சென்ற வாரம்:
அம்மா: டேய் பேசாம இவள விட்டுட்டு வா..! இல்ல இவள அடிச்சி அம்மா வீட்டுக்கு அனுப்பு; அப்போ தான் புத்தி வரும்.!
நட்சத்திரா: இதே மாதிரி பேசிட்டு இருங்க..! ஒரு நாள் உங்களை அம்மி கல்லுல வச்சி அரைக்கிறேன் பாருங்க..!
எழிலன்: ரெண்டு பேரும் வாயை மூடிட்டு போறீங்களா..! காலையில இருந்து ஒரு மனுஷனுக்கு நிம்மதியே கிடையாது போல..! கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா… அங்க இரண்டு கொடுமை தலையை விரிச்சுப் போட்டு ஜிங்கு ஜிங்குன்னு ஆடுற மாதிரி ரெண்டு பேரும் ஆடுறீங்க..! என்னால முடியல..!
அத்தியாயம் 14: பகல் நிலவு
அம்மா: எப்படி டா நீயும் இப்படி பேசுற..?!
நட்சத்திரா: வேற எப்படி பேசுவாங்க.. வாயில தான்..!
எழிலன்: ஐயோ அம்மா, முடியல தயவு செஞ்சு போய் குளி மா..! எனக்கு ஆபீஸ் போகணும், நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டே லேட் பண்ணுறீங்க..!
அம்மா: கடவுளே..! என் பையனை நீ தான் காப்பாத்தணும்..!
(சாப்பிடும்போது..)
அம்மா: ஏய் என்னடி இட்லி இது.. கல்லு மாதிரி இருக்கு..? இப்படி சாப்பிட்டா என் பையன் உடம்புல எப்படி டி தெம்பு வரும்?!
நட்சத்திரா: அங்க பாருங்க.. ஆறு இட்லி உள்ள போயிடுச்சு அதுக்குள்ள..!
அம்மா: சரியான சோத்து மூட்டை..! மெதுவாதான் சாப்பிட்டு தொலையேன்..! என் மானம் போது உன்னால..!
எழிலன்: தெய்வமே..! நான் கிளம்புறேன், இரண்டு பேரும் தலையப் பிச்சுகிட்டு, ரோட்ல உருண்டு கூட சண்டை போடுங்க.. என்ன ஆள விட்டா போதும்.! பாய் பாய்..!
நட்சத்திரா: மாமா டாட்டா..!
எழிலன்: வீட்டுக்குள்ள ஒரு தடவை மாமான்னு சொல்லிடாத..! கிளம்பும் போது மாமான்னு சொல்லி உசுப்பேத்தி விடு நல்லா..! நல்லா வருவ டி நீ..!
அம்மா: பாத்து போயிட்டு வாடா..! நல்லா சாப்பிடு..!
எழிலன்: இதையும் சொல்லு, தின்னாலும் திட்டு..! ஆனா ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல..!
(எழிலன் சென்ற பின்பு..)
அம்மா: ஏய் நிலா எங்க டி..?!
நட்சத்திரா: அதுவா..! வானத்துல..! நைட் நைட் வரும்..!
அம்மா: கொழுப்பு தான் டி உனக்கு..! திமிருப் பிடிச்சவ..!
நட்சத்திரா: அவ, உங்க சத்தம் தாங்காம அப்போவே ஊர் சுத்தப் போயிட்டா..!
அம்மா: அப்பாடா..!
நட்சத்திரா: போதும்..! ரொம்ப நடிக்காதீங்க அத்தை..!
அம்மா: அது சரி.! இன்னும் என்ன டி அத்தை சொத்தன்னு..! வாய் நிறைய அம்மான்னு கூப்பிடு.!
நட்சத்திரா: சரி சரி அம்மா..!
