(எழலனின் கொஞ்சலுக்கு தடையாக போனும், நட்சத்திராவின் மனதை வெளிப்படுத்த தடையாக நிலாவும் வந்து சேர்ந்தார்கள்..)

சென்ற வாரம்:

நிலா: அப்படி என்ன உனக்கு மனச விட்டு பேசனும்? அக்கா…. இனியன பத்தி சொல்லப் போறியா?

(ஒரு நிமிடம் அவளுக்குத் தலையே சுற்றியது..)

நட்சத்திரா: யாருக்குமே தெரியாதது, உனக்கு எப்படித் தெரிஞ்சது…….????!!!!!!

அத்தியாயம் 6 : முரண் கவிதை

நிலா: உன்னோட டைரியில் படிச்சேன்..!

நட்சத்திரா: ஓ… சரி..! ஆமா, என்னோட எல்லா டைரியும் இங்கதான இருக்கு..?!

நிலா: ஒன்னு மட்டும் விட்டுட்டு போயிட்ட அக்கா…!

நட்சத்திரா: சரி..!

நிலா: இதுக்கு முன்னாடி எல்லாம், உன் டைரியை தொட்டா அப்படி கத்துவ, இப்ப எதுவுமே சொல்ல மாட்ற..?

நட்சத்திரா: கல்யாணமே கூட தான் வேண்டாம்னு சொன்னேன்..! அவ்ளோ கத்தினேன்! என்னோட விருப்பத்தை விட உங்க பிடிவாதம்தான ஜெயிச்சது..?!

நிலா: திரும்பி ஆரம்பிக்காத அக்கா! நடந்தது நடந்து போச்சு.. கெட்ட கனவா நினைச்சு இனியன் என்ற அத்தியாயத்தை நீ மறந்திடு பேசாம..

நட்சத்திரா: நான் ஏன் டி மறக்கணும்? அவர பத்தி, உனக்கு என்ன தெரியும்னு நீ பெருசா பேசுற..?

நிலா: பின்ன கல்யாணத்துக்கு அப்புறமும் இன்னொருத்தன்ன நினைச்சுக்கிட்டு இருப்பியா..? என்ன பைத்தியக்காரத்தனம் இது..!

நட்சத்திரா: இங்க பாரு நிலா, ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோ, கெட்டதை மட்டும் மறந்தா போதும்..! இனியன் ஒன்னும் எனக்கு நடந்த கெட்டத்து இல்ல, அவர் சுண்டு விரல் கூட என் மேல பட்டது இல்லை..! அவர் என்ன காதலியா பாத்தத விட பெத்த பொண்ணா பாத்தது தான் அதிகம்..! வாழ்க்கையில நமக்கு அமையாத எல்லாத்தையும் மறந்தா, அப்புறம் எதுவுமே நல்லா இருக்காது..!

நிலா: எல்லாமே சரிதான் அக்கா.. ஒருவேளை மாமா கிட்ட நீ சொல்லி, அவர் எதாவுது தப்பான முடிவு எடுத்திட்டா?

நட்சத்திரா: தப்பான முடிவுனா? என்ன சொல்ல வர..?

நிலா: அது வந்து… உன்ன வேணாம்னு விட்டுட்டு போயிட்டா..? ஊர் என்ன பேசும்? அம்மா அப்பா நிலைமை என்ன ஆகும்? அடுத்து என் கல்யாணம் வேற இருக்கு..! நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு அக்கா..!

நட்சத்திரா: அதுக்குனு நான் எத்தனை நாள் டி சொல்லாம இருக்க? இது வேற யார் மூலமாவது தெரிஞ்சா இன்னும் சங்கடம்ல? இந்த ஊர் அயிரம் பேசும், அப்போ இருந்து இப்போ வரைக்கும் பெண்களுக்கு இந்த ஊர்ல பெண்கள்தான் எதிரியே..!

நிலா: எப்படி சொல்ற..?

நட்சத்திரா: பின்ன புருஷன் என்ன தப்பு செஞ்சாலும், கல்யாணம் பண்ணிக்கிட்டா மன்னிச்சு ஏத்துக்கனும் என்ற கேவலமான மனப்பாண்மையை வெதச்சது யாரு? தப்புல என்ன ஆண், பெண் வித்தியாசம்? யார் பண்ணாலும் தப்பு, தப்பு தானே ?

