அன்று அவள் ஆசைப்பட்ட நம்பர், இன்று போனில் இருந்தும் பேச தோன்றவில்லை…. அவள் மனம் முழுவதும், எழிலனை சுற்றியே இருந்தது…அவனிடம் பழையதை சொல்ல வேண்டும் என்று மட்டுமே இருந்தது… சரி, இன்று என்ன ஆனாலும் சரி, அவர் வந்தவுடன், கடவுள் மேல் பாரத்தைப் போட்டு.. உண்மையை சொல்லிவிட வேண்டியது தான் என்ற முடிவுடன் காத்து இருந்தாள்…

சென்ற வாரம்:

காலிங் பெல் அடித்தது……

எழிலன்: ஏய் பொண்டாட்டி, என்ன டி எனக்கு தான் வெய்டிங் போல….

நட்சத்திரா: ஆமாங்க..!

எழிலன்: பார்ரா… என்ன டி மல்லிப்பூ எல்லாம் வச்சிட்டு, சும்மா கும்முன்னு இருக்க…?

நட்சத்திரா: அய்ய….அலையாதீங்க….அல்ப மாறி…!

எழிலன்: என் பொண்டாட்டி, நான் அலையுறேன்; உனக்கு என்ன டி..?

நட்சத்திரா: ஆமா.. ஆமா.. போடா…! அழுக்கு மூட்டை!!

எழிலன்: என்னோட செதுக்கி வச்ச சிலையே, இரு டி…மாமன் குளிச்சிட்டு வந்து பேசிக்கிறேன்…!!!

அத்தியாயம் 5 : திரிசங்கு சொர்க்கம்

தயவுசெஞ்சு போங்க சாமி!!!

(பாத்ரூமில்….)

எழிலன்: நேத்து ராத்திரி யம்மா…. தூக்கம் போச்சு டி யம்மா….

(வெளியே…)

நட்சத்திரா: காக்க காக்க கனகவேல் காக்க…நோக்க நோக்க நொடியில் நோக்க..!!!

(அது சரி, அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க கவலை…!!)

எழிலன்: அம்மு, துண்டு எடுத்துக்கொடேன்…

நட்சத்திரா: நீங்க கேட்பீங்கன்னு தெரியும், அதான் பாத்ரூம்ல ஏற்கனவே மாட்டி வச்சிருக்கேன்.. எடுத்துகோங்க..

எழிலன்: அறிவுக் கொழுந்துடி பொண்டாட்டி நீ…!! ஒரு முழம் இல்ல, 1000 முழம் மல்லி பூ வச்சாலும் உன் அறிவுக்கு ஒன்னும் பண்ண முடியாது…!!!

நட்சத்திரா: தாங்க்ஸ்… ரொம்பப் புகழாதீங்க…!

எழிலன்: சட்டையாச்சும் எடுத்துத் தருவியா? இல்ல அதையும் மாட்டி வச்சிருக்கியா?

நட்சத்திரா: அச்சச்சோ.. மறந்துட்டேன்.. இதோ இப்போ எடுத்துத் தரேன்….

எழிலன்: நல்லதுக்கா மறந்த…!!

இதான் சான்ஸ்னு, எழிலன் அவளை பின்னாடி இருந்து கிடுக்குப்பிடிப் போட, அவன் உடலில் உள்ள அனைத்து நீர்த்துளிகளும் அவள் முதுகை நனைத்து…! அவன் உடல் வெப்பத்தில் தன்னை மறந்து.. அந்த நீர் துளியின் சிலிர்ப்பில், சுயநினைவிற்கு மீண்டு வந்தாள்..

நட்சத்திரா: விடுங்க, எனக்குத்தான் தண்ணி ஆகாதுன்னு தெரியும்ல, மொதல்ல உடம்ப துடைங்க..

எழிலன்: சரியான பூனை டி நீ!! அப்படியே மத்த நேரம் எல்லாம் கட்டிப்புடிக்க விடுற மாதிரி!! நீ அசந்த நேரமா பாத்து, நானே புடிச்சாத்தான் உண்டு டி…. என் மொசக் குட்டியே..!!