அம்மா: ராசாத்தி.! நீதான்டி துரும்பா இளைச்சு போயிட்ட..! அவனுக்கு சோறு போட்டு போட்டு பன்னி மாதிரி பெருத்து போய் இருக்கான். நீ சாப்பிடுறியா இல்லையா, வா நான் ஊட்டி விடுறேன்..!
நட்சத்திரா: போங்க மா..! இருந்தாலும் காலையில இருந்து ரொம்ப கத்திட்டீங்க..!
அம்மா: என்னடி பண்றது..! என் பையன் ஒரு அம்மா பைத்தியம்..! அப்புறம், நான் உன்னை கொஞ்சுறதப் பாத்தா, வயிறு எரிஞ்சு, உன் கிட்ட சண்டை போடுவான்..! ஏன் உனக்கு தெரியாதா..?!
நட்சத்திரா: ஏன் தெரியாது..! நீங்க தானே தனிக்குடித்தனம் பார்த்து வச்சீங்க..!
அம்மா: பின்ன சின்னஞ்சிறுசுங்க.. நல்லா என்ஞாய் பண்ணுற வயசு இது..! அத விட்டுட்டு, எங்க கூட இருந்து பாத்திரம் தேய்க்கிறதும்; துணி தோய்க்கிறதும் பண்ணா நல்லாவா இருக்கும்..?! இந்த வயசுல போடுற வசியம் தான் கடைசி காலம் வரைக்கும் நிக்கும்..!
நட்சத்திரா: அதெல்லாம் உங்க ஆசிர்வாதத்துல நல்லா சொக்குப் பொடி போட்டாச்சு..!
அம்மா: பார்ரா..! இன்னும் என் புருஷன், என் பின்னாடி சுத்துற காரணமே அப்போ மந்திரிச்சது தான்..!
நட்சத்திரா: அது சரி, அதுக்கு தான் நீங்க வேற வீடு பாத்துக் குடுத்தீங்க..! நாங்க இல்லைனா நீங்க உங்க புருஷன் கூட ஜாலியா இருக்கலாம்..!
அம்மா: வாயமூடு..! வெட்கமா இருக்கு..!
நட்சத்திரா: யாருக்கோ இளமை திரும்புது போல..!
அம்மா: முதல்ல சாப்பிடு, 3 இட்லி ஊட்டுறதுக்குள்ள ஆயிரத்து எட்டு கேள்வி..!
நட்சத்திரா: ஆமா, இட்லி நல்லா தான இருக்கு..! கல்லு மாதிரி இருக்குன்னு சொன்னீங்க..?!
அம்மா: இல்லயே..! மல்லிப்பூ மாதிரி இருக்கு..! என் மக கைப் பட்டது எப்படி கல்லு மாதிரி இருக்கும்..?!
நட்சத்திரா: அப்புறம் ஏன் அப்படி சொன்னீங்களாம்..?!
அம்மா: அதுவா, என் பையன்ன பாக்க எனக்கே பயமா இருக்கு..! பகாசுரன் மாதிரி திங்கிறான்..! தின்னா மட்டும் போதுமா.. உடம்பு கொஞ்சம் கூட அசையாம, லேப்டாப் முன்னாடியே உட்கார்ந்து 24 மணி நேரமும் தேவுடு காக்கிறான்..! இப்படியே போச்சுனா, உடம்பு வீணாப்போயிடும்..!
நட்சத்திரா: அதுவும் சரிதான்..! ஆனா, அப்படி பார்த்தாக் கூட ஏழு இட்லி உள்ள போயிடுச்சு..!
அம்மா: சரி விடு டி..! ஏதோ வளர்ற பையன், பாசத்துல சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் அதிகமா ஊடிட்டேன்..!
நட்சத்திரா: ஆமா ரொம்ப கொஞ்சம்..!
அம்மா: விடு டி, முதல்ல சாப்பிடு, மாதவிடாய்னு வேற சொல்ற..! இரு உனக்கு ஜூஸ் போட்டு தரேன்..! இந்த நேரத்துல மாதுளம் ரொம்ப நல்லது.!