சரி நீயே சொல்லு…. சிலப்பதிகாரத்துல.. கண்ணகிய விட்டுட்டு மாதவிய தேடிப்போன கோவலன் நல்லவன்? ஆனா தப்பான தீர்ப்பு தந்த பாண்டிய மன்னன் கெட்டவனா?! கோவலன, ஒன்னு மாதவி “ஏன் டா? பொண்டாட்டி இருக்கும் போது இன்னொருத்திக் கேக்குதா”ன்னு செருப்பால அடிச்சிருக்கனும், இல்ல அவன் திரும்பி கண்ணகி கிட்ட வந்த போது, “இதுவே நான் உன்ன மாறி வெற ஒருத்தன் கூட போயிருந்தா? நீ என்ன ஏத்துப்பியா?”ன்னு அவன எரிச்சிருக்கனும்..! ஆனால், அதை விட்டுவிட்டு தப்பான தீர்ப்பு சொன்ன பாண்டிய மன்னனையும், சிவனேன்னு இருந்த மதுரையையும் எரிச்சிட்டு போயிட்டா..!

நிலா: அப்போ என் கோவலன், மாதவிய விட்டுட்டு போனான்?

நட்சத்திரா: அது வந்து, ஆற்று வரிப் பாடல் மூலமா மாதவி கோவலனோட தப்ப “ஆண்கள் சீரோடு இருந்தால்தான் பெண்களுக்கு மதிப்பு உண்டு” அப்படினு சுட்டிக்காட்டினா… உடனே இந்த கோவலன், மாதவிய விட்டுட்டு கண்ணகி கிட்ட போயிட்டான். கண்ணகியும் புருஷன் வந்திட்டானு ஏத்துக்கிட்டா… மாதவி துறவியா போயிட்டா… பெண்களுக்கு ஆதரவா நியாயம் பேசின மாதவி தப்பு, மலர் விட்டு மலர் தாவும் வண்டு குணம் இருக்க கோவலன ஏத்துக்கிட்ட கண்ணகி நல்லவ… அன்னிக்கு கண்ணகி செஞ்சது, இன்னிக்கு ஆண்கள் தப்புப் பண்ணிணாலும் பெண்கள் ஏத்துக்கணும்னு ஆயிடுச்சு….

இப்ப சொல்லு, கண்ணகி பண்ணது தப்பா சரியா..?

நிலா: தப்புதான், ஆனா ஒரே ஒரு கதையை வச்சிக்கிட்டு இப்படி முடிவெடுக்க முடியாது.!

நட்சத்திரா: அப்படியா சரி…

துரியோதனன், நல்லவனா கெட்டவனா..?

நிலா: கெட்டவன்..!

நட்சத்திரா: ஏன்..?

நிலா: திரெளபதியின் சேலையை உருவ சொன்னானே…?

நட்சத்திரா: அப்போ பொண்டாட்டியை வச்சு சூதாட்டம் ஆடின தர்மன் நல்லவனா..?

நியாயமா பார்த்தா… பகடை உருட்டின கையை வெட்டி இருக்கணும் தான? இந்த நிலைமைக் காரணமான புருஷன ஒன்னும் பண்ணல, ஆனா அதோட விளைவான துரியோதனனுக்கு மட்டும் சாபம் விட்டாச்சு..!

நிலா: ஆமா அக்கா, இத்தன நாளா இதெல்லாம் நான் யோசிச்சதே இல்லை..!

நட்சத்திரா: யாரும் யோசிக்க விடலை..!

அதே மாதிரிதான், எவனோ சொன்னத கேட்டு கட்டின பொண்டாட்டிய காட்டுக்கு அனுப்பின இராமன், நல்லவன்..! ஆனா சொந்த தங்கச்சி கேட்டான்னு சீதையைக் கடத்தின இராவணன், கெட்டவன்..!

அது மட்டுமா..? ஐந்து புருஷன் இருக்காங்கன்னு திரெளபதிய ‘வேசி’ன்னு சொன்ன இந்த ஊர், அறுபது ஆயிரம் பொண்டாட்டிய வச்சிருந்த தசரதனை ‘வேசி’ன்னு சொன்னது இல்லை…!

நிலா: எப்படி அக்கா..? செமையா பேசுற..! இது எல்லாம் எங்க கத்துக்கிட்ட..?

நட்சத்திரா: என் அலமாரியில இருந்து டைரியை திருடி படிச்சதுக்கு, வெளியவே இருக்க பாரதியார் புத்தகமும், பெரியார் புத்தகம் படிச்சிருந்த புத்தி வந்து இருக்கும்..!