மெதுவாக…. அவன் மூச்சுக் காற்று அவள் காதோடு ரீங்காரமிட, கழுத்தில் பதித்த முத்தமோ அவளை திரிசங்கு சொர்க்கத்துக்கே அழைத்துச்சென்றது..

எழிலன்: ஏய், அம்மு..

நட்சத்திரா: ம்ம்ம்ம்….

எழிலன்: ஏய் பொண்டாட்டி, பேசு டி..

நட்சத்திரா: ஹா..ன்…!!! பே..ச்..சு வ..ர…லை..!

எழிலன்: இதுக்கே வா… மாமன் கைவசம் இன்னும் நிறைய இருக்கு!!! ஆனா, மொதல்ல சாப்பிடலாம் வா.. பசி உயிர் போது..

நட்சத்திரா: சரியான தீனிப்பண்டாரம், எப்போ பாத்தாலும் சோறு..! சோறு..! சோறு..!

எழிலன்: ஏய், ‘ஃபுடி‘ன்னு… டீசண்டா சொல்லு டி..

நட்சத்திரா: சரி டா…. சோத்துப்பட்டறை

எழிலன்: என்னது?

நட்சத்திரா: சரிங்க.. சோறு போடுரவறே..!

எழிலன்: உனக்கு திமிரு! கொழுப்பு!! எல்லாம் கொஞ்ச நஞ்சம் இல்ல டி, இரு ஒரு நாள் மொத்தமா கரைக்கிறேன்..

நட்சத்திரா: சரி சரி, சாப்பிடலாம் வாங்க… ஏங்க, அப்படியே.. சாப்பிட்டு உங்கக் கிட்ட கொஞ்சம் பேசனும்..!!

எழிலன்: பார்ரா… பேசிட்டாப் போச்சு..!

சாப்பிட்டு முடித்தப் பின்…

நட்சத்திரா: பேசலாமா ?

எழிலன்: கண்டிப்பா பேசனுமா..? மல்லிப்பூ வாசனை வேற மாமனை இழுக்குது…!

நட்சத்திரா: பேசியே ஆகனும்..! நீங்க மொதல்ல கிட்ட வராதீங்க, எனக்குப் பேச்சே வரலை..!!

எழிலன்: அப்படியா… (நெருங்கினான்)

நட்சத்திரா: வேண்டாம் மாமா…கிட்ட வராத… (வெட்கத்தில் அவள் கண்கள் அவளை மீறி மூடின)

file-4033868

இளமை திரும்புதே புரியாத புதிராச்சே...’

பின்னனி இசையாக வர வேண்டிய பாட்டு, திசை மாறி எழிலன் போனில் ரிங்டோனாக கேட்டது….!!!

எழிலன்: எந்தப் பரதேசி.. சரியான நேரம் பாத்துக்கூப்பிடுது, “அஞ்சே நிமிஷம்… வெறும் அஞ்சே நிமிஷம்” என்று குழந்தைப் போல் விரலில் பாவனை காட்டி, கெஞ்சிவிட்டுப் போனான்… 5 நிமிடம், 5 மணி நேரம் ஆனதே தவிர, அவன் இன்னும் பேசி முடிக்க வில்லை!!! “நமக்கே எப்பயாவது தான் தைரியம் வருது, இதுல இப்படி நடக்கனுமா..!” என்று தலையெழுத்தை அலுத்துக்கொண்டு நட்சத்திராவும் தூங்கினாள்… பல மணி நேரம் கடந்து போன பின், எழிலன் திரும்பிவர, தூங்கிய அவளை, எழுப்ப மனம் இல்லாமல், அவள் நெற்றியில் முத்தம் பதித்து அவனும் உறங்கினான்…

(விடிந்தது..)

நட்சத்திரா: ஏங்க, எந்திரீங்க… நிலா வரா..!!

எழிலன்: (தூக்கத்தில்) ஏய் மொசக்குட்டி, இந்த நேரத்துக்கு சூரியன் தான டி வரனும்..!

