(தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் மட்டுமே என்பதை போல் பேசிய பேச்சில்; 1000 பெரியாரும், 1000 பாரதியும் ஒன்று கூடி வந்தால் கூட, திருந்தாத சில ஜென்மங்கள் பட்டியலில் நிலாவும் சேர்ந்தாள்..)
சென்ற வாரம்:
நிலா: அக்கா, உன் கிட்ட ஒன்னு கேட்பேன்…! திட்ட மாட்டியே..!
நட்சத்திரா: சொல்லு..!
நிலா: அது வந்து..
நட்சத்திரா: வந்து…?
நிலா: டைரியில் பாதி தான் இருந்தது..! இனியன் நம்பரை எப்படி வாங்கின..?
நட்சத்திரா: ரொம்ப முக்கியம்..! மூடிட்டு தூங்கு..!
நிலா: ப்ளீஸ்க்கா….! ஆர்வமா இருக்கு..!
நட்சத்திரா: தூங்குடி பேசாம..!
நிலா: அக்கா.. அக்கா..! ப்ளீஸ் கா..!
நட்சத்திரா: சரி, நான் வாங்கல..! அவர் தான் மெசேஜ் பண்ணார்..!
நிலா: அவரா..! எப்படி? எப்போ? என்னன்னு?
அத்தியாயம் 7 : கானல் நீர்
நட்சத்திரா: என்ன ஒரு ஆர்வம்…!
நிலா: கேலி பண்ணாம, சொல்லுக்கா..!
இரண்டு நிமிடங்களுக்குப் பின்…..
இந்தா டைரி, நீயே பார்த்துக்கோ, என் உயிரை எடுக்காத…!
நிலா: பார்ரா..! சூப்பர், சூப்பர்..! ஆமா… நீ ஏன், எப்ப பார்த்தாலும் மூன்றாம் நபர் கண்ணோட்டத்திலயே எழுதுற…?
ஒரு இடத்தில் கூட “எனக்கு, நான், என்னோட”ன்னு சொல்லாம, “அவளுக்கு, அவள், அவளோட”ன்னு; உன் கதையை, நீயே யாரையோ சொல்ற மாதிரி எழுதி இருக்க..?
நட்சத்திரா: இங்க பாரு நிலா, நம்ம வாழ்க்கையோட ஒவ்வொரு கட்டத்திலையும், புது நம்மள வாழ்க்கை எதிர்பார்க்கும்..! இனியன் பார்த்த நட்சத்திராவோ.. இனியன் காதலிச்ச நட்சத்திராவோ… இப்போ இல்லை..! இப்போ இருக்கிறது எல்லாமே எழிலன்; எழிலனொட பாசத்துக்கு ஏங்குற நட்சத்திரா..!
அத விட முக்கியமா.. இப்படி எழுதிறதுக்கு இன்னொரு காரணம், பயம்..! வேற யாராவது, உன்னை மாதிரி திருடி படிச்சா..? என் வாழ்க்கைக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை..! ஆனா, என் எழுத்து மூலமா இனியனுக்கு ஏதாவது பிரச்சினை வந்தா..! அதான்..!
நிலா: உனக்கு ஏன், எப்ப பாத்தாலும் இனியன் முக்கியமா இருக்காரு…?!
நட்சத்திரா: ஏன்னா, அவருக்கு நான் காதலியா இருந்ததை விட… ஒரு அம்மாவா; தங்கச்சியா; தோழியா; மகளாய் இருந்ததுதான் அதிகம்…! உன் வயசுக்கு இதெலாம் 1008 தடவை சொன்னாலும் புரியாது, சில விஷயத்தை காலம் தான் சொல்லிக் கொடுக்கும்…!
நிலா: போதும் அக்கா..! நைட் 1 மணி, பேசியே கொல்லாத..!
நட்சத்திரா: ஏன் டி பேச மாட்ட..! இந்தா டைரி, உனக்கு வேணும்னா படி, இல்ல கொடு..! சும்மா தேவை இல்லாம பேசாத..! ஆமா…! முதல்ல நீ எதுவரைக்கும் படிச்ச..?
நிலா: அதுவா..!!
———-[ நட்சத்திரா: (இதான் நல்ல வாய்ப்பு, போன் நம்பர் வாங்கிடலாம்…) சார்.. நம்பர் தர்ரீங்களா, எதாவது சந்தேகம் வந்தா கேட்க…
இனியன்: உனக்கு நடத்தும் போதே சந்தேகம் வராது… இதுல, போன்ல எப்படி வரும் பாரு…!
(அவ்வளோ தான்!! 1000 பட்டாம் பூச்சியும் ஒரேடியா மருந்து அடிச்சி கொன்னாச்சு….!!)