நிலா: சரி, சரி.. விடு விடு..! ஆனா நீ உண்மையை சொல்வது எனக்கு சரியா படலை.. சொல்லிட்டேன்..!

நட்சத்திரா: ஆனாலும், விடிய விடிய இராமயணம் கேட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பன்னு உன்னால மட்டும் தான் சொல்ல முடியும்..!

நிலா: சரி விடு, உன் கிட்ட பேசினதுல நேரம் போனதே தெரியலை..! மணி 6 ஆச்சு, மாமா எப்ப வருவாரு..? வயித்துக்குள்ள எலி எல்லாம் ஓடுது..!

நட்சத்திரா: ஓடும் டி ஓடும்…! இப்பதானே ஒரு தட்டு பஜ்ஜிய முழுங்கின..?!

நிலா: இது பிரியாணி பசி, உனக்கு புரியாது..! நீ கேள்விக் கேக்காம மாமா எப்போ வருவாருன்னு சொல்லு..!

நட்சத்திரா: அதுசரி, அவர் வர நேரம் தான்..! கொஞ்சம் பொறு..!

(சரியாக அரை மணி நேரத்தில் வண்டி சத்தம் கேட்டது..!)

நட்சத்திரா: அவர் வண்டி சத்தம் தான் கேக்குது, அப்படியே இவரு போன் பேசலைனா உலகமே நின்னுடும் போல, போன் பேசிட்டே வருவார் பாரு..!

file-9207285

(கதவை துறந்த பின்..)

எழிலன்: அம்மு..!

நிலா: பிரியாணி…..!!!!!!!!

எழிலன்: ஏய் மூட்டுப்பூச்சி..! அவ எங்க டி..? நீ வந்து கதவைத் திறக்குற…!

நட்சத்திரா: வந்துட்டீங்களா..! கிட்சன்ல இருந்தேன்..! இவதான் பிச்சைக்காரி மாதிரி ஒரு மணி நேரமா பிரியாணி, பிரியாணின்னு வாசலிலயே உட்கார்ந்திட்டு இருக்கா..!

எழிலன்: சரி சரி, இந்தா சுடசுட பிரியாணி, நீ கேட்ட லேக் பீஸொட..! நீ சாப்பிடு, நான் குளிச்சிட்டு வரேன்..!

நிலா: பரவாயில்லை மாமா..! வெயிட் பண்றேன்.. சீக்கிரம் வாங்க..!

(சிறிது நேரத்தில்)

எழிலன்: அம்மு… துண்டு..!

நட்சத்திரா: இதோ வரேன்..!

(அதற்குள்..)

நிலா: இந்த கதையெல்லாம் இங்க வேணாம்…. மாமா இந்தாங்க துண்டு..! சீக்கிரம் வந்து சேருங்க..!

(வெளியே வந்த பின்...)

எழிலன்: ரொம்ப நல்ல மனசு, மூட்டப்பூச்சி உனக்கு..!

நிலா: விடுங்க விடுங்க..! வாங்க சாப்பிடலாம்..!

(சாப்பிட்டு முடித்தவுடன்)

எழிலன்: ஏய் விஷப்பூச்சி, பிரியாணி நல்லா சாப்பிட்டல..? அப்படியே உன் ரூமுக்கு போய், அமைதியா தூங்குற..!, கொஞ்ச நேரம் ஆச்சு, என் பொண்டாட்டிய நிம்மதியா கொஞ்ச விடு..! எதாவுது தொந்தரவு பன்ன..! மூட்டப்பூச்சிய கொல்லுற மாறி, மிதிச்சே கொன்னுடுவேன்..!

நிலா: அய்யோ…! பயங்கரமா பயந்துட்டேன்..!

எழிலன்: அது சரி, உங்க குடும்பத்துல எல்லாருக்கும் இரத்ததுக்கு பதிலா கொழுப்பு தான் ஓடும் போல..!

நிலா: சரி சரி, ரொம்ப பன்னாதீங்க.. டாட்டா..! குட் நைட்..!

(ரூமுக்கு வந்தவுடன்...)

எழிலன்: எப்பா…! உன் தங்சச்சிய தாண்டி உன்கிட்ட பேசறது..! ஏழு கடல், ஏழு மலை தாண்டி வர மாறி இருக்கு..!

எவ்வளோ நேரம் ஆச்சு என் பொண்டாட்டிய கொஞ்ச…! என் ரதியே..!

