மாமியார் கொடுமைன்னு சும்மாவ சொன்னாங்க..! எதாவுது சண்டை போட்டா பரவாயில்லை; எல்லாத்துக்கும் சண்டைப் போட்டா.?! இதான் நிலைமை..!

சென்ற வாரம்:

நட்சத்திரா: நான் என்ன ஸ்கூல் நடத்துறேனா அத்தை..? அவர்க்கு வேணும்னா அவர் தான் எடுத்து சாப்பிடனும்.! நான் என்ன ஊட்டியா விட முடியும்..?! விட்ட சாப்பாட நானே மென்னு தரவா..?!

அம்மா: பாரு டா எப்படி பேசுறான்னு..! பேசாம நம்ம வீட்டுக்கு வந்து இருடா..! இல்லை நான் இங்கே வந்து இருக்கேன் இனிமே..!

நட்சத்திரா: யாரு வர வேண்டாம்னு சொன்ன..?!

எழிலன்: விடுங்க வந்ததும் வராததும் சண்டை..! என்னால முடியல..!

அம்மா: இரு டி; உன்னப் பாத்துக்கிறேன்..!

அத்தியாயம் 13 தீராத காதல்

அம்மா: ஏய் இப்ப தான் முதல் முறை வீட்டுக்கு வர்ரேன்..! சுத்தி காமிக்க கூட மாட்டியா?

நட்சத்திரா: இதோ அத்தை; நீங்க ஏற்கனவே பாத்து இருக்கீங்கன்னு நினைச்சேன்..! அதான் திருப்பி கேட்கல..!

அம்மா: அது பால் காய்ச்சும் போது பாத்தது.! அப்போ தான் சாமான் சட்டி எல்லாம் எதுவுமே இல்லையே; இப்போ நீ எந்த லட்சணத்தில் வச்சிருக்கன்னு நானும் பார்க்கிறேன்..!

நட்சத்திரா: ஓஓஒ..! அப்படியா..! இதுதான் அத்தை ஹால்; நீங்க நிக்கறீங்கல அதுக்கு நேரா இருக்கிறது தான் டிவி அதுலதான் படம் பார்ப்போம்; அப்படியே பக்கத்தில் வந்தீங்கன்னா டைனிங் டேபிள் அங்கதான் உட்கார்ந்து சாப்பிடுவோம்..! அப்புறம்…

அம்மா: ஏய் என்னடி நக்கலா..?! ரொம்ப தான் டி கொழுப்பு ஏறிப் போய் இருக்கு உனக்கு; இரு என் பையன் கிட்ட சொல்லுறேன்..! முதல்ல சாமி ரூம் எங்க இருக்குன்னு சொல்லு..?!

நட்சத்திரா: கிச்சன் பக்கத்துல..! வாங்க..!

அம்மா: அது என்னடி சாமி ரூம் இரண்டா இருக்கு..?!

நட்சத்திரா: அதுவந்து..!

அம்மா: முதல் இந்த கதவ திற..! ஒரு பக்கம் சாமி போட்டோ எல்லாம் நல்லாதான் வச்சிருக்க..! பரவால்ல உங்க வீட்ல நல்லாத் தான் சொல்லித்தந்திருக்காங்க..!

நட்சத்திரா: (வஷிஸ்டர் வாயில இருந்து பிரம்ம ரிஷி பட்டம் தான்) தெரிஞ்சா சரி தான்..!

அம்மா: அந்த பக்கம் என்னடி இருக்கு..?!

(துறந்துப் பார்த்தால் பெரியக் கண்ணாடி மட்டும் இருந்தது…!)

file-3744469

அம்மா: என்னடி சாமி போட்டோ பக்கத்துல கண்ணாடியை வைச்சு இருக்க.. அறிவு இருக்கா உனக்கு..?! என்ன தாண்டி உன் அம்மா சொல்லி வளத்தாங்க..?! கருமம் கருமம்..! முதல்ல தூக்கிப்போடு அதை..!

நட்சத்திரா: சும்மா நிறுத்துங்க அத்தை..! உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு; எனக்கு இல்ல; நான் என்ன நம்புறேன்..! எனக்கு, நல்லது நடந்தாலும்; கெட்டது நடந்தாலும் அதை நானே பார்த்துப்பேன்..! அதற்கு நானே பொறுப்பு எதுக்குறேன்..! அதுக்கு தான் இந்த கண்ணாடி..! உங்க நம்பிக்கைய நான் எதிர்க்கவில்லை..! அதே மாறி என் நம்பிக்கையில நீங்க குறுக்க வராதீங்க..! அதுவும் இல்லாம சும்மா உங்க வீடு மாறி இங்கிருந்து நாட்டமை பண்ணாதீங்க..!

