்திரா: சரி சரி..! ரொம்ப உருகாதீங்க..!

இனியன்: தண்ணிக் குடி..! வயிரு எரியுது பாரு..!

நட்சத்திரா: போடா..! உர்ராங்கோட்டான்..!

இனியன்: வயசுல பெரியவன் டி நானு..!

நட்சத்திரா: அப்போ அண்ணான்னு கூப்பிடவா..?!

இனியன்: தெய்வமே..! ச்ச..! இனியன்னு சொன்னா ஊரே பயப்படும்..! இங்க பாரு.. உனக்கு நான் பயப்படுரேன்..! காலக் கொடுமை..!

நட்சத்திரா: (சிரித்துக்கொண்டே) ஆமா..ஆமா ஊரே பயப்படும்..!

இனியன்: உன் குரலைக் கேட்டனும் போல இருக்கு..! கால் பண்ணவா..?!

நட்சத்திரா: இப்போவா..! மணி 02:00..!

இனியன்: சரி விடு..!

( அடுத்த இரண்டு நொடியில்..! நட்சத்திராவின் பெயர் இனியனின் போனில் தெரிந்தது..!)

இனியன்: தான்க்ஸ் கண்ணம்மா..!

நட்சத்திரா: கண்ணம்மாவா..?

இனியன்: ஆமா..! எனக்கு அந்த பெயர் ரொம்ப பிடிக்கும்.. அதான்..!

நட்சத்திரா: சரி.. சரி…! வேற என்ன எல்லாம் பிடிக்கும்..!

இனியன்: உன்ன..!

நட்சத்திரா: ப்பா..! போதும் போதும்..! முடியல..!

(காதலிக்கும் போது என்ன பேசினாலும் நல்லா தானே இருக்கும்..!)

இனியன்: சரி..சொல்லு, போன் பன்னிட்ட..!

நட்சத்திரா: சும்மா..! அப்படியே வர்ணிப்ப இன்னும் கேட்கலாம்னு தான்..!

இனியன்: அய்யோடா..! இப்போயாச்சும் நீ போன் பேசுற..! இதுக்கு முன்னாடி எல்லாம் உன் ஞாபகம் வரும் போது; உன்னோட விடைத்தாள எடுத்து பார்த்து ரசிப்பேன்..! உன் போட்டோவ ஆயிரத்து எட்டு வாட்டி பார்ப்பேன்..! ஏன் அதுல தான் தினமும் கண்ணே முழிப்பேன்..! உனக்கு தெரியாம உன் குரலை ரெக்கார்ட் பண்ணி.. அடிக்கடி போட்டுக் கேட்பேன்..!

நட்சத்திரா: யோவ்..! பார்க்கத்தான் டிப்-டாப்! பண்ணுறது எல்லாமே பொறுக்கி தனம்..! பொறுக்கி.! பொறுக்கி..!

இதெல்லாம் எப்படி இத்தனை நாளா எதுமே சொல்லாம இருந்தீங்க..? சரியான கல்லு தான் நீங்க..!

இனியன்: அது உன் மேல பயம் தான்..!

நட்சத்திரா: பயமா..? நான் என்ன கடிச்சா திங்க போறேன்..!

இனியன்: அடிச்சிட்டேனா..?

நட்சத்திரா: அட போங்க..! உங்களப் போய் நான் அடிப்பேனா..?!

இனியன்: யாருக்கு தெரியும்..! எந்தப் புத்துல எந்த பாம்பு இருக்குனு..?!

நட்சத்திரா: அப்போ நான் பாம்பா..?!

இனியன்: அய்யோ..! இல்லமா..! ரொமாண்டிக்கா பேசலாம்னு முயற்சி பண்ணேன்..! வேலைக்கு ஆகல.. சரண்டர் ஆகிடுறேன்..!

நட்சத்திரா: (சத்தமாக சிரித்து விட்டாள்..)

இனியன்: இந்த சிரிப்புல தான் டி விழுந்தேன்..!

நட்சத்திரா: போதும்..! தூக்கம் வருது..! டாட்டா..!