(அவள் பின்னாடி நின்று எதையோ தேடிக் கொண்டு இருந்த போது.. இதான் சான்ஸ்னு கிட்ட வர முயற்சித்த எழிலனை, கண்ணாடி வழியாக பார்த்து தள்ளிவிட்டாள்..)

file-9322105

நட்சத்திரா: வீட்டுல, வயசு பொண்ணு இருக்கா..!

எழிலன்: அடியேய்..! அதுக்கு…?!

நட்சத்திரா: இப்ப போய் இதெல்லாம்..! தள்ளிப் போங்க..!

எழிலன்: ஏய், மாமா டி…! பாவம் டி..!

நட்சத்திரா: பரவாயில்லை….! அவ வீட்டுல இருக்குற வர, நமக்கு ஆடி மாசம் தான்..! நான் அவ கூட போய் படுத்துக்குறேன்..!

எழிலன்: போச்சா..! சந்தோஷம்…! போடி கொடுமக்காரி…!

நட்சத்திரா: சரி.. டாட்டா…!

எழிலன்: ஏய் நில்லு..!

நட்சத்திரா: என்ன ஆச்சு..?

எழிலன்: அவளை இங்கே படுக்க சொல்லு, இந்த ரூம்ல தான் ஏசி இருக்கு..! நான் அடுத்த ரூம்ல படுத்துக்கிறேன்..!

நட்சத்திரா: பார்ரா..! சரி சரி..!

எழிலன்: அவளுக்காக எல்லாம் இல்லை, உனக்கு வேர்க்கும், அப்புறம் சளி புடிக்கும்…! அதுக்கு தான்..!

(நிலா வந்தவுடன்...)

எழிலன்: உனக்கு மூட்டைப்பூச்சின்னு பேரு வச்சுதுல தப்பே இல்லை..! நல்லா தூங்கு..!

நிலா: பாத்து பாத்து, உங்க வயித்து மேல வச்சி, கிரில் சிக்கனே பண்ணலாம் போல..! பயங்கரமா எரியுது பாருங்க..!

எழிலன்: ஏய் விஷப்பூச்சி, நாளைக்கே உன்ன டிக்கெட் போட்டு ஊருக்கு அனுப்பிறேன் பாரு..!

நிலா: சரி சரி.. கிளம்புங்க காத்து வரட்டும்..!

(சிறிது நேரத்தில்…எழிலனின் குறட்டை சத்தம், அடுத்த ரூமில் இருந்து தெள்ளத் தெளிவாக கேட்டது..)

நிலா: எப்படி அக்கா… இவ்வளோ குறட்டை சத்தம் தாங்குற..?

நட்சத்திரா: பழகிடுச்சு டி..! பாவம் அவரு, வேலைக்கு போன அசதி..!

நிலா: அதுக்குன்னு..! இவ்வளோ சத்தமா..? என்னால முடியல சாமி..!

நட்சத்திரா: ஒரு சாவு வீட்டில அழுவதை பார்த்து பட்டினத்தார் சொன்னாராம், “இன்னைக்கு செத்த பிணத்தை பார்த்து, நாளைக்கு சாகப்போற பிணம் அழுது..!”ன்னு, அதே மாதிரி தான் நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில குறைகளை மட்டுமே பார்த்துட்டு இருந்தா.. இருக்கிற கொஞ்ச நஞ்ச நாளும் நரகம் ஆகிடும்…!

நிலா: ஆமா, உண்மை தான்..! தூக்கம் வருது..! குட் நைட்..!

(ஒரு மணி நேரம் பின்…)

நிலா: அக்கா தூங்கிட்டியா?

நட்சத்திரா: இல்ல..!

நிலா: அக்கா, உன் கிட்ட ஒன்னு கேட்பேன்…! திட்ட மாட்டியே..!

நட்சத்திரா: சொல்லு..!

நிலா: அது வந்து..

நட்சத்திரா: வந்து…?

நிலா: டைரியில் பாதி தான் இருந்தது..! இனியன் நம்பரை எப்படி வாங்கின..?

நட்சத்திரா: ரொம்ப முக்கியம்..! மூடிட்டு தூங்கு..!

நிலா: ப்ளீஸ்க்கா….! ஆர்வமா இருக்கு..!

நட்சத்திரா: தூங்குடி பேசாம..!

நிலா: அக்கா.. அக்கா..! ப்ளீஸ் கா..!

நட்சத்திரா: சரி, நான் வாங்கல..! அவர் தான் மெசேஜ் பண்ணார்..!

நிலா: அவரா..! எப்படி? எப்போ? என்னன்னு?

(தொடரும்)


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.