நட்சத்திரா: சரி சந்தோஷம் சார்… (மட சாம்பிராணி..! நீ எல்லாம் கன்னி கழியாம தான் சாவ பாரு…!)]———–
இது வரைக்கும் தான் அக்கா….!!
நட்சத்திரா: ப்பா..! இந்த நியாபக சக்தி எல்லாம், படிப்பில காட்டி இருந்தா, அரியராச்சும் க்ளியர் பன்னிருப்ப..!
நிலா: சரி சரி… நீ தூங்கு, எனக்கு தூக்கம் வரல..! நான் படிச்சிட்டு தூங்குறேன்..! குட்நைட்.
—–டைரியில்——
இரண்டு நாட்களுக்கு பின் அவளுக்கு மெசேஜ் வந்தது…
Unknown: இருக்கியா…?!
நட்சத்திரா: May I know who is this..?!
Unknown: இனியன்..!
[உச்சந்த்தலை முதல் உள்ளங்கால் வரை மின்னல் தாக்கியது போல் சிலிர்த்தது…. அது மட்டுமா..! 32 பல்லும் போட்டி போட்டு தெரிந்தது அவளுக்கு..! அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல், முதலில் நம்பர் பதிவுப் பண்ணி DP பார்த்தாள்..! புகைப்படத்தில் கூட எவ்வளோ அழகுன்னு வர்ணித்துக் கொண்டே…ஆயிரம் முத்தம் பதித்து போனை ஒரு வழி ஆகிவிட்டாள்..! போனுக்கு மட்டும் உயிர் இருந்தால், அவளின் முத்தத்தின் தாக்கத்தில்… மூச்சடைப்பே ஏற்பட்டு இருக்கும்...]

இனியன்: இருக்கியா மா?
நட்சத்திரா: சொல்லுங்க சார்..! தீடீர்ன்னு மெசேஜ் பண்ணீங்களா..! அதான் ஷாக் ஆகிடேன்..!
இனியன்: அது எப்படி மா, நம்புற மாறியே பொய் சொல்லுற?
நட்சத்திரா: (உன்கிட்டப் போய் சொன்னேன் பாரு, என்ன சொல்லனும்..! சரி முருங்க மரம் ஏறத்துக்குள்ள, பேச்சை மாத்திடுவோம்..!) சாப்பிட்டீங்களா….?!
இனியன்: இனிமே தான் மா..! பிராஜக்ட் பத்தி பேசனும், நாளைக்கு லேப் வரியா..?
நட்சத்திரா: சரிங்க சார்..! நேரத்துக்கு சாப்பிடுங்க…!
இனியன்: சரி மா..! பைய் பைய்..!
நட்சத்திரா: (கூட நாலு வார்த்தை பேசினா என்ன, முத்து உதிர்ந்திடுவா போது….சரியான அல்ப..!)பைய் சார்..!
அவளுக்கு அன்றிரவு தூக்கம் எங்கே வந்தது… இருந்த சந்தோஷத்தில் குளிர் ஜுரம் வந்தது தான் மிச்சம்.. அடுத்த நாள் 9 மணி கல்லூரிக்கு, காலையில் 5 மணிக்கே எழுந்து, வீட்டில் கிட்சன் இருக்கும் திசையை தேடிப் பிடித்து, எல்லா பாத்திரத்தையும் உருட்டி, காரப் பொடியை தவிர அனைத்து விதமான மாவையும் களேபரம் செய்து, முகத்தில் காய வைத்து முடிப்பதற்கே 6 மணி ஆகி விட்டது, பின் குளித்து முடித்து, பட்டும் பாடமல் பாண்ட்ஸ் பவுடக்கு அவளின் கண்ணத்தின் தரிசனம் தந்தப் பின், கண் முழி பிதுங்க பிதுங்க அரை டப்பா மையை எடுத்து, மான் போன்ற விழிகளின் அழகையும் மெருகேற்றினாள்..!
அதற்குள்…
அப்பா: அதான் நல்லா தான மா குளிச்ச; அப்புறம் எதுக்கு இந்த நாத்த மருந்து..?!
நட்சத்திரா: எத்தன தடவை சொல்ல அப்பா..! அத வாசனை திரவியம்னு சொல்லுங்கனு..!
அப்பா: சம்பாதிக்கிற காச எல்லாம் இப்படி, புஸ்ஸு புஸ்ஸுன்னு அடிச்சுத் தள்ளுறியே.. அதான்..! அந்த காலத்துல…..
நட்சத்திரா: தெய்வமே..! நேரம் ஆகுது..!