நட்சத்திரா: இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…. என் தங்கச்சி நிலா வரா..

எழிலன்: என்னது மச்சினிச்சி வராளா…!!

(தூக்கம் கலைந்து குத்துக் கல்லாக உட்கார்ந்தான்)

சொல்லவே இல்ல..!! எப்ப வரா? எப்படி வரா? யாரு கூட வரா..?

நட்சத்திரா: போதும் போதும்..! ஆர்வம் தாங்கல…!!

எழிலன்: சரி, நான் போய் குளிச்சு ரெடியா இருக்கேன்..!! மச்சினிச்சி வேற வரா..!! ஆமா… எங்கேயோ எறியுற வாசனை வருதே உன் வயிறா.. அம்மு!!!

நட்சத்திரா: அதெல்லாம் இல்ல..!

(தழைய தழைய புடவை கட்டி…!! தலை நிறைய மல்லிப்பூ வச்சு..!! முன்னாடி வந்து நின்னப் போதே.. நேத்து ஆபீஸ் கால்னு போனவன்…!! இப்ப மச்சினிச்சின்னு சொன்னா நாங்க வெறுப்பாயிடுவோம் பாரு..)

எழிலன்: அடங்கு டி..!! மைண்டு வாய்ஸ் வெளியே கேட்குது..!! ஆமா, அது என்னடி.. உங்க அப்பா ‘நிலா, நட்சத்திரா’ன்னு பேரு வச்சிருக்காரு, நல்லதுக்கா அடுத்து ஒன்னு பொறக்கல, இல்லைன்னா ‘மெர்க்குரி.. வீனஸ்..’ன்னு போயிருக்கும்.

நட்சத்திரா: எங்க அப்பா பத்தி பேசற வேலை வெச்சுக்காதீங்க.. சொல்லிட்டேன்..!

(அது என்னவோ புருஷனா இருந்தாலும் சரி, காதலனா இருந்தாலும் சரி.. மாமனார பத்தி குறை சொல்லலைன்னா தூக்கமே வராது போல..)

(அரை மணி நேரத்தில் வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது.. இளஞ் சிவப்பும், வெள்ளையும் சேர்ந்த சுடிதாரை அணிந்து.. ஒரு பெரிய பெட்டியுடன் வாசலில் வந்து இறங்கினாள்… நிலா.!!)

நிலா: (வந்தவுடன்) அக்கா..!! மாமா எங்க..?

நட்சத்திரா: ஏண்டி.. குத்துக் கல்லு மாறி நான் இருக்கேன்..!! என்ன விட்டுட்டு, அவர தேடுற..!! இரு கூப்பிடுறேன்…

என்னங்… (அதற்குள்)

நிலா: அய்ய…!! விடு நானே கூப்பிட்டுக்கிறேன்..!! மாமா… மாமா…!!

நட்சத்திரா: (நான் கூட இவ்வளோ சத்தமா உரிமையா கூப்பிட்டது இல்ல டி!!)

எழிலன்: ஏய்…மூட்டைப்பூச்சி !!! எப்ப வந்த..? ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா..? ரொம்ப மெலிஞ்சுப் போயிட்ட..!!

நிலா: ஆமா மாமா… ஹாஸ்டல்ல சாப்பாடு செட் ஆகலை…!!!

எழிலன்: ஏன்மா..? உங்க அக்காவும் அங்க தானே படிச்சா, அதான உன்னயும் அங்க சேத்தாங்க..!!

நிலா: அவ பன்னி மாதிரி.. என்ன போட்டாலும் சாப்பிடுவா, அசைவம் இருந்தாலும், அதை விட்டு, ரசம் சோறும், தயிர் சோறும் சாப்பிடுவா..!! கேட்டா உயிரக் கொல்லக் கூடாதுன்னு வசனம் பேசுவா..!!! அதெல்லாம் என்னால முடியாது..!! நமக்கு எப்போமே ‘கொன்னா பாவம் தின்னா போச்சு’ தான்..!!