அம்மா: ஐயோ கடவுளே இதெல்லாம் பார்க்குறதுக்கா இன்னும் என்ன உயிரோட வச்சிருக்க..?!

நட்சத்திரா: இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி பேசுறீங்க..?

அம்மா: இதுக்கு மேல என்ன டி நடக்கணும்?! டேய் எழிலா…! பாத்தியாடா இவள, கண்ணாடியை போய் சாமி கும்பிடற இடத்தில வச்சிருக்காடா..!

எழிலன்: இதுக்கே இப்படியா..?! இன்னும் கீழே திறந்து காட்டலையா..?!

நட்சத்திரா: இல்லைங்க..!

அம்மா: அங்க என்னத்த டி வச்சிருக்க..?!

(குடும்பத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறந்த அனைவரின் புகைப்படங்களும் விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது..)

அம்மா: என்னது டி இது..?! இப்படி அநியாயம் பண்ற..! ஒரு பக்கம் கண்ணாடி வச்சி உயிர வாங்குற இன்னொரு பக்கம் சாமி பக்கத்தில் போய், செத்த மனுஷங்கள வச்சிருக்கியே..?! கடவுளே…! சோறு தான திங்கிற..?! இப்படியுமா ஒரு பொண்ணு பண்ணுவா..?!

நட்சத்திரா: நான் சோறு தான் திங்கிறேன்..! அதான் பகுத்தறிவுன்னு ஒன்னு வளர்ந்து இருக்கு..! நீங்க நேர்ல பாக்காத வெறும் கல்லை சாமி சாமின்னு சொல்றீங்க; நான் நம்ம கூட இருந்து; வாழ்ந்து; செத்தவர்களை தான் சாமின்னு சொல்றேன்..! சொல்லப்போனா, பகுத்தறிவு வளர உங்களுக்குத்தான் ஏதாவது சமைச்சு போடணும் போல..!

அம்மா: எவளோ திமிரு உனக்கு; முதல்ல எல்லா போட்டோவையும் தூக்கிப் போடுறேன் பாரு..!

நட்சத்திரா: அத்தை, திரும்ப சொல்லுறேன்..! சும்மா வந்துட்டு என் நம்பிக்கையில குறுக்க வராதீங்க..!

அம்மா: என்னடி பெரிய நம்பிக்கை உனக்கு..?! அவ்ளோ நம்பிக்கை இருக்கிறவ பாரதியார் போட்டோவையும், பெரியார் போட்டோவையும் பக்கத்தில் வைச்சு விளக்கேற்றி கும்பிட வேண்டியதுதான..?! சும்மா பேசற பெரிய இவ மாதிரி..!

நட்சத்திரா: நாசமா போச்சு..! பெரியார் புகைப்படத்துக்கு விளக்கை ஏத்தனுமா..?! நல்லதுக்கா அவர் உயிரோட இல்லை..! இருந்திருந்தா இதைக் கேட்டு தூக்கு மாட்டி தொங்கி இருப்பாரு..! அது சரி; சிலப் பேருக்கு பகுத்தறிவு இரத்தத்திலேயே இருக்கணும்..! அதெல்லாம் உங்களுக்கு வர வாய்ப்பே இல்லை..!

அம்மா: எவ்வளவு திமிரு டி உனக்கு..?! என்ன பாவம் பண்ணினேனொ இந்த மாதிரி மருமகள் வந்து வாய்க்க..!

எழிலன்: எதுக்கு மா சும்மா அவளை திட்டிட்டே இருக்க..?!

அம்மா: வந்துட்டியா வக்காலத்து வாங்க..?! வாடா..! இதுக்குதானா பத்து மாசம் சுமந்து பெத்ததேன் உன்ன..! ஏன் சொல்ல மாட்ட..?

நட்சத்திரா: அது சரி..! பின்ன மத்தவங்க எல்லாம் என்ன முப்பது மாசாமா சுமந்து இருப்பாங்க..?!

எழிலன்: ஏய், நீ உள்ள போய் உட்காரு.! சும்மா அம்மா கிட்ட வந்து வம்பு பண்ணிட்டு இருக்க..! இதுக்கு மேல பேசினா பல்லத்தட்டி கையிலக் கொடுப்பேன்..! உள்ளப் போடி முதல்ல..!

அம்மா: அப்படி சொல்லுடா என் வைரமே..! இவள எல்லாம் இப்படித் தாண்டா அடக்கி வைக்கணும்..! அடக்காம விட்ட துளிர் விட்டு போயிடும்.!

