(எழிலனின் கொஞ்சலும், முத்தப் பரிசும் பழையதை மறக்கச் சொன்னாலும்; கயலுடன் சேர்ந்து லேட்டாக வருவது, டைம்ஷீட் கொடுத்துத் திட்டு வாங்கியது, சிம்போசியத்தில் பார்த்தது என அனைத்தும் நட்சத்திராவின் கண்முன்னே வந்து நின்றது….)
சென்ற வாரம்:
நட்சத்திரா: ( என்ன ஆச்சு இந்த ஆளுக்கு, கண்ணக் கூட அசைக்கல, செத்து கித்து போய்டாரா?, இல்ல இல்ல மூச்சு வருது, தடிமாடு பார்க்குற நேரத்துல ஏதாவுது பேசலாம்ல… அது சரி, நம்மளே பேச்சுக் கொடுத்துப் பார்ப்போம் )
என்ன ஆச்சு சார் ?, எதனா வேணுமா ?
இனியன்: ஆ… இல்ல, அதெல்லாம் இல்ல… சேலை நல்லா இருக்கு மா..
அத்தியாயம் 3 – நீறு பூத்த நெருப்பு
(மடப்பயலே உன்னப் பாக்க ஆசையா வந்தா, என்ன பத்தி எதுவும் சொல்லாம சேலையாம் சேலை…)
நட்சத்திரா: (மனதில் தோன்றியது சட்டென்று அவளை மீறி வெளிவந்துவிட்டது! )
அப்போ, நான் ?!!!! (இதயத்துடிப்பு நூறு தொட்டிருக்கும் )
அதற்குள் இனியனை சுற்றி கூட்டம் கூட பதில் கிடைக்காத ஏமாற்றத்துடன் அவளும் சென்றாள். அவருடன் ஒரு புகைப்படமாவது எடுக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சித்தாள், ஆனால், அமைந்தது என்னவோ ஒரு குரூப் ஃபோட்டோ தான்; அதுவும் அவர் ஒரு மூலையில் இவள் ஒரு மூலையில்..! அன்று முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை ஏதோ சொல்ல வந்தாரே… என்று உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.
நாட்கள் அவனின் நினைவில் ஓடிப்போக.. கண் இமைக்கும் நேரத்தில் ஒரு வாரம் முடிந்து நின்றது. வெகு மாதங்களாக திட்டத்தில் இருந்த டூர், ஒருவழியாக நிச்சயமாகி, அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பயணத்திற்கு ஆயத்தமாயினர். டூர்னா சும்மாவா!! பஸ்ஸே இடிந்தது… ஆமா அந்த அளவிற்கு ஆட்டமும், பாட்டமும் பட்டையை கிளப்பியது, அது மட்டுமா? காதல் ஜோடிகள் “ஏய் பொண்டாடி, சொல்லு டா புருஷா….!!”ன்னு அலைப்பாயுதே பாட; அதைப் பார்த்து மொரட்டு ஒண்டிக்கட்டைகள் டாஸ்மாக்க தொரக்க; மொடாக் குடி குடிச்சிட்டு ஆட தெரியாதவன் கூட மைகேல் ஜாக்சனாக மாற; “ஏய், அங்க பாரு டி! பொறுக்கி மாரி ஆடுராங்க!!” எனக் குடும்ப குத்துவிளக்குகள் குறைக் கூற; யாரோ, எக்கேடோ கெட்டுப் போங்கன்னு, கர்ணனின் கவச குண்டலம் போல் கைப்பேசியும், செவிட்டு மெஷினும்ன்னு ஒரு கும்பல் இருக்க; “வாழா என் வாழ்வை வாழவே! தாளாமல் மேலே போகிறேன்.!” என, இது அனைத்தையும் போட்டோ எடுக்கும் ’96 ராம்’….; என்று ஆடல், பாடல், மிமிக்ரி என ஒரு மினி கச்சேரிப் போல் சென்றார்கள்… இனியன் இன்சார்ஜ் என்பதால் என்னவோ சத்தம் இன்னும் அதிகாமாகவே இருந்தது, ஆனால், வழக்கத்திற்கு மாறாக, சூரியன் மேற்கே உதித்தது; அதான், நட்சத்திரா மட்டும், அவள் இடத்தை விட்டு கொஞ்சம் கூட அசையவில்லை… வெறும் ஜன்னலைப் பார்த்துக் கொண்டு தன் சிந்தனைப்போக்கில் ஆழ்ந்திருந்தாள்.

இனியன்: என்னம்மா நீ மட்டும் தனியா இருக்க ?
நட்சத்திரா: உடம்பு சரியில்ல, மென்ஸஸ்…
இனியன்: அதனால என்னமா, இப்போ விட்டா இதெல்லாம் மிஸ் பன்னிடுவ..
நட்சத்திரா: வெறுப்பேத்தாம போறீங்களா ?
கயல்: சார், சார்! அவளுக்கு உடம்பு சரி இல்லை, யார் பேசினாலும் இப்படி தான் எரிஞ்சு விழுகுறா, தப்பா எடுத்துக்காதீங்க சார்…
இனியன்: தெரியும் மா, ஏதோ மென்ஸஸ்ன்னு சொன்னா… அப்படினா என்ன ?
