அதிகாலை 3:30,
கசங்கிய சேலையை அள்ளிக்கொண்டு ஜன்னலுக்கு அருகில் சென்று மழையை பார்த்துக்கொண்டிருந்தாள்… என்னவோ அன்று மழையை ரசிக்கத் தோன்றவில்லை மனதில் அளவுகடந்த பாரம், ஒரு புறம் சேலையை கசக்கிய கணவனை நினைத்து; மறுபுறம் பழைய நினைவுகளையும் நினைத்து அவள் மனம் கனத்தது.

அது ஒரு அழகிய காலம், துறுதுறுவென்று ஆண்பிள்ளைகளுக்கு சமமாகப் பேசுவதிலும்; கலாய்ப்பதும்; வம்பு செய்வதும் என அனைவருக்கும் செல்லப்பிள்ளை. அவள் இல்லை என்றால் அன்று வகுப்பே மௌனவிரதம் போல் இருக்கும். காதல், கடவுள் பற்றி எல்லாம் நம்பிக்கை இல்லாதவள். குட்டி கண்ணு; குட்டி மூக்கு; பார்ப்பவர்களுக்கு ஜவ்வுமிட்டாய் போல் இழுக்க தோன்றும் கண்ணங்கள்; சுண்டி இழுக்கும் நிறம்; பிரம்மன் செதுக்கிடும்போது அவனது கையில் உள்ள உளியே வழுக்கி விழுகும் போல் இடை அமைப்பு; முன்னழகும் பின்னழகும் போடும் போட்டியில் யார் ஜெயிப்பது என்ற கேள்விக்கு, பாவம் அவளைப் படைத்த பிரம்மனுக்கே பதில் தெரியாது…
இது அனைத்தையும் துச்சமாக நினைக்க வைக்கும் அவளது திமிரும்; பொறாமைப்படும் கர்வமும்; எவரையும் அருகில் வர விடாமல் தடுக்கும் அவளது நெருப்பும், பாரதியின் கனவை நிஜமாக்கியது.
அன்று கல்லூரி முதல் நாள், மனம் முழுக்க ஏதோ தவிப்பு, பயம், ஏக்கம்…. அது அத்தனையும் ஒரு மாதத்தில் பறந்து போய் வாயாடிப் பட்டம் பெற்றுவிட்டாள்.
ஒரு மாதம் கழித்து திடீரென்று ஒரு நாள் அவள் கண் முன், அவன் தோன்றினான். பார்த்த நொடியே பாவைத் தன்னை இழந்தாள், அவனின் பேச்சில் கண்ட கண்ணியத்தில் இவளோ வாயடைத்து போனாள், ஏனோ வாயாடிப் பட்டம் பெற்ற அவளுக்கு அன்று அவன் முன் பேச்சே வரவில்லை.
இதயம் துடிப்பதில் எகிறி குதித்து வெளியே வந்துவிடும் போலிருந்தது, அனைவரும் கலாக்க, அதெல்லாம் இல்லை, அவன் ஆசிரியர் நான் மாணவி, வேறு ஏதுமில்லை என்று சமாலித்து விட்டாள், ஆனால் அவளுக்கு மட்டுமே தெரியும் அவன் attendance எடுக்கும்போது present sir சொல்ல அவள் பட்டபாடு, அந்த ஒரு நொடி நான்கு கண்கள் சந்தித்த அந்த ஒரு விநாடி… (ராஜா பாட்டுக்கள் அனைத்தும் வந்து சென்றன)
அடுத்த நாள் காலை, அவன் பேரைத் தேட ஏதேதோ வழிமுறைகள் பயன்படுத்தி கடைசியில் தோல்வியே மிச்சமானது. ௮யர்ந்து போய் வந்தவளை, “இனியன் சார் கிட்ட ஒரு sign வாங்கிட்டு வா, பக்கத்து ரூமில் இருப்பார்” என்றார் class teacher. இருந்த கடுப்பில் யார் இனியன் என்பதைக் கூடக் கேட்காமல் பக்கத்து ரூமில் நுழைந்தாள். அவள் இனியன் என்று அழைப்பதற்கும் அவன் திரும்புவதற்கும் சரியாக இருந்தது…அவனைப் பார்த்தவுடன் வந்த வேலையை மறந்து, அயர்வையும் மறந்து,நல்லா டூத்பேஸ்ட் விளம்பரம்போல் 32 பல்லையும் காட்டி நின்றாள்.
பேந்த பேந்த முழித்த அவளைக் கண்டு, சிரித்துக்கொண்டே இனியன் பேசத் தொடங்கினான்…
என்னம்மா கையில paper ஒட வந்து இருக்க ?
அது வந்து சார், sign கேட்டாங்க…
ஓ அப்படியா, சரி மா… ஆமா நீ இன்னிக்கு வகுப்பில் இருந்த பொண்ணு தானே உன் பேரு என்னமா?
நட்சத்திரா….
(தொடரும்…)
0 Comments