(பரிட்சையில் வாங்கிய மார்க்கைப் பார்த்து ஏறிய வேதாளம்; இவள் பேசாததைக் கண்டு அகல பாதளத்தில் மொத்தமாக சரண்டர் ஆகி விட்டது..!)

சென்ற வாரம்:

இனியன்: எனக்கு நீ வேணும்..!

நட்சத்திரா: (சுட்டு எரிக்கும் பார்வையுடன்) என்னது…?

இனியன்: தப்பா இல்ல டி, ஆ..! ஊ..!னா முறைக்காத..! முழுசா கேளு… பொறுமை கெட்டவளே..!

நட்சத்திரா: நான் வேணும்னு சொன்னா..!

இனியன்: ஆமா எனக்கு நீ வேணும்; என் கூட; என் அம்மாவா; என் மறு பாதியா; என் மகளா; ஏன் என்னுடைய மொத்த உலகமா நீ மட்டும்; எப்போதும் இருப்பியா..?

அத்தியாயம் 9 : செம்புலப் பெயநீர்

நட்சத்திரா எதையும் பேசாமல் ஜன்னலைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்..!

file-5084990

இனியன்: இருப்பியா மா..?

நட்சத்திரா: (கலங்கிய கண்களுடன்) சும்மா பொய் சொல்லாதீங்க..! உங்களுக்கு தான் என்னப் பார்த்தாலே பிடிக்காதே..! நான் பேசலைன்னு சமாதனாப்படுத்த எதாவுது சொல்லாதீங்க..!

இனியன்: ஏய், சத்தியமா எனக்கு உன்ன மட்டும் தான் டி பிடிக்கும்..!

நட்சத்திரா: நான் நம்ப மாட்டேன்..!

இனியன்: அது சரி; என் வரலாறு அப்படி, உன்ன சொல்லிக் குத்தம் இல்ல..! சரி இங்க பாரு; என் கண்ணைப் பாரு..!

( இனியனின் கைகள் அவள் தோள்பட்டையைப் பிடிக்க; அந்த அழுத்தம் அவர் கூறிய அத்தனையும் உண்மையென நிரூபித்தது..)

இப்போ சொல்லு, எனக்கு எல்லாமுமாக நீ இருப்பியா..?

நட்சத்திரா: இருப்பேன்..! கண்டிப்பா.. இருப்பேன்..!

ஆமா…! ஆனா… இதெல்லாம் எப்போல இருந்து..?!

இனியன்: அது பார்த்த முதல் தடவையில இருந்தே..!

நட்சத்திரா: என்னது பார்த்த முதல் தடவையா..?! (வாய் தானாக ஆச்சிரியத்தில் திறந்தது)

இனியன்: ஆமா..!

நட்சத்திரா: அப்போ ஏன்.? என்கிட்ட நாய் குலைக்கிற மாதிரி “வல் வல்னு” பேசினீங்க..?

இனியன்: என்னது நாயா..?!

நட்சத்திரா: அய்யோ உளறிட்டேனே..! விடுங்க விடுங்க..! சரி பதில சொல்லுங்க..!

இனியன்: அது உன்னப் பார்த்தாலே பல்லு 32 தெரியுது..! அத மறைக்கத்தான் இந்த கோவம் எல்லாம்..!

(உலகமே சுற்றியது அவளுக்கு..!)

நட்சத்திரா: நிஜமாத்தான் சொல்றீங்களா..!

இனியன்: ஆமா கண்ணம்மா…!

நட்சத்திரா: சார்..! என்னது கண்ணம்மாவா….!

இனியன்: ஆமா..! பாத்து வாய நீ பொளக்குறதப் பாத்த வாயில இருக்க ஜவ்வு கிழிஞ்டும் போல..! அப்படியே சார்ர்ர்ன்னு சொல்லுறத விட்டுட்டு, வாய் நிறைய…மாமான்னு கூப்பிடுறியா..?!

நட்சத்திரா: இருங்க.. இதுக்கே நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு..!

இனியன்: ஏய் நானும் மனுஷன் தான்..! என்ன கொஞ்சம் கோவம் வரும்..!