கயல்: (அடப்பாவி, என்னனே தெரியாம தான் வாங்கி கட்டிக்கிட்டியா..!)ம்ம்ம்ம் மாதவிடாய்…
இனியன்: ஆத்தி, அதான் பேய் புடிச்ச மாறி இருக்காளா.. சரி மா, ஏதாவது வேணும்னா இல்ல பஸ் நிறுத்தனும்னா வந்து சொல்லு மா..
கயல்: சரி சார்…!
[ ஏன், அந்த கோபம், வெறுப்பு, எரிச்சல்; நட்சத்திராவிற்கு மட்டுமா ? இல்லை அவளைப் போன்ற எல்லா பெண்களுக்குமா? யார் மேல் இந்த கோபம்? முதல் முதலில் அவள் ஆடையில் பார்த்த உதிரத்தின் மேலா?இல்லை, பெண்ணாக பிறந்தால் ஆயிசுக்கும் இப்படித் தாண்டி என்று சலித்துக் கொண்ட தாயின் மீதா? இல்லை, இதைப் பற்றி எல்லாம் விளக்காமல், அதற்கு எதிர்மாறாக ஊரைக் கூட்டி இதோ பாருங்கள் என் மகளுக்கு இரத்தம் வருது, ஆனால் ஏன்னு நாங்க சொல்ல மாட்டோம், நீங்களும் சொல்லக் கூடாது என்கிற
கலாச்சாரத்தின் மீதா? இதை பற்றி யாரிடமும் பேசக் கூடாது என்று அறிவிக்கப் பாடாத சட்டம் போட்ட சமுதாயத்தின் மீதா? அதையும் மீறி, பேசினால் அவர்கள் மேல் கம்பளிப்பூச்சி போட்டது போல் அருவெறுப்பு காட்டும் இயல்பின் மீதா? கொலை, கொள்ளை, ஏன் கற்பழிப்புப் பற்றிக் கூட கூச்சமில்லாமல் பேசும் போது மாதவிடாய், உதிரப்போக்கு என்று சொன்னால் மட்டும் ஏன் அவர்கள் முகம் அஷ்ட கோணலாக மாறுகிறது? ஆபாச படங்களை வச்ச கண்ணு வாங்காம பார்ப்பவர்கள் கூட ஏன் மாதவிடாய் விளம்பரம் வந்தால் முகம் சுளிக்கிறார்கள்?; இயற்கையாக நிகழும் ஒரு பருவத்தை ஏன் பெண்களே மறைக்கிறார்கள்?; மனிதர்கள் தான் இப்படின்னு கடவுள் கிட்டப் போனா, “ அந்த மூன்று நாளா என்கிட்ட வராத..!!”ன்னு சொல்கிற சாமி மேலயா?; யார் மேல் கோபப் படுவது?….!!!!]
இதை எல்லாம் நினைத்துக் கொண்டே ஜன்னலைப் பார்த்தாள்; அவளுக்குள் இந்தக் கேள்விகள் மட்டுமே ஒலித்துக் கொண்டு இருந்தது, ஜன்னலில் இருந்து வரும் தென்றல் கூட அவள் கழுத்தை நெரித்தது….. பக்கதில் வந்து உட்கார்ந்த கயலின் மீது சாய்ந்து வலியை மறந்துத் தூங்க முயன்றாள்…
அவள் என்னதான் இயல்பாக நடந்துக் கொள்ள முயற்சித்தாலும், அந்த மூன்று நாட்களில், அவள் சரி இல்லை என்பது ஊருக்கே வெட்ட வெளிச்சமாக தெரியும்…
முதல் நாள் : ஆயிரம் ”உச்ச்ச்ச்ச்ச்”; வேண்டாம்; பிடிக்கலை; விடு….. [சலிப்பு]
இரண்டாம் நாள் : இல்ல, நீ பேசி தான் பாரேன்… [கோபம்]
மூன்றாம் நாள் : யாருக்குமே என்ன பிடிக்கலை… [அழுகை]
டூரிலும் இதே பாடு தான்…. மூன்று நாட்களுக்குப் பிறகு…
நட்சத்திரா: குட் மார்னிங் சார்….
இனியன்: குட் மார்னிங் மா; உன்ன இப்படிப் பாத்து ரொம்ப நாள் ஆச்சு, இப்போ உடம்பு எப்படி இருக்கு?
நட்சத்திரா: பரவால்ல; சாரி சார் அப்படி பட்டுன்னு பேசினதுக்கு..
இனியன்: விடுமா; எனக்கு நீ சொன்ன வார்த்தை தான் புரியலையே தவிர நானும் அக்கா தங்கச்சியோட பிறந்தவன் தான் உன் கஷ்டம் புரிஞ்சது..