நட்சத்திரா: அம்மா அப்படியே சமைச்சிடுங்க..! நானே சமைச்சு நானே சாப்பிடுவது போரடிக்குது..!
அம்மா: சமைச்சிட்டாப் போச்சு..! என்ன வேணும்..?!
நட்சத்திரா: நல்லா காரமா.. காரக் குழம்பு…! தொட்டுக்க அப்பளம்..! ஆனா நல்லா காரமா வேணும்..! உங்க பையனுக்கு கொஞ்சம் காரம் போட்டாலே ஆகலை, எனக்கு நாக்கே செத்துப் போச்சு உப்பு சப்பு இல்லாம சாப்பிட்டு..!
அம்மா: அவன் அப்படித் தான்..! வாசனை தெரியாத பூசனைப் பூ..! உனக்கு காரம் தான வேணும் தூள் கிளப்பிடலாம்..!
நட்சத்திரா: சூப்பர் மா..! அம்மா.. ஒன்னு கேட்கணும்..அந்த சாமி ரூம்ல உங்களுக்கு எதுவும் கோவம் இல்லையே..?!
அம்மா: இதுல என்னடி கோவம்..?! சொல்லப் போனா பெருமையா தான் இருக்கு..! என் அப்பா அம்மா படத்துக்கு நானே விளக்கேத்தி கும்பிட்டது இல்ல..! ஆனா நீ கும்பிடுற பாரு..! அந்த மனசுக்கு தான, உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்..!
நட்சத்திரா: அப்ப கண்ணாடி..?!
அம்மா: அது பிடிக்கல தான்..! ஆனால், அது உன் நம்பிக்கை..! அதுல நான் குறுக்கே வர மாட்டேன்..!
நட்சத்திரா: அப்புறம் ஏன் அவர் முன்னாடி மட்டும் திட்டிட்டு இருக்கீங்க..?!
அம்மா: என் பையன் லூசு டி..! இப்ப நான் மெதுவா பொறுமையா சொன்னா, அம்மா சொல்லிட்டாங்க, அதனால தப்பு இருக்கா, இல்ல சரியான்னு யோசிப்பான்..! ஆனா, இதுவே இப்ப நான் எல்லாதுக்கும் கத்தினா.. அவங்க எல்லாதுக்கும் கத்துக்கிட்டு இருக்காங்கனு கண்டுக்காம போயிட்டே இருப்பான்..!
நட்சத்திரா: தெய்வமே..! எங்கயோ போயிட்டீங்க..!
அம்மா: அடங்கு டி..! என் பையன பத்தி எனக்கு தெரியாதா..?!
நட்சத்திரா: சரி சரி, ரொம்ப தான்..! எனக்கு தலக்கட்டி விடுறீங்களா..?!
அம்மா: சரி வா..! அப்படியே போய் பூ எடுத்துட்டு வா..! பையில இருக்கும் பாரு..!
நட்சத்திரா: பார்ரா..! என்ன பூ எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கீங்க..!
அம்மா: நம்ம வீட்ல வளர்ந்தது..! உன் கல்யாணத்துக்கு எல்லாருக்கும் கொடுக்கும் போது, நமக்கும் ஒன்னு எடுத்து வச்சேன்..! அதுல வந்த முதல் பூ உனக்கு தான்..!
நட்சத்திரா: அதுக்குள்ள வளர்ந்துருச்சா..?! இப்போ தான் கல்யாணம் முடிஞ்ச மாறி இருக்கு..! அத்தை ஒன்னு சொல்லவா..! இப்படி நீங்க எனக்கு தலை கட்டும்போது நிஜமாகவே எனக்கு இன்னொரு அம்மா கிடைச்ச மாறி தான் இருக்கு..! எப்படி அத்தை நீங்க மட்டும் இப்படி இருக்கீங்க..?!