சரி மாமா, நீங்க இவ்வளவு ஒல்லி ஆயிட்டீங்க..!! அக்கா ஒழுங்கா சாப்பாடு போடுறது இல்லையா..?

அப்புறம்…., அந்த போன் ஆர்டர் பண்ணிட்டீங்களா..?!!

நட்சத்திரா: அதானே பார்த்தேன்…!! அதுக்குத் தான் இவ்வளவு ஐஸ்ஸ் வச்சியா..?

எழிலன்: ஏய் சும்மா இரு டி, சின்னப் பொன்னு ஆசையா கேக்குறா.. போட்டாச்சு மா, நாளைக்கு வந்திரும். சரி, நான் கிளம்புறேன்.. லேட் ஆகுது.!! நீ நல்லா சாப்பிடு..!!

ஏய் அம்மு, வயித்து எரிச்சல்ல சோறு போடாம விட்டுராத.. பாவம் அவ!!

நட்சத்திரா: சரி சரி..!!

நிலா: டாட்டா மாமா..!! நைட்க்கு சிக்கன் பிரியாணி வாங்கிட்டு வாங்க..!! லெக் பீஸ் முக்கியம்..!!

எழிலன்: உனக்கு இல்லாமையா..? கண்டிப்பா வாங்கிட்டு வரேன்.

(எழிலன் ஆபிஸ் சென்ற பின்..)

நிலா: அக்கா…!!!

நட்சத்திரா: சொல்லுடி..!! இப்போ தான் நான் கண்ணுக்குத் தெரியுறேன் போலயே..?!

நிலா: நீ மாமா கூட சந்தோஷமா இருக்கியா?

நட்சத்திரா: ரொம்பவே… ஏன்? என்னாச்சு..?

நிலா: இல்ல அக்கா..!! வீட்டுல நல்ல செய்தி ஏதும் இல்லையான்னு கேட்டுட்டே இருக்காங்க

நட்சத்திரா: ஓ..! அதான் உன்ன வேவு பார்க்க அனுப்பினாங்களா..?

நிலா: அப்படியும் வச்சுக்கோயேன்..!! ஏன் அக்கா!! கட்டி புடிக்கிறதும், முத்தம் குடுக்குறதும் தான் வாழ்க்கையா? அதுக்கு மேல குழந்தைன்னு ஒன்னு இருக்குல…!! உன் விருப்பம் இல்லாம பண்ண கல்யாணம் தான், ஆனா மாமாக்கு என்ன குறைச்சல்..!!

நல்லா ஆறடி உயரம்; மாநிறம்; கட்டுமஸ்தான உடம்பு; இது எல்லாத்துகும் மேல, சும்மா தங்கம் மாறி உன்ன உள்ளங்கையில வச்சி தாங்குறார்; கேட்டதெல்லாம் செய்கிறார்; இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்..?

நட்சத்திரா: அதெல்லாம் ஒன்னும் இல்ல டி..!! ஊடல் தராத சுகத்தையா கூடல் தரப் போகுது..?! என்னவோ சேலைய கசக்க நேரம் இருந்த அவருக்கு, என் மனசப் போட்டு கசக்குற விஷயத்தை கேட்க நேரமில்ல..!! வாழ்க்கைய ஆரம்பிக்கிறது உடம்புல இல்ல டி, மனசுல இருக்கு..!! என்னைக்கு நான் என் மனசுல இருக்குறத அவர் கிட்ட சொல்லுறேனோ, அன்னைக்குத் தான் நல்ல செய்தி வரும்..!!

நிலா: அப்படி என்ன உனக்கு மனச விட்டு பேசனும்? அக்கா…. இனியன பத்தி சொல்லப் போறியா?

(ஒரு நிமிடம் அவளுக்கு தலையே சுற்றியது..)

நட்சத்திரா: யாருக்குமே தெரியாதது, உனக்கு எப்படித் தெரிஞ்சது…….????!!!!!!

(தொடரும்)


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.