அம்மா: எதுக்கு டி இன்னைக்கு இவளோ ஆர்ப்பாட்டத்தோட கிளம்புற..?
நட்சத்திரா: (சும்மாவ பின்ன…! இனியனே வந்து பார்க்க சொல்லி இருக்கானே..!) அதெல்லாம் ஒன்னும் இல்ல…!
அம்மா: ஒன்னும் இல்லாமையா கிட்சன, இப்படி கந்தரகோலம் ஆக்கி வச்சிருக்க..? அந்த கண்ணாடிக்கு வாய் மட்டும் இருந்த, இந்நேரத்துக்கு கண்ணீர் விட்டு இருக்கும்..!
நட்சத்திரா: (போச்சு, அப்பட்டமா மாட்டிக்கிட்டோம் போல, சட்டு புட்டுன்னு இடத்த காலி பண்ண வேண்டியது தான்..!) நான் கிளம்புறேன்..! டாட்டா..!
கயலுடன் வந்தால், அடுத்த ஜென்மம் தான் வர முடியும் என்று அவளை கழட்டி விட்டு, வாழ்க்கையில் முதல் முறையாக ஆசையுடன் கல்லூரி வந்து சேர்ந்தாள். ஆனால்..! அது எப்படி ஆசைப் பட்டது எல்லாம் சரியா நடக்கும்..! வாழ் நாளில் க்ளாஸே எடுக்காத பூதம், அன்னிக்குன்னு பார்த்து கூடுதல் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தது..! பூதம் கிட்ட மட்டும், இனியன பாக்க போனும்னு சொன்னா, அவளோ தான்..! இங்கயே துண்டு துண்டு துண்டா வெட்டி…! அவளே தின்னுடுவா..!ன்னு வாயை மூடிக் கொண்டு க்ளாஸில் உட்கார்ந்து இருந்தாள்..! ஒரு வழியாக 5 மணிக்கு, பூதம் மலை ஏறியது..! இனியன் இருப்பான, இல்லையா என்ற தயக்கத்துடன் லேப் வாசலுக்கு சென்றாள்.. அங்கே பார்த்தால், எள்ளும் கொள்ளுமாக இருக்கும் இனியன், தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்தான்..! அவளுக்கு போய் பேசுவதா வேண்டாமா என்ற பயத்துடன் பக்கத்தில் சென்றாள்..!
நட்சத்திரா: சார்..!
இனியன்: (சிவந்த கண்களுடன்) நீ போ மா… நான் அப்புறம் பேசுறேன்..!
நட்சத்திரா: என்னாச்சு சார்..!
இனியன்: ஒன்னும் இல்லை, நீ போ..!
நட்சத்திரா: சொல்லுங்க சார்..! உங்கள இப்படி பாக்க முடியல..! ப்ளீஸ்…!
இனியன்: நானும் ஒரு பொண்ணும், லவ் பண்ணோம்… அஞ்சு வருஷமா…!
(நட்சத்திராவுக்கு தலையே சுற்றியது… வானம் இடிந்து தலையில் விழும் போல இருந்தது…. அவளையும் மீறி அவள் கண்கள் கண்ணீர் குளமாக மாறியது…!)
இனியன்: அவளுக்கு நாளைக்கு வேற ஒருத்தரோட கல்யாணம்…!
நட்சத்திரா: (சந்தோஷத்தில்)ஐய்ய்ய்ய்ய்ய்……..(முகத்தைப் பாவமாக மாத்தி கொண்டு) யய்யோ..!
என்னதான் இனியன் அழுகுறதப் பார்த்தா பாவமா இருந்தாலும்…! அவளின் மனதில் சந்தோஷம் மட்டும், பெளர்ணமி நிலவின் போது, கடல் அலையின் பாய்ச்சல் போல் அதிகரித்ததுக் கொண்டே இருந்தது..! கண்ணீர் எல்லாம் சிரிப்பாக மாறியது..! வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவள் மனம் ஆனந்த தாண்டவமே ஆடியது..!
நட்சத்திரா: புரியுது சார், உங்க கஷ்டம்..! கடவுள் ஒரு கதவை மூடினா இன்னொரு கதவு திறப்பாரு..! உங்களுக்குன்னு ஏற்கனவே ஒருத்தி பிறந்து இருப்பா..! விடுங்க சார்..!
இனியன்: அடப் போ மா..! அவ தான் எனக்கு எல்லாமே..! அவளே என்ன விட்டுட்டு போயிட்டா..!
நட்சத்திரா: (அது சரி..! நீயோ மட சாம்பிராணி..! தெளிவாக சொன்னாலே புரியாது, இதுல ஜாடை மாடையா, சொன்னா புரியவா போது..!) எல்லாம் சரி ஆகிடும் சார்..! லேட் ஆகுது நான் கிளம்புறேன்..!
