சென்ற வாரம்

ஆமா நீ இன்னைக்கு வகுப்பில் இருந்த பொண்ணு தானே, உன் பெயர் என்னம்மா?
நட்சத்திரா….

அத்தியாயம்-2

மழையின் ஜோர் அடங்க கணவனின் சிணுங்கல் சத்தம் அறை முழுவதும் எதிரொலித்தது, நினைவுகளில் மயங்கிப்போன அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை, அந்த சிணுங்கல் அவளை சுயநினைவுக்கு கொண்டுவந்தது. அவன் கண்விழித்ததும் முதலில் தேடியது அவளையே… உறக்கத்தில் கூட அவனுக்கு அவள் வாசனை இழுத்தது, தன் முன் குழந்தையாக இருக்கும் கணவனைப் பார்த்தாள்..

எழிலன்: ஏய், மொசக் குட்டி, என்ன டி காலையிலே சைட் அடிகிற….?

நட்சத்திரா: ஹையொடா, ஆசை தான், நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்! எனக்கு வேலை இருக்கு, நா கிளம்புறேன்.. குட்…….மார்னிங்……..

எழிலன்: மாமாவ கொஞ்சம் கவனிச்சிட்டு போரது…….

நட்சத்திரா: ஆள விடு….தெய்வமே… !!!

எழிலன்: திமிரு புடிச்சவ, ஒரு நாள் மாட்டாமையா போவ… போடி போடி..

(எழிலன் – நட்சத்திரா, தம்பதி கல்யாணம் ஆகி 3 மாதங்கள் முடிந்தது)

இன்று அவளுக்கு அலுவலகம் போக விருப்பம் இல்லை, அதனால் எழிலன் மட்டும் தனியாகச் சென்றான், பிரியாவிடை கொடுத்து அவனை இன்று முழுதும் மறவாமல் இருக்க, கன்னத்தில் இச்ச்ச்ச்னு ஞாபக பரிசும் கொடுத்தான்.. ஒரு நிமிடம் அவள் தன்னை மறந்து போய் நடப்பது கனவா ? இல்லை நனவா ? என்று எண்ணி ஒரு விதமான

file-2709751

கலக்கத்தோடு இருந்தாள். எழிலிடம் பழையதை கூறினால் என்ன என்று யோசித்தாள், ஆனால் அவன் தப்பாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே வீணாகிவிடும் என்று ஒரு பயம்..

சிறிது நேரத்தில் அவள் கைப்பெசி அழைத்தது…

கயல்: எழிலன் கிட்ட பழசெல்லாம் சொல்லிட்டியா…?

நட்சத்திரா: இல்ல பயமா இருக்கு…

கயல்: ஒன்னும் சொல்லாம இப்படியே வாழ்க்கை முழுவதும் இருக்கப் போறியா…?

நட்சத்திரா: தெரியலடி, சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம… பயமா இருக்கு கயல்..

கயல்: என்னமோ போ! எழிலன் மாறி ஒருத்தர் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கனும், இனியும் பழசெல்லாம் நெனச்சு குழம்பிட்டு இருக்காம, வாழ்க்கையை ஆரம்பிக்கப் பாரு….

நட்சத்திரா: சரி கயல்.

அது என்னமோ பழையதை நினைக்காதன்னு சொல்லும் போது தான் அதிகமா பழசெல்லாம் ஞாபகம் வருது; மானங்கெட்ட மூளை..!!

[மகாபாரதத்தைப் போல் அற்புதமான கதை களம் பார்த்தது உண்டோ? எதோ ஒரு கோணத்தில், அதில் வரும் அனைவருமே நல்லவர்கள், அனைவருமே கெட்டவர்கள். ஆனால் அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா ? துரியோதனன். காரணம்? கர்ணன்.