எழிலன்: சரி மா..! நீ போய் குளிச்சிட்டு வா..! சாப்பிடலாம்..!

(உள்ளே வந்தவுடன்)

நட்சத்திரா: என்னப் பார்த்தா எப்படி இருக்கு..?!

எழிலன்: இது என்ன கேள்வி; நல்லா மஸ்கோத் அல்வா மாதிரி தளதளன்னு இருக்க..! அதுல என்னடி சந்தேகம் உனக்கு..?!

நட்சத்திரா: கொன்றுவேன்..! என்னவோ பல்லத்தட்டி கையில கொடுப்பேன்னு சொன்னீங்க..?!

எழிலன்: அது அப்படி இல்ல தங்கம்.! உன் பல்லுப் பார்க்க வைரத்தில தட்டி வச்ச மாதிரியே இருக்கேன்னு சொன்னேன்..!

நட்சத்திரா: ஐயோ டா..! போ போ உங்க அம்மா முந்தானைல முடிஞ்சு வச்சுக்குவாங்க..! அங்கே போய் இருங்க..! எதுக்கு எங்கிட்ட வர்றீங்க..!

எழிலன்: நீ முந்தானையக் காட்டு..! எப்படி மடியுரேன்னு பாரு..!

நட்சத்திரா: இந்த கதை எல்லாம் வேண்டாம்..! உங்க அம்மாவ உங்க வீட்டுக்கு கிளம்ப சொல்லுங்க முதல்ல..!

எழிலன்: பாவம் டி அவங்க.! ஒரே ஒரு நாள் இருந்துட்டு போகட்டும்..!

நட்சத்திரா: ஆமா ஆமா..! ரொம்ப பாவம் தான்..!

எழிலன்: சரி, நம்ம காலையில ஒன்னு பேசிட்டு இருந்தோமே..! ரிகர்சல் பார்க்கலாம்னு..! அது இன்னும் டீல்ல இருக்குல்ல..?!

நட்சத்திரா: இருக்கு இருக்கு..! ஆனா உங்க அம்மாவ வச்சிக்கிட்டு..!

எழிலன்: அதெல்லாம் இல்ல அவங்க பாட்டுக்கு அவங்க வேலைய பாத்திட்டு இருப்பாங்க..!

நட்சத்திரா: ஓஓஓ..! அவங்க வேலையே என்ன திட்டுறது தான்.!

எழிலன்: அதெல்லாம் இல்ல..! நீ டைம் வேஸ்ட் பண்ணாம மாமன் கிட்ட வா..!

(அதற்குள்…)

அம்மா: எப்பா கடவுளே..! எப்பதான் எனக்கு ஒரு பேரன் பேத்திய கொடுக்கப் போறியோ..!

நட்சத்திரா: எப்படி கத்துறாங்க பாருங்க உங்க அம்மா..! மூணு மாசம் தான் ஆகுது கல்யாணம் ஆகி..! அதுக்குள்ள பேரன் பேத்தி வேணுமாம்..! நான் என்ன புள்ளை பெத்துக் கொடுக்குற தொலிற்சாலையா..?!

எழிலன்: விடு டி..! அவங்க ஆதங்கம் அது..!

நட்சத்திரா: ஹைய.! உங்க அம்மாக்கு பகுத்தறிவு தான் இல்லைன்னு பாத்தா..! குழந்தைப் பெத்துக்குற அறிவுக் கூடவா இல்லை..?! நல்ல குடும்பத்துல வந்து மாட்டிக்கிட்டேன் பாருங்க..!

எழிலன்: ஏய், உன் மாமன் சிங்கம் டி..! நீ மட்டும் கொஞ்சம் அனுசரிச்சுப் போனா..! பத்தே மாசத்துல இரட்டை புள்ளப் பெத்துக்கலாம்.!

நட்சத்திரா: ரொம்பத் தான்…! தள்ளிப்போடா..!

அம்மா: டேய் மகனே இங்க வாடா..!

எழிலன்: அய்யோ..! நேரம் தெரியாம இவங்க வேற..! இரு டி வரேன்..!

என்ன மா..! எதுக்குக் கூப்பிட்ட..?!

அம்மா: எனக்கு எப்போ டா..! பேரன் பேத்திய பார்க்குற பாக்கியத்தை தரப் போற..?!

எழிலன்: (கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாம கூப்பிட்டுட்டு..! என் பொண்டாட்டியே எப்போயாவது தான் ஒத்துழைப்பா..! அதையும் கெடுத்து விட்டு பேச்சா பேசுற..! உன்ன அவ திட்டுறதுல தப்பே இல்லை மா..!)