வெளியே வந்ததும் ஒரு செம குத்தாட்டம் போடலாம் போல இருந்தது அவளுக்கு…! அன்று முதல், நட்சத்திரா, இனியன் வாழ்வில் முக்கியமான பகுதி ஆனாள்..! நாட்கள் ஓடின… பேச்சுக்களும் அதிகமானது… உரிமையும் கூடவே வந்தது…! ஒரு நாள் பேச வில்லை என்றாலும்; ஒரு யுகம் கடந்தது போல் இருந்தது..! இப்படியே போக, திடிரென ஒரு நாள் காலையிலிருந்து இனியன் மெசேஜ் பண்ணவில்லை..! என்ன என்று தெரியாமல் குழம்பிப் போனாள்; நேரம் ஓட ஓட ஏதோ ஒரு விதமான பயமும் அவளைச் சூழ்ந்தது..! இரவு 11 மணி இருக்கும் திடீரென்று அவள் போன் அடித்தது, இனியன் பெயர் தெரிந்ததும், என்னவாயிருக்கும் என்று யோசித்துக்கொண்டே அழைப்பை எடுத்தாள்..!
இனியன்: சாரி மா..! வீட்ல பொண்ணு பாக்க கூட்டிட்டு போயிட்டாங்க..!
நட்சத்திரா: சொல்லவே இல்ல..!
இனியன்: எனக்கே தெரியாது மா..!
நட்சத்திரா: ஓ..! பொண்ணு புடிச்சிருந்ததா..? ஓகே சொல்லிட்டீங்களா..?
இனியன்: இல்லை..!
நட்சத்திரா: ஏன்..?
இனியன்: தெரியலை, உன் கிட்ட வேற சொல்லிட்டு போகலை..! எதோ உன் நினைப்பாவே இருந்தது..! யோசிக்கவும் முடியல..! அதான்..!
நட்சத்திரா: ஓ..!
இனியன்: சாப்பிட்டியா…?!
—பதில் வரவில்லை—
இனியன்: கோவமா..!
நட்சத்திரா: சாப்பிட்டேன்..!
இனியன்: சரி சொல்லு..! கோவமா..!
நட்சத்திரா: உங்க மேல கோவப் பட நான் யாரு..?
இனியன்: ஏங்கப்பா..! பெரிய மனுஷி..! நீ என்னைக்குமே எனக்கு குழந்தை தான்..! கட்டி முத்தம்..! குட் நைட்..!
எனது முத்தமா..! அதுவும் கட்டி முத்தமா..! அப்படின்னா என்ன என்று, அன்று முழுவதும் அவளுக்கு தூக்கமே வரவில்லை..! அடுத்த நாள் காலையில் கல்லூரி வந்ததும் வராததுமாக..!
நட்சத்திரா: கயல் கயல் கயல்..!
கயல்: என்ன டி..?!
நட்சத்திரா: அது வந்து… கட்டி முத்தம்.. அப்படினா என்ன..?
கயல்: கட்டி முத்தமா…? குட்டி முத்தம் தெரியும் அது என்ன கட்டி முத்தம்..?
நட்சத்திரா: உன்கிட்ட கேட்டேன் பாரு, என்ன சொல்லனும்…! உன்னால தான் டி நான் இன்னும் ஒண்டிக் கட்டையாவே இருக்கேன்..!
கயல்: ரொம்ப பண்ணாத டி..! இரு யோசிக்கிறேன்..! ஒரு வேலை கட்டிப்புடிச்சு முத்தமோ…?
நட்சத்திரா: அடியே ஞானசூனியம்…! எப்போ உனக்கு எவ்வளோ மூலை வந்துச்சு..?!
கயல்: அதெல்லாம் அப்படி தான்..! ஆனாலும் உன்னப் பாத்து யாரும் இந்த மாறி சொல்லிருக்க மாட்டாங்க..! எதுக்கும் சொன்னவங்க கிட்டயே கேட்டுக்கோ..!
நட்சத்திரா: சரி மூடு…!
(கயல் சொன்னதும் ஒரு விதத்துல உண்மை தான்; பேசாம இனியன் கிட்டயே கேட்டுக்குவோம் என்று லேப் வாசலை வந்து சேர்ந்தாள்…!)
நட்சத்திரா: சார்..!
இனியன்: என்னம்மா..!
நட்சத்திரா: உங்கக் கிட்ட ஒன்னு கேட்கனும்…!
இனியன்: கேளு மா..!
நட்சத்திரா: அது வந்து…கட்டி முத்தம்… அப்படினா என்ன..?
(தொடரும்..)
0 Comments