அம்மா: அதுவா, என் மாமியார் எனக்கிட்ட எப்படி எல்லாம் இருக்கணும்னு ஆசைப்பட்டேனோ, உனக்கு அப்படியெல்லாம் நான் இருக்கேன்..! இனிமேயும் இருப்பேன்..!
நட்சத்திரா: சூப்பர் தான் அத்தை நீங்க..!
அம்மா: ஏய்..!
நட்சத்திரா: சாரி சாரி, அம்மா..! என்னோட அம்மா தான் நீங்க..!
அம்மா: பின்னிட்டேன் பாரு..! அழகு.! எவ்ளோ நெட்டு ஒடையுது பாரு..!
நட்சத்திரா: எல்லாம் உங்க பையன் கண்ணு தான்..!
அம்மா: இருக்கும்..! அவன் தான் நாய் மாறி உன் பின்னாடியே சுத்துறானே..! அய்யோ பாரு, பேசிட்டே ஜூஸ் போட்டு தர மறந்துட்டேன்..! அந்த பரண்ல இருந்து ஜூஸர் எடு..!
நட்சத்திரா: இதோ எடுத்துத் தரேன்..! ஐயோ, எட்டலை அம்மா…!

அம்மா: இதுக்குத்தான் அந்த தடிமாடு வேணும்..! அவன் கையை சும்மா தூக்கினாலே எட்டி இருக்கும்..!
நட்சத்திரா: சும்மா என் புருஷனை திட்டாதீங்க..! ஏதொ பார்க்க கொஞ்சம் பெருசா இருப்பாரு..! அதுக்கு திட்டுவீங்களா..?!
அம்மா: பார்ரா கோவத்த..!
நட்சத்திரா: பின்ன வராதா..?! என் புருஷன் ஆச்சே..!
அம்மா: வரும் வரும், உனக்கு..! இப்படி வரவ, ஒரு பேரன் பேத்தி எடுத்து என் கையில் கொடுத்தா என்னவாம்..?!
நட்சத்திரா: இந்தோ பாருங்க அத்தை..! இன்னொரு தடவ பேரன் பேத்தின்னு சொன்னீங்க..! அவளோ தான்..! அவளோ வேணும்னா, நீங்களும் மாமாவும் பெத்துக்கோங்க..!
அம்மா: இப்போ குழந்தை பெத்துக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை..?!
நட்சத்திரா: அம்மா..! உங்களுக்கு எல்லாமே தெரியும், அப்புறமும் எப்படி மா..?!
அம்மா: என்ன டி, இனியன் தான..? ஊர் உலகத்துல யாருமே லவ் பண்ணலையா..?! நீ மட்டும் தான் பண்ணியா..?! அதான் முடிஞ்சு போச்சே..! இப்போ எழிலன் மேல உசுரா இருக்க..! அது உனக்கு புரியலையா..?!
நட்சத்திரா: இல்ல அம்மா..! எனக்கு எல்லாமே புரியுது.! ஏன் குழந்தைப் பெத்துக்கனும்னு அவ்ளோ ஆசையா இருக்கு..! ஆனா, அவர் கிட்ட உண்மைய சொல்லாம எதுவுமே முடியாது அம்மா..! நெருப்பு மேல நிக்கிற மாறி இருக்கு, அவர் என்ன கொஞ்சும் போது..! கட்டிப் பிடிக்கும் போது எல்லாம், விட்டு போயிடுவாரோன்னு பயமும் கூடவே வருது..! எனக்கு என்னப் பண்ணனே தெரியல அம்மா..! எதோ நடு கடல்ல மாட்டிக்கிட்டு, நீந்தி கரைக்கும் வர தெரியாம, உள்ள முங்கவும் தைரியம் இல்லாம.. நரகமா இருக்கு..!
அம்மா: சரி சரி..! அழாதா..! கொஞ்சம் டைம் கொடு..! எல்லாமெ சரி பண்ணிடலாம்..!
நட்சத்திரா: நிஜமா..?!
தொடரும்…
0 Comments