நட்சத்திரா: கொஞ்சமா..?!

இனியன்: சரி விடு, அந்த மாமா..?!

நட்சத்திரா: முடியாது முடியாது..!

இனியன்: சரி உன் இஷ்டம் போல கூடப்பிடு..! ஆனா..! சார் மட்டும் வேண்டாம் குட்டிமா..!

நட்சத்திரா: யோவ், குட்டிமாவா..! இத்தன நாளா இதெல்லாம் எங்கய்யா வச்சி இருந்த..?

இனியன்: விடு மா..!

நட்சத்திரா: நான் இனியன்னு பேர் சொல்லியே கூப்பிடுக்கிறேன்..!

இனியன்: உனக்கில்லாததா… தாராளமா கூப்பிட்டுக்கோ….!

நட்சத்திரா: போதும் போதும்..! பூதம் தேடும்..! டாட்டா..!

இனியன்: அம்மா..! அம்மான்னு கூப்பிட்டுக்கவா…?!

நட்சத்திரா: ம்ம்ம்ம்..!

இனியன்: கையைக் குடு..!

நட்சத்திரா: நேரம் ஆகுது..! நான் போனும்..! (ஆனால் கையையும் நீட்டினாள்..)

இனியன்: (கையைப் பிடித்து..!) அம்மா..! நான் விளையாட்டுக்கு சொல்லல எதையுமே..! விட்டுட்டு போய்டாத டி..! எந்த நிலைமை வந்தாலும், உன் கால சுத்தி வர நாய் மாறி, உன் பின்னாடி மட்டும் தான் இருப்பேன்..! விட்டுட்டு போய்டாத டி…!

நட்சத்திரா: என்ன வார்த்தை இதெல்லாம்..! கண்டிப்பா போக மாட்டேன்..! ஆனா.. இப்போ பூதம் தேடும்..! டாட்டா..!

(நினைப்பதெலாம், நடக்கிறதுக்கு இது என்ன சினிமாவா..! வாழ்க்கை ஆச்சே..! இதமான இந்த தென்றல்; புயலாக மாறும் என்று தெரிந்து இருந்தால்; மனக் கதவை எப்போதோ பூட்டி இருப்பாள்..! விதி வலியது..!)

க்ளாஸ்க்குள் சென்றாள்.. எப்போதும் இல்லாத அளவிற்கு நட்சத்திரா முகத்தில் அவ்வளவு பிரகாசம்; அதே சமயம் காணாத காட்சியாக, கயலின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது…!

பூதம்: எதுக்கு போன..?!

நட்சத்திரா: அது வந்து… ரெக்கார்டு காணோம்… அதான்..!

பூதம்: இனிமே என் க்ளாஸ்ல போகக் கூடது..! சொல்லிட்டேன்..! சரியா..?!

நட்சத்திரா: சரி மேம்..!

உள்ளே சென்று உட்கார்ந்ததும்..!

கயல்: என்ன நடந்துச்சு..?!

நட்சத்திரா: ஒன்னும் இல்ல..! ரெக்கார்டு தான்..!

கயல்: ரெக்கார்டுக்கு தான் ஆனந்த கண்ணீர் விட்டுட்டு வந்தியா..?!

நட்சத்திரா: அது.!

கயல்: இப்போ என்னவாம் அந்த ஆளுக்கு..?!

நட்சத்திரா: மரியாதையா பேசுடி..! உனக்கு அவர் அண்ணன் மாதிரி..!

கயல்: எங்க கொஞ்சம் வாயை திற..!

நட்சத்திரா: எதுக்கு..?

கயல்: முதல் நாள் அவரோட மொத்த பரம்பரையே கழுவி ஊத்தின அந்த வாயான்னு பார்க்கதான்..!

நட்சத்திரா: ஐய்ய..! ப்பே..!

கயல்: சரி சொல்லு.. என்ன ஆச்சு..?!

நட்சத்திரா: அதுவா..! பூதம் பார்க்குது…! அதப் பார்த்துப் பேசு..!

கயல்: நீ மூடிட்டு சொல்லு..!