1000 கிருஷ்ணன் இருந்தாலும், இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு கர்ணன் வேறு யாரிடமும் இல்லையே.. நல்லவரோ கெட்டவரோ அனைவருக்கும் வாழ்வில் ஒரு கர்ணன் வேண்டும்.. அப்படி நட்சத்திராவிற்கு அமைந்த கர்ணன் தான் கயல்]

கயல் – உருவத்திற்கும் பேச்சிருக்கும் சம்பந்தமே இருக்காது; ஆள் பார்க்க 4 அடி தான், ஆனால் வாய் மட்டும் எட்டு ஊர் கிழியும்! தலைப் போற பிரச்சினையுடன் வந்தாலும், கூந்தலாப் போச்சு என்கிறது போல் எந்த நேரமும் சாந்தமும், அமைதியுமாய் இருப்பாள். ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதிற்கு அவளே தக்க சான்று…!!

அவளோடு கல்லூரியில் மாட்டாத சம்பவமே இல்லை, கல்லூரி என்று சொல்வதை விட, சிறைச் சாலைக்கும் சீர் திருத்தப் பள்ளிக்கும் நடுவில் நிற்கும் ஆட்டு மந்தை என்றே சொல்லலாம்… தினுசு தினுசா முட்டால்தனமான விதிகளை போடுவதில் அந்த ஆட்டு மந்தைக்குத் தான் முதலிடம்.

உதாரணம் 1: FINE

08:30 மணிக்குள் கல்லூரி வரவில்லை என்றால் 50 ரூபாய் கட்டணம் மற்றும் மைதானத்தில் உள்ள குப்பைகளை எடுக்க வேண்டும். எட்டரை மணி கல்லூரிக்கு எட்டு மணிக்கே வரும் நட்சத்திரா, 08:35 போல் வந்தால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் – கயல்!!

முதல் முறை :

நட்சத்திரா: என்னது குப்பை பொறுக்கனுமா ?, 12த்ல உசுர கொடுத்து படிச்சதெல்லாம் இதுக்கு தானா…

கயல்: முதலும் கடைசியும் இது தான், நான் இனிமே சீக்கிரம் வந்திடுறேன்…

10 வது முறை :

நட்சத்திரா: என் அப்பன் சொத்து முழுசா fine கட்டியே போயிடும் போல, இதுக்கு மேல வட்டிக்கு கடன் வாங்கி தான் fine கட்டனும்.

கயல்: இதான் கடைசி, நாளைக்குப் பாரு சீக்கிரம் வந்திடுறேன்..

nth முறை :

நட்சத்திரா: நீ எல்லாம் மனுஷியே இல்ல, தெரியுமா ?

கயல்: சரி விடு டி, நாளைக்கு சீக்கிரம் வந்திடுறேன்…

மெட்ராசின் அனைத்து புனிதமான வார்த்தைகளும், அவள் தொண்டை வரை வரிசை கட்டி நிற்க… திடிரென ஒரு குரல் கேட்டது,

”…வேலையை நல்லா பாருங்க அடுத்த ஒரு வாரம் நான் தான் இன்சார்ஜ்….”

திரும்பிப் பார்த்தால் இனியன்…

இனியன்: என்னம்மா கயல், நீ படிக்கிற பொண்ணு, இவ்ளோ லேட்டா வர? நட்சத்திரா லேட் பன்னிட்டாளா ?

கயல்: ஐயோ சார், நீங்க வேற! எரியிற நெருப்பில எண்ணெய ஊத்தாதீங்க !!! என்னாலத்தான் லேட் ஆச்சு..

இனியன்: வேலிக்கு ஓணான் சாட்சியா? என்னமோ போ…

அவர் சென்ற பின்,

கயல்: ஊத்துது பாரு, தொடச்சிக்கோ…

நட்சத்திரா: நீ பொறுமையா வா கயலு, ஒரு வாரம் லேட்டா வந்தா தப்பே இல்லை…

கயல்: சரி இல்லையே!!! இரு பாத்துக்குறேன்…

உதாரணம் 2 : TIMESHEET MAINTAINENCE

அதாவது… அன்று என்ன பாடம் எடுத்தார்கள் என்பதை தினமும் புத்தகத்தில் பதிவு செய்து, attedance எடுத்து வாரம் ஒரு முறை ஆட்டு மந்தை தலைவியிடம் காட்ட வேண்டும். இந்த வேலையை சிலர் மாணவர்களிடம் தள்ளி விடுவார்கள், அப்படி இனியனுக்கு வாய்த்த அடிமை தான் கயல்.