நட்சத்திரா: நன்றி சார்…
(இதை பற்றி பேசினால், முகம் சுளிக்கின்றவர்கள் மத்தியில், சில ஆண் தேவதைகளும் இருந்தார்கள். ஆம், அதில் இனியனும் ஒரு ஆண் தேவதை…)
அதுவரை இனியன் மீது வைத்திருந்த ஆசை அன்று முதல், இனம்புரியாத மரியாதையாக மாறியது. டூர் முடிந்து அனைவரும் வீடு திரும்பினார்கள், ஆனால் , அவளோ இனியனின் ஞாபகத்திலே திளைத்திருந்தாள். இப்படி ஒருத்தன அவள் வாழ்நாளில் பார்த்ததில்லையே; அதுவும் தன் கஷ்டமெல்லாம் புரியுது என்று சொல்கிறானே..! மனுஷன்னா இப்படி இருக்கனும்….
அடுத்த நாள் டைம்டேபிள் பார்த்தால்; அன்னிக்கு மட்டும் இனியன் க்ளாஸ் மூன்று மணி நேரம்; கரும்பு தின்னக் கூலி வேணுமா..!! கூடுதல் ஒப்பனையோடு கல்லூரிக்குச் சென்றாள்.
இனியன்: என்னலே எல்லாரும் நான் கொடுத்த assignment முடிச்சிட்டீங்களா?
நட்சத்திரா: கயலு, இவர் என்ன கொடுத்தாரு?, எப்போ கொடுத்தாரு?
கயல்: நாயே, டூர்க்கு முன்னாடி அவர் சொன்னப் போது, நீ தான டி மண்டைய மண்டைய ஆட்டின…!
நட்சத்திரா: (இவ ஒருத்தி, நான் சைட் அடிக்கிறது தெரியாம இருக்க, அவர் பேசும் போது தலை ஆட்டுவேன்.. அது இப்படி வில்லங்கமா வந்து நிக்கும்ன்னு யாரு கண்டா..!!!) மறந்துட்டேன் டி..!!
கயல்: சரி, மூடிட்டு படுத்திரு, நான் உடம்பு சரி இல்லைன்னு சமாளிச்சுரேன்..!!
அதற்குள்.…
இனியன்: என்னமா நட்சத்திரா.. assignment முடிச்சுட்டியா…
நட்சத்திரா: (நாசமா போச்சு)இ..ல்..ல சா…ர்..
இனியன்: முடிக்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும்?
நட்சத்திரா: இல்ல சார்… டூர் போனதில மறந்துட்டேன், சாரி சார்…
இனியன்: என்ன பாத்தா கேனக் கிறுக்கு மாறி இருக்கா? இல்லை இளிச்சவாயன் மாறி இருக்கா? ஒருத்தன் நல்ல பிரண்ட்லியா பேசினா இப்படித்தான் பண்ணுவீயா? கிளாஸ விட்டு வெளியே போ முதல்ல, யார் எல்லாம் முடிக்கலையோ எல்லாரும் வெளிய போங்க..
நட்சத்திரா: சாரி சர்…
இனியன்: சும்மா மஸ மஸன்னு கண்ணு முன்னாடி நிக்காத, கிளாஸ விட்டு போறியா இல்ல HOD கிட்ட போறியா? கெளம்புங்க எல்லாரும்…
நட்சத்திரா: (அவ கிட்ட போனா காது கிழியுற அளவுக்குக் கெட்ட ஏறு ஏறுவா…பத்தலைனா குடும்பத்தையே கிழிப்பா..!! நெனச்சாலே காது வலிக்கிது…! பேசாம, மூடிட்டு வெளியப் போயிடலாம்….தடிமாடு! ஒரு assignment தான, அடுத்த க்ளாஸ்ல கொடுத்தாப் போச்சு, இப்போ என்ன குறைஞ்சு போகுது இன்னிக்கேக் கொடுக்கலனா?! இல்லப் பத்து நிமிஷம் டைம் கொடுத்தாக் கூட போதும்… நேத்து மட்டும் உன் கஷ்டம் புரியுது, நஷ்டம் புரியுதுன்னு பேசினானே… நடிப்பில சிவாஜி தோத்துடுவாரு… சரியான சாடிஸ்டு.!!, இவன் எல்லாம் மனுஷனே இல்ல…. இனிமே இவன் பக்கம் தல வச்சிக் கூட படுக்கக் கூடாது, சரியான பைத்தியம்…)
ப்ரேக்கில், நட்சத்திராவும் அவளது நண்பன் கிஷோரும் பேசிக்கொண்டிருந்தார்கள்….
கிஷோர்: இனியன், உன் ஆளு தான.. சொல்லு….
நட்சத்திரா: தேவை இல்லாம பேசாத, ஆளுனா நான் ஏன் காலையில அவளோ வசவு வாங்கப் போறேன்…
கிஷோர்: நான் மட்டும் இல்ல டி, நீ ஊத்துரத பார்த்து ஊரே அப்படி தான் பேசுது…
( உண்மைய சொல்லி விட்டான் என்ற கோபத்தில், சட்டென்று, பாட்டிலில் இருந்த நீரை அவன் முகத்தில் பீர்ச்சி எறிந்தாள்….அவள் கெட்ட நேரம், இனியன் சரியாக உள்ளே வந்தார்..)
இனியன்: என்ன நடக்குது இங்க….?
(தொடரும்)
0 Comments