அம்மா: என்னப்பா யோசிக்கிற..?!

எழிலன்: ஒன்னுமே இல்ல மா..! ஒன்னுமே இல்ல.! நீ முதல்ல குளிச்சியா..?! சாப்பிட வேண்டாமா..?!

அம்மா: போறேன் டா..!

(பாத்ரூமில்..)

அம்மா: ஐய்யய்யோ..! டேய்…எழிலா…!

எழிலன்: அதுக்குள்ள அடுத்தா..?! இப்போ என்னம்மா..?!

அம்மா: என்னடா இது..?! கருப்புக் கவரு..?!

எழிலன்: அவளுக்கு மாதவிடாய் அம்மா..! அதுக்குதான் வச்சிருக்கா..!

அம்மா: ஐயோ ராமா.! என் பையன எப்படிக் கெடுத்து வச்சிருக்கா..! சரியான வசியக்காரி..! எங்க டி இருக்க..?! இங்க வாடி..!

நட்சத்திரா: ஐயோ என்னால முடியல..! வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரம் கூட முழுசா ஆகல அதுக்குள்ள பத்து பதினைந்து தடவைக் கத்தி கத்தி..! எனக்கு தல வலிக்குது..!

அம்மா: வலிக்கும் டி வலிக்கும்..! என்ன கருமம் டி இது.!

நட்சத்திரா: பார்த்தா தெரியலையா..?!

அம்மா: கொஞ்சமாச்சும் கூச்சம் இருக்கா டி உனக்கு..?! என்ன பொம்பளை நீ..?! ஆம்பளைப் பாக்குற மாதிரி வச்சிருக்க..! இதோடயே சாமி ரூம் கதவு வேற திறக்குறியா..! என்னடி இதெல்லாம்..?!

நட்சத்திரா: நீங்க என்ன டைம் மெஷின்ல இருந்து தப்பிச்சு வந்த ஜந்துவா..!? சும்மா எல்லாத்துக்கும் ஏதாவது சொல்றீங்க..?! சாமியும் ஒரு பொண்ணு தானே..?! அந்த மூணு நாள் என்ன சாமி வந்து ரூமை விட்டு இறங்கி ஓடிப் போயிடுமா..?! கொஞ்சம் மாச்சும் அறிவோட நடந்துக் கோங்க..! மனசு சுத்தத்துகு முன்னாடி உடம்பு சுத்தம் எல்லாம் ஒன்னுமே இல்ல..!

அப்புறம் என்ன ஆம்பளப் பாக்குறமாரி வச்சிருக்கேன்னு சொல்றீங்க..! ஆம்பள தான்..! ஆனா அது என் புருஷன்.! அவரே தெரிஞ்சுகிட்டு; புரிஞ்சுக்கிட்டு ஒன்னுமே சொல்லாம இருக்காரு..! உங்களுக்கு என்னப் பிரச்சனை..?! எனக்கு இதுல ஒரு தப்பும் தெரியல..! உங்களுக்கு தப்பு இருந்தா உங்க பார்வைல தான் எதோ தப்பு..!

அம்மா: பார்த்தியா டா..! எப்படி பேச்சாளர் மாறி பக்கம் பக்கமா விதண்டாவாதம் பேசுறான்னு..! இதுக்குதான் இவள அடக்கி வைக்க சொன்னேன்..! இதான் உங்க அம்மா சொல்லிக் கொடுத்தாங்களா..?!

நட்சத்திரா: ஆமா.! எப்படி எல்லாம் வாதம் பண்ணா; எப்படி எல்லாம் விதண்டாவாதம் பண்ண முடியும்னு சொல்லிக் கொடுத்தாங்க..!

அம்மா: டேய் பேசாம இவள விட்டுட்டு வா..! இல்ல இவள அடிச்சி அம்மா வீட்டுக்கு அனுப்பு; அப்போ தான் புத்தி வரும்.!

நட்சத்திரா: இதே மாதிரி பேசிட்டு இருங்க..! ஒரு நாள் உங்களை அம்மி கல்லுல வச்சி அரைக்கிறேன் பாருங்க..!

எழிலன்: ரெண்டு பேரும் வாயை மூடிட்டு போறீங்களா..! காலையில இருந்து ஒரு மனுஷனுக்கு நிம்மதியே கிடையாது போல..! கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா… அங்க இரண்டு கொடுமை தலையை விரிச்சுப் போட்டு ஜிங்கு ஜிங்குன்னு ஆடுற மாதிரி ரெண்டு பேரும் ஆடுறீங்க..! என்னால முடியல..!

(தொடரும்..)


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.