நட்சத்திரா: இனியன் சொல்லிட்டாரு..!

கயல்: என்னத்த..?!

நட்சத்திரா: அதான் ஐ லவ் யூ..ன்னு..! சொல்லிட்டாரு..!

கயல்: என்னது…?! (அதிர்ச்சியில் கத்தி விட்டாள்)

அவளோதான்..! பூதம் உடனே படம் எடுத்தது..!

பூதம்: நட்சத்திரா நீ கிளாஸில் இல்ல; கிளாஸே அமைதியா இருக்கு..! உன்னால தான் எனக்கு டிஸ்டர்ப் ஆகுது…! கிளாஸ் எடுக்க முடியல..! கவனிக்கிற கயல் கூட உன்னால கெட்டுப் போறா..! வெளியப்போ முதல்ல..! கயல், நீயும் தான்..!

நட்சத்திரா: (ஆமா..! ஆடத் தெரியாதவளுக்கு மேட கோணையாம்..!) சரி மேம்…

வெளிய வந்தவுடன்..!

நட்சத்திரா: சகுனி..! உன் புத்திய காட்டிடல..! எருமை..!

கயல்: ஒரு உணர்சி வசத்துல கத்திட்டேன் டி..! விடு இதுக் கூட நல்லா இருக்கு..! இப்போ தெளிவா சொல்லு..!

நட்சத்திரா: சொன்னாலும் திட்டுவ.. சொல்லாட்டியும் திட்டுவ..! சரி சொல்லுறேன்..!

கயல்: சொல்லு, அவர் சொன்னது இருக்கட்டும்; நீ என்ன பதில் சொன்ன..?!

நட்சத்திரா: சரின்னு சொல்லிட்டேன்.!

கயல்: ஏன் டி..!

நட்சத்திரா: எனக்கு உண்மைவே புடிச்சிருக்கு கயல் அவர..! இதுக்கு மேல என்கிட்ட பதில் இல்ல..!

கயல்: சரி விடு..! எல்லாம் நல்லாதவே நடக்கட்டும்..! ஆனா ஒன்னு நியாபகம் வச்சிக்கோ..! அவரோட வேலை, உன்னோட படிப்பு, உங்க இரண்டு பேர் மானமும் உன் கையில மட்டும் தான் இருக்கு..! பாத்து நடந்துக்கோ..!

நட்சத்திரா: புரியுது..! எந்த பாதிப்பும் வராது..! இது இனியன் மேல சத்தியம்..!

கயல்: சரி..! அவருக்கு உன்ன எப்படி புடிச்சது..?!

நட்சத்திரா: தெரியலையே.. கேட்டு சொல்லவா..?

கயல்: சரி டி..!

அன்றிரவு மெஸ்ஸேஜில்..!

நட்சத்திரா: இருக்கீங்களா..?!

இனியன்: சொல்லு மா..!

நட்சத்திரா: உங்களுக்கு எப்படி என்ன பிடிச்சது..?!

இனியன்: ஏன் மா இன்னும் நம்பிக்கை வரலையா..?

நட்சத்திரா: இல்ல..! ஆசையா இருந்திச்சு அதான் கேட்டேன்..!

இனியன்: குட்டச்சி ஏவி விட்டாலா..?!

நட்சத்திரா: ஆமா..! சரி சொல்லுங்க..!

இனியன்: கண்டிப்பா சொல்லனுமா..?!

நட்சத்திரா: ஆமா..! சொல்லியே ஆகனும்..!

இனியன்: உன்ன முதல் முதலா.. நல்ல அரக்கு நிற சுடிதார்ல பார்த்தேன்..! தேவதை மாறி..! அந்த குட்டி பொட்டு..! அரக்கு வளையல்..! வெள்ளி கொலுசு..! குட்டி முக்குத்தி..! தேவதை டி நீ..! என் தேவதை..!

நட்சத்திரா: இவளோ நியாபகம் இருக்கா..!

இனியன்: இதுக்கு மேலையும் இருக்கு..!

நட்சத்திரா: பார்ரா..! அப்புறம்..?

(தொடரும்..)


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.