நட்சத்திரா: கயல், நீ ரொம்ப டயர்டா இருக்கா நான் போய் டைம்ஷீட் கொடுத்துட்டு வரட்டா ??

கயல்: தேவையே இல்ல! நானும் உன்ன கவனிச்சுட்டு தான் இருக்கேன். நானே போய் கொடுத்துக்குறேன்.

நட்சத்திரா: கர்ணன்ல இருந்து எப்போ டி சகுனியா மாறின ?

கயல்: எல்லாத்துக்கும் அடம், எடுத்துட்டு போய் தொல, உயிரை வாங்காதே !!!!

(இனியனின் அறைக்கு சென்று..)

இனியன்: என்னமா நீ வந்திருக்க கயல் எங்க ?

நட்சத்திரா: கொஞ்சம் வேலையா இருக்கா சார், அதான் நான் வந்தேன்.

இனியன்: நீ போய் அவளை கூட்டிட்டு வா மா..

(கயலை உடனே அழைத்து வர…)

கயல்: சொல்லுங்க சார், என்ன ஆச்சு ?

இனியன்: இனிமே நீயே கொண்டு வந்து கொடு, லேட் ஆனாலும் பரவால்லை.

(வெளியே வந்த பின், நட்சத்திராவின் கலங்கிய கண்களை பார்த்தவுடன்)

கயல்: விடு டி, அந்த ஆள் லூசு, நீ இனிமே பேசாத அவன் கிட்ட… (சகுனி mode ON)

நட்சத்திரா: ஆமா, நான் இனிமே பேசவே மாட்டேன்.

அடுத்த நாள் சிம்போசியம், அவள் இரண்டாம் ஆண்டு என்பதால் சேலை கட்டி வணக்கம் வைத்தால் மட்டும் போதும். முதன்முதலில் சேலை கட்டினாள், கட்டின உடனே முதல் எண்ணம், அவரிடம் காட்ட வேண்டும் என்பது மட்டுமே…![மானங்கெட்ட மூளை] , விரைவாக நடக்க தெரியாமல் கஷ்டப் பட்டு நடந்து கல்லூரி வந்தாள், அவரும் சரியாக வாசலில் நின்றார்…

இனியன் அவளைக் கண்டதும் கண் இமைக்காமல், அவளையே பார்த்தார்..

நட்சத்திரா: (…என்ன ஆச்சு இந்த ஆளுக்கு, நேத்து அவளோ சீன் போட்டான், இப்போ வச்ச கண்ணு வாங்காம பார்க்குரான், மூச்சு வருதா… செத்து-கித்து போய்டானா?, இல்ல இல்ல மூச்சு வருது, தடிமாடு! பார்க்குர நேரத்துல எதாவுது பேசலாம்ல… அது சரி, நம்மளே பேச்சு கொடுத்து பார்ப்போம் )

வணக்கம் சார்….

எந்த அசைவும் இல்லை…இனியனிடம் இருந்து..! அது எப்படி எல்லாம் சரியா போகும், சிவ பூஜையில் கரடி வந்தது…..

கயல்: என்ன சார், எப்படி போது சிம்போசியம் வேலை எல்லாம்?

இனியன்: (பெருமூச்சு விட்ட பின்) ஆ… அது வந்து… என்ன கேட்ட? சரி, நீ போய் வேலையப் பாரு..

அவர் சென்ற பின்…

கயல்: என்ன டி பன்ன அவர ? இப்படி உளருராரு…!

நட்சத்திரா: சகுனி நாயே, அப்படியே போய்டு எங்கயாச்சும்…!!!

ஒரு மணி நேரம் பின் இனியனே வந்தார்,

நட்சத்திரா: என்ன ஆச்சு சார் ? எதனா வேனுமா ?

இனியன்: ஆ… இல்ல, அதெல்லாம் இல்ல… சேலை நல்லா இருக்கு மா..

நட்சத்திரா: (எதொ ஒரு குருட்டு தைரியத்துல) அப்போ நான் ?

(தொடரும்..)

,


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.