இனியன்: இனிமே எனக்கு எங்க தூக்கம் வரப் போகுது..! டாட்டா கண்ணம்மா..!

இப்படியே நாட்கள் விடிய விடிய பேச்சிலும், கொஞ்சலிலும் ஓடின..! ஆனால் திரைப்படத்தில் கூட இத்தனை வில்லன்/வில்லிகள் வந்தது இல்லை..!

வில்லி 1: சந்தியா

வேலை : குற்றால அருவி போல் இனியனிடம் வழிவது

சந்தியா: என்ன சார் சாப்பிடுறதே இல்லையா..?! துரும்பா இளச்சிப் போய்டீங்க..!

இனியன்: (மன்மதன் ஆச்சே..! லீலையை ஆரம்பித்து விட்டார்) ஆமா மா..! வேலை அதிகம்..! சாப்பாடும் சரி இல்லை..!

சந்தியா: அச்சச்சோ..! நான் வேணும்னா சாப்பாடு கொண்டு வரவா..?!

இனியன்: உனக்கு எதுக்கு மா சிரமம்..!

சந்தியா: உங்களுக்கு செய்யுரதுல எனக்கு என்ன சிரமம்..?! அதெல்லாம் பாக்கியம்..!

(அதற்குள் நட்சத்திரா உள்ளே வர..)

இனியன்: இன்னும் என்னப் பேச்சு..! எல்லா பொண்ணுங்களும் கிளம்புங்க..! சும்மா லேப் செய்யாம உதவாத கதை பேசிகிட்டு..!

சந்தியா: அதுக்குள்ளயா சார்..!

(நட்சத்திரா முறைக்க; இனியன் திணற; அவள் நடிக்க…)

இனியன்: தயவு செஞ்சு கிளம்பு மா..!

(அவள் சென்ற பின்)

நட்சத்திரா: என்ன நடக்குது இங்க..?

இனியன்: ஒண்ணுமே இல்லையே..! சும்மா..!

நட்சத்திரா: பார்த்தா அப்படி தெரியலையே..!

இனியன்: சத்தியமா, நான் பாவம் டி..! அவ தான் வேணும்னு பேசினா..!

நட்சத்திரா: ஊசி இடம் கொடுக்காம நூல் உள்ள நுலையுமா..?!

இனியன்: இதெல்லாம் அநியாயம் பாப்பா..! அவ மேல தான் தப்பு..! மனிச்சிடு..! இனிமே அவக்கிட்ட பேசவே மாட்டேன்..!

நட்சத்திரா: இத சும்மார் 500 வாட்டி சொல்லிருப்பீங்களா…?!

இனியன்: திட்டாத டி; பயமா இருக்கு..கண் எல்லாம் கலங்குது பாரு..!

(அதற்குள் யாரோ வர..!)

இனியன்: (சத்தமாக..) என்ன மா..! சும்மா கத்தினாலே பயப்படுற..! பொண்ணுனா தைரியாமா இருக்கனும்..!

நட்சத்திரா: (வா வா..! கண்ணம்மா.. பொண்ணம்மான்னு வருவல..அப்போ இருக்கு கச்சேரி..!) சரிங்க சார் (சார் மட்டும் அழுத்தமாக)..!

வில்லன் 2 : ராம்

வேலை: சகுனி சகுனி… சகுனிக்கு எல்லாம் சகுனி… சகுனியோ சகுனி தான்..!

(இனியனுக்கு அத்திப்பூத்தார் போல, எப்பயாவுது தான் ரொமன்ஸ் வரும், அதையும் வந்து கெடுக்கும் சகுனி இவன் தான்..!)

நட்சத்திரா: எனக்கு பிரியாணி வேணும்..!

இனியன்: இப்போவா, மணி மூணு..! ஒழுங்கா லேப் பண்ணு…

நட்சத்திரா: எனக்கு இப்போ பிரியாணி வாங்கித் தரியா..?! இல்ல எல்லார் முன்னாடியும் கட்டி பிடிச்சு, முத்தம் கொடுக்கவா..?!

இனியன்: அடியேய்..!

(தொடரும்)


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.